தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை 17. ஏழிசையாய் இசைப்பயனாய் புகழ் பெற்ற ஏழை… “மன்மதலீலையை வென்றார் உண்டோ?” ….. அடடே வாங்க. என்னங்க பாட்டெல்லாம் பாடிக்கிட்டு ரொம்ப அமர்க்களமா வர்ரீங்க..என்ன வீட்டுல ஏதாவது விசேஷங்களா? இல்ல…வேற ஏதாவது சிறப்பா…ம்…ம்..”நீல கருணாகரனே நடராஜா நீல கண்டனே” …என்னங்க பாட்டா பாடிக்கிட்டே இருக்கீங்க..அட என்னாச்சு உங்களுக்கு… ஓ…ஓ…அவரு யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா?..என்ன அட..ஆமா… சரியாச் சொன்னீங்க எம்.கே.தியாகராஜ பாகவதர்தான். தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் –1) ஊக்கமூட்டும் என் ஆத்மா மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என்னைப் பற்றிச் சொல்ல நல்ல தருணம் இது ! எல்லோரும் நிமிர்ந்து நிற்போம் ! தெரிந்த வற்றை நான் உரித்தெடுப்பேன் ! ஆடவரை, மாதரை முன்னேற்ற வழிநடத்திச் செல்வேன் என்னோடு !. கடிகாரம் […]
சி. ஜெயபாரதன், கனடா பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ஓடினாள். தரையில் கிடந்த சிரட்டையை எடுத்துக் குடத்தி னுள்ளே விட்டு நீரை மொண்டு கடகட வெனக் குடித்தாள். அப்படியும் அவள் தாகம் தணியவில்லை. இரண்டாம் தடவை உள்ளே விடும்போது, அங்கு வந்த ஜானகி அதைப் பார்த்து விட்டாள். “அடி கழுதை! சிரட்டையிலேயா தண்ணீர் எடுத்துக் குடிக்கிறே!”, இந்து முதுகில் இரண்டு அடி விழுந்தது. “அப்புறம் வாய் […]
தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ? மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என் காலை வெளிச்சத்தைத் திரையிட்டு கண்களில் நீர்த் துளிகளைத் திறந்து விட்டது நம்மை ஒருங்கிணைத்த பூமாலையை நீ அறுத்து என்னைப் பிரிந்த போது ! மிச்சம் விட்டுச் சென்ற தெல்லாம் அர்த்த மற்றுப் போயின ! அமர்ந்தி ருக்கிறேன் நானிங்கு விழிகள் அப்பால் தூரத் […]
எஸ் சிவகுமார் பொய்யர்கள் பலகோடி போலி முகங்காட்டி ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா ! நானோ மெய்சொன்னேன் எந்நாளும் ; தவறென்றால் என்னை மேய்ப்பரே மன்னியும் ஐயா ! போவோர் வருவோரின் பாரம் சுமந்து இனியும் பாவிகள் ஆக்காதீர் ஐயா ! யார்க்கும் இளைப்பாறுதல் தந்தால் இன்னும் பல பாவங்கள் சளைக்காமல் செய்வார்கள் ஐயா ! இரண்டாயிரம் ஆண்டு ஆயாச்சு இன்னும் முரண்டுகள் பிடிக்காதீர் ஐயா ! அவர்க்கு இரண்டொன்று தண்டனைகள் தந்தால்தான் […]
வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர […]
ஜோதிர்லதா கிரிஜா புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களைப் பற்றி நான் சொல்லப் போவதை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ, அல்லது நான் பொய்களைப் புனைந்துரைப்பதாய் நினைத்து என் மீது ஐயுறுவீர்களோ, தெரியாது! எனினும், யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தக் கட்டுரையில் உள்ளவை யாவும் உண்மைகளே என்று என் எழுதுகோலின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதற்குப் பிறகும் சந்தேகப் படுபவர்களைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை! மிகச் சிறிய வயதில் சத்திய சாயி பாபா […]
———-வளவ.துரையன்———- ம. ராஜேந்திரன் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றி ஓய்விற்குப்பின் இலக்கியத் தாகத்தால் கணையாழிக்குப் புத்துயிர் ஊட்டி வருபவர். எட்டுக் கதைகள் கொண்ட தொகுப்பாக “சிற்பியின் விதி” வெளிவந்துள்ளது. மனிதனையும் நாயையும் வைத்து முதல் கதை “கடவுளும் டைகர்சாமியும்” பின்னப்பட்டுள்ளது. கடவுள் ஒருநாள் மனிதனை நாயாகவும் அம்மனிதனின் நாயை அவனாகாவும் மாற்றுகிறார். ஆனால் நாய் மனிதனாக இருக்க விரும்பவில்லை. மீண்டும் நாயாகவே விரும்புகிறது. மனித வாழ்வும் நாயின் வாழ்வும் ஒன்றாக இருக்கிறது என்றே நாய் […]
முதலைக்கு நீரில் தான் அத்தனை பலமும் , வெளியே எடுத்துப்போட்டால் என்ன செய்வதெனத்தெரியாது அலைந்துகொண்டிருக்கும், சொறிநாய்கள் கூடச்சீண்டிப்பார்க்கும். கடல் கடந்து போய் வணிகம் செய்தது போய் இப்போது கடல் கடந்து போய் பணி செய்யவேண்டியிருக்கிறது. ஒட்டுப்பொறுக்கி சமுகத்திலிருந்து எப்போது தான் விடுதலை கிடைக்கும் தமிழனுக்கு ? ஆர்ப்பரிக்கும் கடல் , வலையைத்தொட்டாலே கொன்று போடும் சிங்களவன். தமிழ்நாடு இலங்கைக்கு அருகில் இருப்பதால் தான் இத்தனை பிரச்னைகளும்.கொஞ்சம் நகர்த்தி ஆந்திரா பக்கம் தள்ளிக்கொண்டு போய்விட்டால் சூடுபடுவதாவது குறையும். […]
பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 30 சந்தனின் பெரிய மாளிகையின் முன்பக்கம் விரிந்த மைதானம் போல் இருந்தது. அதன் வலப்புறத்தில் ஹோம குண்டங்களில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. நெய்யையும் , குச்சிகளையும் ஹோம குண்டத் தீயில் இட்டு அந்தணர்கள் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். புத்தரும் அவரது சீடர்களும் மாளிகை முன் வாயிலின் வழியே நுழைந்த போது அவர்கள் பார்வையில் படும்படி ஹோம குண்டங்களும் அவர்களுக்குப் பின் பக்கம் தரையில் ஆணி அடித்துக் கயிற்றில் பிணைத்த […]