முனி

This entry is part 2 of 2 in the series 7 ஜூலை 2024

யாருமற்ற பெருவெளியில்  சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம்  காலதேவனின் சாட்சியாக.  வரும்போகும் தலைமுறைக்கு  குலதெய்வம் குடியிருந்த  ஊர்க்கதைகள் ஏராளம். சாராயம்,சுருட்டு பொங்க சட்டி, பொரியும் தான் முனிக்கு முடிகொடுத்து  ஊர் திரும்பும் ஆசாமிகள்.  மரத்தசுத்தி மாடுமேய்கும்  பெரிசுகளுக்கு கண் எல்லாம் படையல் மேல்தான்.  சாராய பாட்டில் தேடி  கிடாய் கறிக்கும்  பருந்தாய் சுற்றும்  பரிதாபமாய்!   – ஜெயானந்தன் 

பத்துப் பொருத்தம்

This entry is part 1 of 2 in the series 7 ஜூலை 2024

விஜயலட்சுமி கண்ணன் கலாவுக்கு வயது இருபது நிறைந்து விட்டது.பி.காம் முடித்து நல்ல வங்கி வேலையும் கிடைத்தது. கலாவின் தந்தை ரவிக்கு ஜோசியம், ஜாதகம் இதில்  எல்லாம் நம்பிக்கை அதிகம்.கலாவின் தாய் சுஜாதாவுக்கு இதில் சிறிதும் நம்பிக்கை கிடையாது. “ஆமா,, எங்கப்பாவும் ஜாதகமும் கையுமாக அலைந்து ஒரு ஜோசியர் பத்துப் பொருத்தத்தில் எட்டு பொருத்தமும் அமைந்த ஜாதகம் என்று சொன்னதனால் தானே ரவிக்கு கழுத்தை நீட்டினாள். என்னத்தை சாதிக்க முடிந்தது? காலம் ஓடியது. அதோடு நாமும் ஓடியது தான் […]