ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிறந்து தான் வாழ்க்கையை படிக்க வேண்டும். இறந்து தான் வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை. அடுத்தவகுப்பு துவங்கும்போது புத்தகமும் புதிது. மாணவனும் புதிது. ஆசிரியர் மட்டும் அதே ஜென். ஜென் ஒரு புதிர். ஜென்னை அவிழ்ப்பதும் இன்னொரு புதிர். மறு ஜென்மம் உண்டு. […]
கோமதி சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி விட்டுக்கொடுப்பதாக திரு மணத்திற்கு ஒப்புதல்கொடுத்தனர். எப்படியோ, அடுத்தமாதத்தில் திருநீர் மலையில் சிக்கனமாக மணமுடிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. அன்று, தன்னைக் காக்கவைத்துவிட்டு நேரங்கழித்து வந்த சைத்ராவுடன் சைதன்யன் பேசவில்லை. கோபமாக […]
தலையை உடைத்து கொண்டிருந்த பிரச்சனை, தலை மேல் ஆடிக் கொண்டிருந்த கத்தி. கிருஸ்ணன் போல தேரை அழுத்தி தலையையும், தலைப்பாகையும் சேர்த்தே காப்பாற்றினாள் மிஸ். எலிசா கில்பெர்ட். அப்போது எலிசாவை அப்படியே பின்புறமாய் சென்று முத்தமிட்டு அழுத்தி ` என்ன சூப்பர் சொல்யூசன், கிளாசிக் ப்ரெசெண்டேசன் ` என்று சொல்லியவாறே அழுத்தி கட்டி கொள்ள வேண்டுமென்று தோன்றியது. எலிசா – எங்கள் நிறுவனம் அவுட் சோர்ச் செய்திருந்த நிறுவனத்தின் ஒரு பார்ட்னர். தேவைக்கு அதிகமாக பேசுபவள். தன் […]
ஜாசின் ஏ.தேவராஜன் பட்டணத்தையொட்டியுள்ள சேவல் இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டிருக்கிறது. “ இப்ப எந்திரிக்கப் போறியா இல்ல… தொடப்பக்கட்டையக் கொண்டாரவா!” “ எந்திரிக்கிறேன்னு சொல்றேன்ல…! யேம்மா காலங்காத்தாலே நாய் மாரி கத்திக்கிட்டிருக்க… நிம்மதியா தூங்கக்கூட முடியாதா?” “ ஓ அம்மாவையே நாயின்னு சொல்றீயா..! சொல்லுவடா சொல்லுவெ… சீனங்கடையில மங்கு கலுவி வேளா வேளைக்கிக் கொட்டுறேன்லெ… சொல்லுவெடா… நல்லா சொல்லு… இவ்வள நாளு ஒங்கப்பாதான் சொல்லிக்கிட்டிருந்திச்சு… இப்ப நீயுமா?” “பெசாம வாயெ மூடுமா ! எப்பப் பாத்தாலும் கிறுக்குப் புடிச்ச […]
மார்வி சிர்மத் பெண்கள் படிப்பதற்கு எதிராக ஆணை பிறப்பித்த தாலிபான் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியுடன் நின்று, பெண்கள் படிக்க உதவ வேண்டும் என்று உறுதியுடன் அறிவித்த மலாலய் யூசுப்ஜாய் என்ற பாகிஸ்தானிய பெண்ணே நாம் அனைவரும் பார்க்க விரும்பும் பாகிஸ்தானின் முகம். ஒரு பக்கம் பெருமையும் மறுபக்கம் மறுதலிப்புமாக நாம் ரிங்கிள் குமாரியை உதாசீனம் செய்து மலாலய் யூசுப்ஜாயை பார்க்க விரும்புகிறோம். ரிங்கிள் குமாரி 19 வயது சிந்தி இந்து பெண். இவர் கடத்தப்பட்டு கட்டாயமாக […]
திடீரென இடீஇடியெனச் சிரித்தார், கவிஞர். அதுவரை நெற்றியில் கோடுகள் விழ யோசனையில் ஆழ்ந்திருந்தவர் திடுமென அப்படிச் சிரித்ததும் எருக்கூர் நீலகண்டனும் கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணனும் திடுக்கிட்டுப் போனார்கள். அறையில் கவிஞரைத் தவிர்த்து அவர்கள் இருவர் மட்டுமே இருந்தார்கள். மூன்றுபேர் சேர்ந்துட்டாலே அதுக்குக் கூட்டம்னு தான் பேரு. அதுவும் இந்த மாதிரி விஷயங்களுக்கு அவசியமான அளவுக்கு ஆட்கள் இருந்தாப் போதும் என்று சொல்லியிருந்தார், கவிஞர். பிரம்மச்சாரி, நீ வா என்று நீலகண்டனையும் சங்கரா, நீயும் வா. ஆரம்பிப்போம் […]
அன்புடையீர். வணக்கம். ஈழத்து மறைந்த அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின்தொகுப்புதயாராகிறது..நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மறைந்த அறிஞர்களைப்பற்றி 4/5 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி உடன் அனுப்புங்கள். அனுப்பவேண்டியமுகவரி: R.Mahendran,34 Redriffe Road, Plaistow,London,E13 0JX. மின்னஞ்சல்:mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்
1. நானொரு கப்பற்படை மாலுமி எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள் பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன் என்னை நீங்கள் நம்பாவிடில் எனது ஆடைகளைப் பாருங்கள் உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லையென்பதால் நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர். முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம் தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து கதவுகளுக்கு வெளியே உள்ளோம் அத்தோடு இன்னுமொருவர் கூறினார் அவர்களை நம்பாதீர் அவர்கள் […]
தமிழில் ராகவன் தம்பி அனைவரின் முகங்களும் வெளுத்திருந்தன. வீட்டில் அன்று சமையல் எதுவும் நடக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்ட ஆறாவது நாள் அது. குழந்தைகள் வீட்டை அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் வீடு முழுதும் அலைந்து திரிந்தார்கள். சிறுபிள்ளைத்தனமான சண்டைகள், கூச்சல், ஆரவாரம் என ரகளைகளில் ஈடுபட்டும் அங்கங்கு தாவித் தாவி குட்டிக்கரணங்கள் அடித்தும் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். பதினைந்து ஆகஸ்டு வந்து போனதே தெரியாதது போலக் குதித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு […]
தங்கமே குறி ஒரு திருடன் ஒரு சந்தையில் இங்குமங்கும் யாரிடம் திருடலாம் என்று பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான். கூட்டம் கூட்டமாக மக்கள் இங்குமங்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள். அவனால் வியாபாரக் கூடத்திற்கு செல்லும் வழிதோறும் மக்கள் மக்கள் என்று மக்களைத் தவிர வேறெதையும் காண முடியாதிருந்தது. வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ணப் பழங்கள், பொருட்கள் அவனது கண்களைப் பறித்தன. விதவிதமான அழகு மிக்க ஆடைகளும் கம்பளங்களும் அவனை கிறங்க வைத்தன. மக்களது கவனத்தை ஈர்க்க […]