பஞ்சதந்திரம் தொடர் 49

This entry is part 33 of 43 in the series 24 ஜூன் 2012

பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள் ஒரு இடத்தில் மந்தவிஷன் என்றொரு கருநாகம் இருந்தது. அது வயதான பாம்பு. ‘’நான் சுகமாக வாழ்வதற்கு வழியென்ன?’’ என்று அது எண்ணிப்பார்த்தது. பிறகு, தவளைகள் நிறைய வசித்த ஒரு குளத்துக்கு அது போயிற்று. வாழ்க்கையில் வெறுப்படைந்தது போல் அது பாசாங்கு செய்தது. அம்மாதிரி காத்து நிற்கையில், நீர் ஓரத்துக்கு வந்த ஒரு தவளை அதைப் பார்த்து, “மாமா, முன்போல் நீங்கள் ஏன் இரைதேடித் திரியவில்லை?’’ என்று கேட்டது. அதற்குப் பாம்பு, ‘’நண்பனே, […]

“செய்வினை, செயப்பாட்டு வினை“

This entry is part 32 of 43 in the series 24 ஜூன் 2012

       கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை அவர் கழுத்தில் போட்டபோது என் இதயமே வெடித்து விடும் போலானது. பெருகியிருக்கும் அந்த நெரிசலில் தெரிந்த, தெரியாத எல்லா சோக முகங்களையும் கடந்து, மறந்து, கதறி அழ ஆரம்பித்தேன். அவர் மடியில் விழுந்த வேகத்தில் உடம்பு சாய்வதைக் கண்டு யாரோ வந்து தாங்கிப் பிடித்து நிமிர்த்தி நாற்காலியோடு இணைந்த கட்டுக்களை இறுக்கினார்கள்.     அப்போதும் […]

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”

This entry is part 31 of 43 in the series 24 ஜூன் 2012

  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு கொடுத்த புனிதனே!ஜனாதிபதி உன் கவிதைக்குழந்தைக்கு விருது என்று கொடுத்தார் ஒரு கிலு கிலுப்பையை! அத்தனயும் எத்தனை வரிகள் உன் வரிகள். அத்தனையும் உன் எழுத்துக்குள் இனித்த வலிகள். கவிதை எனும் உலகக்கோளத்தின் பூமத்திய ரேகை சிறுகூடல் பட்டியின் வழியாக‌ அல்லவா ஓடுகிறது. “உலகம் பிறந்தது எனக்காக” என்றாயே நீ எதைச்சொன்னாய்? தமிழ் […]

நினைவு

This entry is part 30 of 43 in the series 24 ஜூன் 2012

மராத்தி மூலம்- சதீஷ் அலேக்கர் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி   திரை விலகும் போது மேடையில் அடர்த்தியான இருள்.    மெல்ல ஒளிபடர்ந்து மேடையில் இருப்பவை மங்கலாகக் காட்சிக்குக் கிடைக்கின்றன.  மேடையின் ஒருபுறம் உயர்ந்த சாய்மானம் கொண்ட சிம்மாசனம் போன்ற இரு நாற்காலிகள் இருக்கின்றன.  இந்த நாற்காலிகளிலும் ஒரு ஆணும் ஒரு பெண்மணியும்  ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.  பெண்மணிக்கு   35 வயது இருக்கும். ஆணுக்கு சுமார் 40 வயது இருக்கலாம். இரு […]

குரோதம்

This entry is part 29 of 43 in the series 24 ஜூன் 2012

-முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன்  ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய்  சடா – ரென உன் முகத்தில்  வீசினேன் கதறித் துடித்தாய் ஆ இவ்வளவு வல்லமை  வாய்ந்தனவோ என் சொற்கள்..? பொறுக்கிச் சேர்க்கலானேன்  செதுக்கிச் செதுக்கிக்  கூர் செய்தேன் சொற்கள் விஷமேறின  வலிமை கொண்டன ஆயுதமாயின   கவசமாயின   ஆளுமையில் நிலை கொண்டன வீசி வீசி எறியலானேன் அலறினான் அவன்.. நொண்டி ஓடினான் இவன்.. […]

சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி

This entry is part 28 of 43 in the series 24 ஜூன் 2012

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஆசிய முதல் சீனப் பெண் தீரராய் அண்டவெளிப் பயணம் விண்வெளிக் கப்பலில் செய்கிறார் ! வெற்றி கரமாய்ப் பூமியைச் சுற்றி வரும் ஓர் விண்சிமிழில் இணைப்பாகி இடம் மாறிச் சோதனை  புரிவார். விண் வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி வீரர் போல் விண்கப்பலில் ஏறி வெண்ணிலவில் தடம் வைக்க முன்னிலைப் பயிற்சி […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7

This entry is part 27 of 43 in the series 24 ஜூன் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை

This entry is part 26 of 43 in the series 24 ஜூன் 2012

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள், தற்போது இனவரைவியல் அடையாளம் சார்ந்து நுண்கதையாடல்கள், நுண் அரசியல் தளங்கிலும் இயங்குவதை பரிசீலிக்க வேண்டும். அடித்தள இஸ்லாமிய மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் விடுகதைகள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள், கதை சொல்லல்கள், புராணீகங்கள், புனைவுகள், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் […]

காசி

This entry is part 25 of 43 in the series 24 ஜூன் 2012

மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை குயிலிக்கு. யாராக இருக்கும் இந்த மனிதர்… பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்குதே என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்று, மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்தாள். நல்ல வேளையாக மூச்சு இருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், நெற்றியின் இடது புறம் இரத்தம் வந்து காய்ந்து கிடந்தது. சுய நினைவின்றி கிடப்பது தெரிந்தது. யாரையாவது துணைக்குக் கூப்பிடலாம் […]

நினைவுகள் மிதந்து வழிவதானது

This entry is part 24 of 43 in the series 24 ஜூன் 2012

    இருளின் மொழியைப் பேசும் தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும் வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய வனத்தின் நீரூற்றுக்கள் பெரும்பாலும் மௌனமானவை எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில் பரவியணைக்கப் போதா நீர் நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில் யாது பயன்   காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை செரித்து தேயாப் பசி கொண்ட கானகத்தின் எப் பெருவிருட்சத்தின் வேர் அகன்ற வாயைக் கொண்டதுவோ   புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும் இக் காட்டிலெது நீ அண்டும் குருவிகள் எக்கணமும் […]