பி ஆர் ஹரன் பசுக்கள் வழக்கில் யானைகளையும் சேர்த்த உயர் நீதிமன்றம் தமிழகத்துக் கோவில்களில் உள்ள கோசாலைகளில், பசுக்கள் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும், நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து போவதும், காணாமல் போவதும் தொடர்கதையாக இருந்த நிலையில், மனவருத்தமுற்ற சென்னையைச் சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலரும் எழுத்தாளருமான திருமதி ராதாராஜன் உயர்நீதிமன்றத்தில் 2013ம்ஆண்டு பொதுநல வழக்கு(WP 28793 & 28794 of 2013) ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தன் மனுவில், “தமிழகத்தில் கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் […]
அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் உரசிக் கொண்டு போன ஒரு வால் நட்சத்திரத்தின் தாக்குதலால் பூமியின் சுழற்சி அச்சியினுடைய கோணம் லேசாக மாறியது.. தாக்குதலின் விளைவாய் உலகில் கோடிக்கணக்கான மக்கள் சில மணி நேரங்களில் மடிந்து போனார்கள். பேரழிவு. இந்த இயற்கை வலிமையானதும், கொடைத்தன்மை கொண்டதுவும் மட்டுமில்லை, கொடூரமானதும் […]
தேவராசா கஜீபன் தமிழ் சிறப்புத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தி.ஞானசேகரன் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்துள்ளார். சிறுகதைகள் நாவல் என இவரது படைப்புக்கள் இன்றும் தமிழ் உலகில் நடை பயில்கின்றன. புன்னாலைக்கட்டுவானை பிறப்பிடமாகக்கொண்ட ஞானசேகரன் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபாடு கொண்டவராகவே திகழ்வதனை அவதானிக்கலாம். வைத்தியராக கடமையாற்றிய இவர் எழுத்தாற்றலும் கைவரப்பெற்றவராவார். சிறந்த படைப்புகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் இலக்கிய இதழான ஞானம் சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார். சிறுகதை மூலம் எழுத்துலகில் […]
நண்பர்களே, எனது மூன்றாவது அணுமின்சக்தி தமிழ் நூலை, தாரிணி பதிப்பக அதிபர் வையவன் வெளியிட்டுள்ளார், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து திண்ணையில் வந்த அணுமின்சக்தி நிறைபாடுகள், குறைபாடுகள் பற்றியத் தொகுப்பே இப்போது அடுத்தோர் நூலாய் வெளி வருகிறது. – நூல் பெயர் : அணுசக்தியே இனி ஆதார சக்தி – பக்கங்கள் : 472 – விலை : 450 ரூ. -வெளியிடுவோர் : வையவன் […]
ரஸஞானி – மெல்பன் ” இலங்கையில் போருக்குப்பின்னர் தோன்றியுள்ள இலக்கியங்கள் மனச்சாட்சியின் குரலாக ஒலிக்கின்றன.” நான்கு அமர்வுகளில் நடைபெற்ற கருத்துக்களம் ” போருக்குப்பின்னரான இலக்கியங்கள் மக்களின் மனச்சாட்சியைத் தூண்டி போரினால் சீரழிந்த நாட்டை, சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்து கின்றது. நமது நாட்டிலும் போருக்குப்பின்னரான பாதிப்புகள், அவல நிலைகள் குறித்த இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது சுய தணிக்கைகள் எதுவுமின்றி தமது படைப்புகளை எழுதும் சூழ்நிலை அங்கு உள்ளது. போரில் […]
வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம் வந்தது உள்ளேயிருந்து. இதயத்துடிப்பின் ஒலியில் கேட்டது தானே முதல் மொழி. அதன் சொல் ஜனனம் என்றால் அதன் அர்த்தம் மரணம் என்றார்கள். மனிதனா?இறைவனா? அது “மெய் பொய்”த்துகளின் குவாண்டம் மீனிங். அன்னிஹிலேஷனும் அது தான். கிரியேஷனும் அது தான். அழித்து அழித்து ஆக்குவதே அணு உலைக்கூடம். ஃபீல்டு எனும் […]
சேயோன் யாழ்வேந்தன் தன் ஆளுகைக்குள் மழைக்காலத்தை ஒருபோதும் அனுமதிக்காத வைபரைப் போல் உறுதியாக இருந்த இந்த கோடைக்காலத்தை சற்றே ஊடுருவிய இந்தக் குட்டி மழைக்காலம் ஊடிய காதலி அனுப்பிய குறுஞ்செய்தி போன்றது பிணங்கிய மனைவி கூடுதல் ருசியுடன் சமைத்தனுப்பிய மதிய உணவு போன்றது சண்டையிட்ட மகவு தன் சிறு கரங்களைக் கூப்பி உங்களுக்காகவும் பிரார்த்தித்துக்கொள்வது போன்றது. (வைபர்- wiper) seyonyazhvaendhan@gmail.com
ரகுவீரர் எழுதிய ‘ஒரு கல் சிலையாகிறது’ கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின் அயரா வைணவ உழைப்பு போற்றுதலுக்குரியது கூடவே தமிழ் மொழி மீது அவர் கொண்ட காதல் வாசகனை நெகிழ வைக்கிறது. அட்டைப்பட ஓவியம் அஜந்தா குகை அழகு ராமர் சிலை. நூலுக்கு வலு சேர்க்கிறது. நாராயணியமும் […]
ப.கண்ணன்சேகர் நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம் நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்! வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை, வலயம் கடலுக்கு வண்ணப்பேரென விளங்கிடும்! பாரினை வளமாக்கி பல்லுயிர் பெருகிட படர்ந்திடும் முகிலென பருவமழை தந்திடும்! மாரிவளம் பொழிந்திட மகிழ்ந்திடும் உயிரெலாம் மாசினை செய்திட மாகடல் பொங்கிடும்! அலைகடல் தந்திடும் அத்தனை செல்வமும் அகிலத்தில் அனைவரின் அடிப்படை உரிமையே! வலைவீசி வாழ்வோரின் வடிக்கின்ற கண்ணீரும் வாடிக்கை யென்றானால் வையத்தில் மடமையே! கொலைகார கூட்டமது கோடிட்டு கடலிலே குற்றமில்லா விலங்கிடும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/22866-comet-ison-break-up-pose-a-threat-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ ++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டில் குஞ்சு பொரித்து பரிதி மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையத்தில் சோதித்தார் ! இரு தலை வால்மீன் முறிவும் […]