திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்

This entry is part 30 of 41 in the series 10 ஜூன் 2012

  திலக பாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு, அதற்கான இன்றைய தமிழ்ச் சூழலின் அர்த்தங்களையும் தானே தந்து படித்துக்கொள்ளும் இன்றைய தமிழ் வாசக மனம். பெண் கவிஞர் என்றால் பெண்ணீயக் கவிஞர் என்று படிக்கப் படும். பெண்ணீயக் கவிஞர் என்றால் அதற்கான குண வரையரைகள் தரப்பட்டு தயாராக […]

தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்

This entry is part 29 of 41 in the series 10 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கடந்த இரவை நான் மீட்டு வருவ தெப்படி ? வீணாய் விழிகள் ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ? இந்த அங்கியை அணிவாய் என் நண்பனே ! இந்தப் பூமாலை பாரமாய்த் தெரியும் ! ஏகாந்தியாய்க் காத்திருக்கேன் படுக்கையில், இம்மாதிரி இரவு கடந்து செல்லட்டும் ! நான் வந்திப்பது யமுனா நதிக் கரைக்கு நண்பனை தேடி ! இன்னும் வந்திலன் அவன் ! […]

முள்வெளி அத்தியாயம் -12

This entry is part 28 of 41 in the series 10 ஜூன் 2012

‘செக்யூரிட்டி கேமரா’ வழியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் இளம் பெண்ணை லதா ‘கம்ப்யூட்டரி’ல் பார்த்தாள். இருபது இருபத்தி இரண்டு வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. தனது மண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் ஒருவேளை இதே வயதுப் பெண்ணோ பையனோ ஒரு வாரிசாக வந்திருக்கலாம். தோழியின் மகள் இவள். இப்படிப் பல இளைஞர்களைப் பார்க்கத்தான் நேரிடுகிறது. ஏதோ ஒரு சமயம் இது போன்ற ஆதங்கம் கவிகிறது. சில நிமிடங்களில் சுதாரித்துக் கொள்வதும் பழக்கமாகி விட்டது. ஒப்பனை அறைக்குச் சென்று கண்களில் துளிர்திருந்த […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)

This entry is part 27 of 41 in the series 10 ஜூன் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com   வறுமையிற் செம்மை போற்றிய கவிஞர்கள் வறுமை மிகுந்த தமது வாழ்க்கையிலும் செம்மாந்த வாழ்க்கையினை இரு கவிஞர்களும் வாழ்ந்தனர். வறுமையின்றி மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பி அதனைத் தமது படைப்புகளில் பதிவு செய்தனர். தாம் சார்ந்த சமுதாயம் பசியின்றி, நோயின்றி வளமான வாழ்க்கையினை வாழ வேண்டும் என்று மகா கவியும் மக்கள் கவியும் விரும்பினர். நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் அகன்று […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)

This entry is part 26 of 41 in the series 10 ஜூன் 2012

++++++++++++++++++++++ காதலின் முணுமுணுப்பு ++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

நெஞ்சு பொறுக்குதில்லையே

This entry is part 25 of 41 in the series 10 ஜூன் 2012

ஆக்கம்: நடராஜா கண்ணப்பு  லண்டன் “திருப்பி அனுப்பாதே ” சுலோகம் தாங்கியவர்கள் “ச்சிப்போல்” விமான நிலைய தடுப்பு முகாம் பின்பக்க தெருவில் நிறைந்து விட்டார்கள். முதலாவது மேல் மாடி யன்னலில் தெரிந்த குழந்தை கையிலேந்திய அந்தச் சோகமான தாயின் முகத்தைப் பார்த்ததும். “அவையளைத் தான் திருப்பி அனுப்பப் போறாங்களாம்” பிள்ளையோடு நிக்கும் அந்த அனுப்பப் படப் போகும் பெண்ணை அடையாளம் கண்டுவிட்டார் மூர்த்தி “என்ட மடியில் தவழ்ந்த பிள்ளை இப்ப இங்க இந்தச் சிறைக்குள்ள.” மனம் உருகி […]

அன்பின் தீக்கொடி

This entry is part 24 of 41 in the series 10 ஜூன் 2012

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய் விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி ஓயாமல் அலைகின்றேன்-நீயோ மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய் இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு … செ.சுஜாதா, பெங்களூர்.

ஜுமானா ஜுனைட் கவிதைகள்

This entry is part 23 of 41 in the series 10 ஜூன் 2012

1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?  யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை பேசிடும் உதட்டளவில் உறைந்திடுமோ இல்லை கேட்டிடும் இதயமெல்லாம் சென்று குடியிருந்திடுமோ… ஆறு குளம் மலைகளைத் தான் அடைந்திடுமா அண்டவெளி தாண்டி வார்த்தை சென்றிடுமா… இந்த வளி மண்டலத்தை நிரப்பிடுமா… இதுகாறும் காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..? […]

2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்

This entry is part 22 of 41 in the series 10 ஜூன் 2012

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் கொண்டது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயு கோளமாய்க் கவசம் பூண்டது ! பரிதி சூழ்வெளி சூடேற்றி உலோகத்தை உருக்கிடும் உஷ்ணம் ! ஆமை வேகத்தில் சுற்றும் தன்னச்சில் சுக்கிரன் ! ஆனால் அதன் வாயு மண்டலம் அசுர வேகத்தில் சுற்றும் ! பூமிக்குப் பிறை நிலா போல் குறை […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16

This entry is part 21 of 41 in the series 10 ஜூன் 2012

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் நினைவலைகள் 60 ஆண்டுகளுக்குமுன் செல்கின்றது. சுதந்திரம் பெற்றவுடன் என்ன மகிழ்ச்சி ! என்ன பெருமை. திருவிழாக்களின் உற்சாகம். புதிய ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதுபோல் புதிது புதிதாக திட்டங்கள் வகுத்து, செயலாற்றத் தொடங்கினோம். கட்டப்பட்ட அணைக்கட்டுக்களின் காலத்தைப் பாருங்கள். ஆட்சிகள் மாற்றத்தில் அணைகள் இடிக்கப்படவில்லை. பராமரிப்பும் நிற்கவில்லை. மின்வசதியில்லா கிராமங்களைப் பார்த்துப் பார்த்து இணைப்புகள் கொடுக்கப்பட்டன (இன்று இணைப்பு இருந்தும் கரண்ட் வரவில்லையே என்று இருக்கின்றதா? இதற்கு […]