ஒளியூட்டப் போகிறோமா எரியூட்டப் போகிறோமா என அறிவதில்லை பற்றவைக்கப்படும் தீக்குச்சிகள்.. ************************************************** புழுவைப் போல உள்நுழைந்து பத்து மாத உறக்கம்.. கொடி வழி உணவு கூட்டுக்குள்… இறக்கைகளைப் போல கை கால்கள் முளைத்ததும் உந்திப் பறந்தது கூடை விட்டு .. குழந்தையாய்.. ***************************************************** உடல் எனும் உடைக்குள் கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி.. ***************************************************** பொம்மைப் பாசம்.:- *************************** அவள் மடியமர்ந்து போகேமான் பார்த்ததும் அங்கிள் சிப்ஸ்., நூடுல்ஸ் உதட்டில் ருசித்ததும் ., தூங்கும் போதும் கால் மேல் […]
விரல்களின் வேகத்தில் சுண்டலின் விசையில் நம்பிக்கைகள் கைகள் சுழற்றும் சோளிகளின் சாகசங்களை நம்பி. முழங்கையை மடக்கி விரித்து குலுக்கிப் போடும் சோளியில் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் கிடப்பதாகிறது கனவு வாழ்வு. மீண்டும் மீண்டும் உருளும் சோளிக்குள் முழித்த பார்வைகளின் முணுமுணுக்கும் வாக்குகள் முத்தமிடும் முள்முடிகளாய். பணம் ஒரு சோளி பாசம் ஒரு சோளி குழந்தை ஒரு சோளி பாய்ந்து புரண்டு பன்னிரண்டு சோளி சொல்லும் பகடைக்குள் திடுக்கிடுகிறது எதிர்பார்ப்பு. வீழ்பவன் மனிதன் எழுபவன் வீரன் இல்லாததும் இயலாததும் ஏதுமில்லையென்றாலும் […]
சருகாகி உதிரும் இலைக்கு மெத்தை விரித்தது பூமி காற்று அதை கைப்பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தது கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி வேர்களின் பாடலை ஓயாமல் பாடியது பூக்களின் நறுமணத்தை முகர்ந்த வண்டுகள் தேன் குடித்து ரீங்காரமிட்டுச் சென்றன மொட்டுகள் இதழ்விரித்து வானம் ஆடை உடுத்திக் கொள்ளாததைப் பார்த்துச் சிரித்தது அக்கா குருவி கீதம் பாடி வசந்தகாலத்தை அழைத்தது திடீரென மழை பெய்து தேகத்தை நனைத்தது புல்லாங்குழலின் துளைகள் வழியே எப்படி புது நாதம் பிறக்குது […]
தமிழ் வாசகனொருவனுக்கு ‘என்பெயர் சிவப்பு’ ஒரு மொழிபெயர்ப்பு நாவலென்றவகையில் இருவகை வாசிப்பு சாத்தியங்களை ஏற்படுத்தி தருகிறது: ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்பதான வாசிப்பு சாத்தியமென்பதொன்று, அதனை தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியின் ‘என் பெயர் சிவப்பு’ என்பது மற்றொன்று.. நல்லதொருவாசகன் அவனது விருப்பு வெறுப்புகளை இனங்காணமுடிந்தால் சிறந்த விமர்சகனாக வரமுடியும். ஒரு படைப்பாளி நல்லதொரு வாசகனாக இருக்கமுடியும் ஆனால் சிறந்ததொரு விமர்சகனாக இருக்கமுடியுமென்ற கட்டாயமில்லை. வழக்கறிஞனே நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொல்லமுனைவதற்கு ஒப்பானது. படைப்பாளியால் […]
கண்தொட்டவரையில் நீண்டுகிடக்கும் இந்த இரவின் பாலத்தில் நத்தையின் முதுகேறி ஊர்கின்றன நிமிடங்கள் தண்டவாளங்களை வெறிக்கிறது பூமிதின்ற நிலவு கிளையசைவிற்கு எந்த வாகனமும் நிற்கவில்லை ஒலியோடு ஒளிவெள்ளமென சகலமும் வழிந்தோடுகிறது ஒரு பெரும்பள்ளத்தில் சாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும் இச்சிறுவெளியின் நிறமென்று அழியும் அலைந்து திரியும் பறவைகள் மறைந்து போகுமொரு கணத்தில் நிறமுதிர்ந்து அற்றுப் போகுமது நீடிக்கக் கடவதாக அத்தேவகணங்கள்.
என்னை தரதரவென இழுத்துச் சென்று கடலுக்குள் மூழ்கடித்த இஸ்ராயீல் கரைதிரும்புவதற்குள் ஒரு கெண்டைமீன்குஞ்சாய் நீந்திக் கொண்டிருந்தேன். கடலுக்குள் ஏதுமறியா உலகம் விரிந்திருந்தது. செய்வதறியாது திகைப்புற்ற இஸ்ராயீல் திமிங்கலத்தின் மீதேறி துரத்தினார். எனது துரித நீந்துதலை கண்டறியமுடியாத துக்கம் அவருக்கிருந்தது. கடலை வற்றச் செய்வதற்கு துஆ கேட்டபடி இருந்தார். ஆயிரமாயிரம் அதிசயங்களைக் கொண்டதொருகடல் நிலை கொள்ளாமல் தவித்தது போக திரும்பத் திரும்ப பொங்கியவாறு என்னை அணைத்தபடி இருந்தது. துரத்திவந்த இஸ்ராயீல் சுழியில் சிக்கியபின் திரும்பி வரவே இல்லை. ———————————————– […]