வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18

This entry is part 23 of 43 in the series 24 ஜூன் 2012

  இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு     முதுமை  ஒரு சுமையா? ஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. பயனுள்ள பயணமாக இருத்தல் வேண்டும். உடல் வலி மறக்க வாசிப்பு, எழுத்து, தியானம் உதவிக்கரம் நீட்டும். வாடிப்பட்டியில் இருந்த ஐந்தாண்டு காலம் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்த உணர்வும் நிறைவும் இப்பொழுதும் இருக்கின்றது. எத்தனை மாறுதல்கள்?! அரசியல் பாடம் நேரடியாகப் பெற்றதும் இங்கேதான். […]

மஞ்சள் கயிறு…….!

This entry is part 22 of 43 in the series 24 ஜூன் 2012

திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு  நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின்  கார் விர்ரென்று கிளம்பிச் சென்றது. உள்ளே நுழையும் மகளை…வா…வா..என்ன திடீர் விஜயம்..? என்றழைத்த பார்வதியின்  மனசு “வந்ததும் வராததுமா…இப்போவே கேட்காதே…ன்னு தடுத்தது…” . ” ம்மா….இன்னைக்கு நேக்கு ஒரே…தலைவலி…அதான்…ஆஃபீஸுக்கு  லீவைப் போட்டுட்டு சுரேஷை இங்கே  இறக்கி விடச் சொன்னேன்…ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிப்பான்.  சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு செருப்பை ஓரமாக  கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள்  கைப்பையில் இருந்து தான்  கொண்டு […]

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !

This entry is part 21 of 43 in the series 24 ஜூன் 2012

  தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை!     தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார்.   அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் […]

துருக்கி பயணம்-7

This entry is part 20 of 43 in the series 24 ஜூன் 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா ஏப்ரல் – 1 மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன. அண்டல்யாவில் எப்போதும்போல […]

தப்பித்து வந்தவனின் மரணம்.

This entry is part 19 of 43 in the series 24 ஜூன் 2012

    நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும். தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய். எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான். வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் . சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன  குடும்பமா வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.   காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் . நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும், குரூரமான […]

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்

This entry is part 18 of 43 in the series 24 ஜூன் 2012

நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.  என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான புதுவயலுக்கு ஒரு முறை நாங்கள் வந்திருந்தபொழுது ‘‘என்னையும் என் தங்கையையும் கவிஞர் அழ. வள்ளியப்பாவைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள்’’என்றார். அந்தச் சில நாள் இடைவெளியில் நானும் என் தங்கையும் எங்களுக்குத் தெரிந்த சில மழலைப்பாடல்களை அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னிலையில் பாடுவதற்குத் தயார்படுத்திக்கொண்டோம். குறிப்பாக […]

திருடுப் போன கோடாலி

This entry is part 17 of 43 in the series 24 ஜூன் 2012

ஒரு விறகு வெட்டி ஒரு நாள் காலை, விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். விறகை வெட்டி கட்டுக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தான். தன் பட்டறையில் பெரிய விறகுகளை சிறிதாக வெட்டிச் சந்தைக்கு விற்கச் சென்றான். மதியம் மறுபடியும் சந்தைச் சென்று மேலும் விறகுகளை விற்கச் செல்லலாம் என்று எண்ணி கோடாலியைத் தேடினான். அதிர்ச்சிக்குள்ளானான். விறகுகளை வெட்ட இருந்த ஒரு கோடாலி எங்கே சென்றது என்று பதறிப்போய் வீடு முழுக்கத் தேடினான். வீட்டைச் சுற்றிலும் தேடினான். […]

திருக்குறள் விளம்பரக்கட்டுரை

This entry is part 16 of 43 in the series 24 ஜூன் 2012

ஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’  புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் ஆபிசுக்கு வந்து  அவற்றை என்னுடைய இல்லை. . . இல்லை. . .  என்னுடைய மகளுடைய இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாயிற்று. இவற்றை எவ்விதம் விற்கப்போகிறேன் என மலைத்து மோட்டுவளையை இல்லை . . . . இல்லை. . . கூரையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். . டெலி ஃபோன் ஒலித்தது. […]

பழையபடி மரங்கள் பூக்கும்

This entry is part 15 of 43 in the series 24 ஜூன் 2012

பெரும் நெருப்பு தணிந்து பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து புற்கள் வரவேற்கும் கால்களை. கன்றிய இதயங்கள் இளகி முகம் பார்க்கும் மலர்களில். கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும் புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி உயிர்கள் கழித்து விளையாடும். நிறைந்த குளங்களிலிருந்து குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும். நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி நினைவில் நின்று சிரிப்பாள், மனைவியின் உருவில் பேரப் பிள்ளைகளுடன். வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க ஒடியல் காயும் வாசலெங்கும். பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)

This entry is part 14 of 43 in the series 24 ஜூன் 2012

++++++++++++++++++++ வீண் பெருமை ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]