ஸிந்துஜா மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில் வெவ்வேறு செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக இருவரின் பெற்றோரும் சேர்ந்து ஒரே ஆட்டோவை அமர்த்தியிருந் தார்கள். ஸ்கூல் விடுவதற்கு ஐந்து நிமிஷம் முன் அல்லது பின் ஆட்டோக்காரர் சையது வந்து விடுவார். இன்று ஸ்கூல் விட்டுக் கால்மணிக்கும் மேல் ஆகப் போகிறது. இன்னும் அவர் வரவில்லை. மஞ்சுவுக்குப் பசியில் உயிர் போவது போலிருந்தது. இன்று மத்தி யானத்துக்கு சப்பாத்தி சப்ஜி பண்ணி டிபன் பாக்சில் அவன் […]
கு. அழகர்சாமி நீர் மலி தடாகத்தில் ஆம்பல் இதழவிழ்ந்து மலர்ந்ததாய் அந்தியில் இசை அலர்ந்து அறைக்குள்- அறை நடுவில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் ஒளி மேனி சுடர்கிறது மெல்ல ஒளி இருளை வாய் மெல்ல- மின்விசிறியின் மென்காற்றின் உதடுகள் முத்தமிட ஆடும் சுடரோடு ஆடும் படமெடுத்து இசைப்போரின் அரவு நிழல்கள்- நிழல்கள் ஒன்றையொன்று நெட்டித் தள்ள எது எவரின் நிழல்? எது எவரின் நிழலில்லை? எது எவரின் நிழலில்லாத நிழல்? சுழலும் மின்விசிறிக் காற்றில் சுழலும் நிழல்களில் […]
உஷாதீபன் ushaadeepan@gmail.com சார்…சார்…விட்ருங்க…. – சத்தமாகவே சொன்னார் அவர். பதறிப் போய் ஓடி அந்தப் பையனைத் தூக்கப் போனதைத்தான் அப்படித் தடுத்தார். அதற்குள் அந்தப் பையனாகவே எழுந்து, வண்டியையும் தூக்கி நிறுத்தி, சட்டென்று கையிலும், காலிலும் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு, திரும்பவும் வண்டியை உயிர்ப்பித்து, டுர்ர்ர்….என்று சீறிக்கொண்டு கிளம்பி விட்டான். அப்போதும் இடது கையில் அவனது கைபேசி இருந்தது. இப்பயும் என்ன வேகம்? எப்படிக் க்ளட்ச்சைப் பிடிப்பான் எப்படிப் பாதுகாப்பாய் ஓட்டுவான் என்று […]