துருக்கி பயணம்-5

This entry is part 20 of 41 in the series 10 ஜூன் 2012

துருக்கி பயணம்-5 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-30 இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட விருந்தோம்.  இப்பிரதேச மெங்கும்  பார்வைக்கும், தெரிந்து கொள்ளவும் கலைகூறுகளும் கல்விக்கூறுகளும் திகட்டும் அளவிற்கும் இருக்கின்றன,  வருடம் முழுக்க தங்கி பார்த்துவரலாம். கடந்தவாரம் எழுதியதுபோன்று  வரலாறு, புவியியல், பண்பாடு மூன்றும் தமது தழும்பை ஆழமாகப் பதிவுசெய்திருப்பதால் துருக்கிக்கு பயணிக்கும் மேலேகுறிப்பிட்டுள்ள துறை ஆர்வலர்கள் எவரும் இப்பிரதேசத்தைத் தவிர்க்கக்கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றனர். பாரசீகமக்கள், அஸ்ஸீரியன் மக்கள், கிரேக்க […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29

This entry is part 19 of 41 in the series 10 ஜூன் 2012

32. வெகு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் மதிற்சுவருக்கு மறுபக்கம் நள்ளிரவில் தொலைந்த ஆட்டைத்தேடி அலைந்ததும், செண்பகத்துடன் மூன்று காவலர்கள் களையும் பூசாரிஒருவனையும் காணநேர்ந்ததை நினைவு கூர்ந்தான். அவர்கள் செட்டிக்குள திட்டிவாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்திருக்கவேண்டும். தவிர காவலர்களின் அனுமதியோடு உள்ளே நுழைந்திருக்கிறார்களெனில் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள மனிதர்களின் சகாயமின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரம், செல்வாக்கு என்றுவரும்போது  கள்ளமும் சூதும்  தவறாமல் உள்ளே நுழைந்துவிடும் போலிருக்கிறது. பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கேன் என்றும் கார்மேகம் நினைப்பதுண்டு. பிரதானி நந்தகோபால்பிள்ளை […]

ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 18 of 41 in the series 10 ஜூன் 2012

((1) அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான். “மின்ன‌ல்” (2) ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன். க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை? “க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்” (3) விஞ்ஞானிக‌ள் கோமாளிகள். நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள். “கொலுசுக‌ள்” (4) காதலின் வெற்றி என்றாலே காதலின் தோல்வியும் அது தான். “ரோஜாவின் முள்” (5) காதலில் தோல்வியுற்ற தண்ணீர்த்துளி கீழே விழுந்து சிதறி.. ஏழுவர்ண ரத்தம். “குற்றாலம்

ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 17 of 41 in the series 10 ஜூன் 2012

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி. நாத‌ஸ்வ‌ர‌ம். எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? “மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே” அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும் த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்”என்ன‌ கோத்ர‌ம்?” கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை. ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்? அவ‌ள் போட‌ கோல‌ம். ப‌வுர்ண‌மி மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து. அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள். ============================== ============ருத்ரா

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5

This entry is part 16 of 41 in the series 10 ஜூன் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

பாரதி

This entry is part 15 of 41 in the series 10 ஜூன் 2012

  மராத்தி மூலம் – விஜய் டெண்டுல்கர் தமிழில் – ராகவன் தம்பி ஓவியங்கள் : வெ.சந்திரமோகன்   கதை மாந்தர்கள் 1. பாரதி 2. பீர்பால் 3. அக்பர் 4. வீர சிவாஜி 5. மிக்கி மவுஸ் 6. நிலா 7. கழைக்கூத்தாடி 8. கோமாளி 9. குதிரை 10. தேவதை 1 11. தேவதை 2 பாரதி (பாரதி வீடு, வீட்டுக்கான மேடை அமைப்பு, மாலை நேரம், பாரதி ஆண்பிள்ளைக்கான உடுப்புக்களை உடுத்தியிருக்கிறாள், வீட்டில் […]

இதுவேறு நந்தன் கதா..

This entry is part 14 of 41 in the series 10 ஜூன் 2012

தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது. அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட முடியவில்லை. கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் அறிந்த பாடத்திட்டங்களில் இடம் பெறாத எத்தனையோவரலாற்று நிகழ்வுகளை அறிந்துக் கொள்ளும் ஒரு தேடலில் ஹோலோகொஸ்ட் என்ற சொல்லை அந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரமான அதிர்ச்சி தரும் […]

நினைவுகளின் சுவட்டில் – 88

This entry is part 12 of 41 in the series 10 ஜூன் 2012

வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் நான் மீன் சாப்பிட ஆரம்பித்து, பின் எல்லா மீன் வகைகளையும் ருசித்து அவற்றின் […]

தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்

This entry is part 11 of 41 in the series 10 ஜூன் 2012

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, தற்கால சந்ததியினர் வலுவிழந்து கொண்டே போகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். டஜன் கணக்கில் பிள்ளை பெற்றவர்கள் பலமுடன் இருக்க, முதல் குழந்தைக்கே பற்பல சிகிச்சைகள் செய்யும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டனர். கருத்சிதைவும் சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு குழந்தை அல்லது அதிக பட்சம் இரு குழந்தைகள் மட்டுமே போதும் என்ற மனோநிலை வந்துவிட்டது. ஒரு குழந்தை என்றால், அது குடும்பத்தினரைப் பிற்காலத்தில் பாதுகாக்கும் ஆண் பிள்ளையாக […]

ஊமைக் காயங்கள்…..!

This entry is part 10 of 41 in the series 10 ஜூன் 2012

பாட்டி….பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி…அம்மா…பார்த்துட்டு வரச் சொன்னா…அறைக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் தனது பாட்டியின் அருகில் வந்து பார்க்கவும், தன் பேத்தி பூரணியின் குரல் கேட்டு விழித்த அகிலா… அட…..பூரணிக் குட்டியா….வா..வா…..வா….என்று ஆசையோடு அழைக்க… அப்போ….நீ முழிச்சிண்டு தானே இருக்க….அம்மா…என்னைப் பார்த்துட்டு வரச்சொன்னா….என்று பேத்தி தனது இளம்குரலில் சொல்ல… ஆமாம்டி தங்கம்….பாட்டி முழிச்சுண்டு தான் இருக்கேன்னு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வா….எங்கே….இங்கே பாட்டி பக்கத்துல…வா… உன்னைப் […]