மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31

This entry is part 3 of 43 in the series 24 ஜூன் 2012

34. நாயக்கர் அவையை அலங்கரித்திருந்தார். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டியிருந்தது. சிறையிலடைத்திருந்த முதல் குற்றவாளியை நாயக்கர் அழைத்துவரும்படி கட்டளையிட்டார். – கள்வனை அவைக்கு கொணருங்கள். வேல்கம்பு காவலர்கள் இருவர் கள்வனை அவை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர். கள்வனுக்குக் கடப்பக்கால் போட்டிருந்தது. – தளவாய் என்ன நடந்தது? தளவாய் தமது ஆசனத்திலிருந்து எழுந்து மன்னரை கைகூப்பி வணங்கினார். கூப்பிய கைகள் கூப்பியவண்ணமிருக்க, அவர் தலை சக காரியஸ்தர்கள்மீது விழிகளை ஒருமுறை ஓடவிட்டு, மீண்டும் […]

சங்கர் தயாளின் “ சகுனி “

This entry is part 2 of 43 in the series 24 ஜூன் 2012

“ Busy city பசி Citizen “ சகுனி படத்தில், அறிமுகக் காட்சியில், கார்த்தி பேசும் முதல் வசனம். காதில் விழுந்தவுடனேயே, நிமிர்ந்து உட்காருகிறார்கள் போருர் கோபாலகிருஷ்ணாவில், முதல் நாள் மாலைக்காட்சிக்கு வந்திருந்த 200 சொச்சம் ரசிகர்கள். (!) படம் மொத்தமே இந்த வசனத்தில் அடங்கி விடுகிறது என்றால் மிகையில்லை. பசி என்பது உணவு சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமில்லை என்பது தான் 158 நிமிடப் படத்தின் கதை. கார்த்தி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “ சகுனி படத்தின் […]

முள்ளாகும் உறவுகள்

This entry is part 1 of 43 in the series 24 ஜூன் 2012

சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். அவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டார். அவர் கடைக்கண் ஓரம் ஈரம் கசிந்தது. மூன்று கட்டு வீடு. முன்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. பின்னால் ஆயிரம் சொச்சம் சதுர அடி. முன்னால் ஒரு பூங்காவைப் போல் மலர் தோட்டம். பின்னால் காய்கறித் தோட்டம். அத்தனையும் சங்கா, அவரை அப்படித்தான் அவரது […]