கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி

This entry is part 13 of 43 in the series 24 ஜூன் 2012

அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க எண்ணமிருக்கிறது. திருவாளர்கள்: 1. மு.இராமநாதன், சென்னை 2. சைலபதி, சென்னை 3. நா.அனுராதா, மதுரை 4..சுமதிராம், கோவை 5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி 6. பிரபாகர், […]

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)

This entry is part 12 of 43 in the series 24 ஜூன் 2012

    —————————- +2க்குப் பிறகு —————————- +2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு. சென்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டுமே பதினோரு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பல பள்ளிகளில் நடத்துகிறார்கள் என்று பார்த்தோம். அதாவது பதினோராம் வகுப்புப் பாடத் திட்டம் மாணவருக்குப் போய்ச் சேருவதே இல்லை. இதன் பின் விளைவு ‘என்ஜினீயரிங்’ படிப்பில் முதலாண்டில் பல பாடங்களை மாணவர்களால் சரிவரப் புரிந்து கற்றுக் கொள்ள இயலுவதில்லை. இதற்குக் […]

முள்வெளி அத்தியாயம் -14

This entry is part 11 of 43 in the series 24 ஜூன் 2012

தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் தூங்காமலிருந்ததில் பற்றி எரியும் கண்களையும், பித்தக் கசப்பு தட்டிய நாக்கையும் மீறி மனதில் சிறு நிம்மதி பரவியது. பொறுமையாக, கவனமாக எல்லாக் கேள்விகளுக்கும் விடை எழுதி விட வேண்டும். ஹால் டிக்கெட்டோடு கொண்டு வந்திருந்த பழனி முருகன் படத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். இரண்டு பென்சில்கள், […]

மனநல மருத்துவர்

This entry is part 10 of 43 in the series 24 ஜூன் 2012

சூர்யா கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக்‍ காரணம், அவர் அவரது கட்டை விரலை, வாய்க்‍குள்ளே வைத்து சூம்பிக்‍ கொண்டிருந்தார். என்னதான் ஏராளமான மன நோயாளிகளுக்‍கு மருத்துவம் செய்து குணப்படுத்தியிருந்தாலும், வாய்க்‍குள் பெருவிரலை வைத்து்க கொண்டு வித்தியாசமாக பேசும் அந்த இளைஞனின் வார்த்தைகளை […]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)

This entry is part 9 of 43 in the series 24 ஜூன் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்மையைப் போற்றிய கவிஞர்கள்      பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. ஆனாலும் பெண்விடுதலைக்குக் குரல் கொடுத்த உன்னதக் கவிஞராகப் பாரதியார் விளங்குகிறார். தாம் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பாடல்கள் பாடினார். பெண்கள் அடிமைகள்  அல்லர். அவர்களுக்கும் உரிமைகள் உண்டு. அவர்கள் மனிதரில் ஒரு கூறு. அவர்கள் உயர்ந்தால் தான் நாடு உயரும் என்று உணர்ந்து அதனைச் சமுதாயத்திற்கு உணர்த்தியவர் […]

தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்

This entry is part 8 of 43 in the series 24 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பூவும் பூந்தோப்பில் இல்லை இதயத் துள்ளே அவை மலர்ந் துள்ளன. எவரது மந்திர சக்தியால் இதயத்துள் வசந்தம் மலர்கிறது ? பட்டுப் போன மரக் கிளைகளில் பூ மொட்டுகள் வெடிக்கும் ! மௌனப் புள்ளினத்தை நடுங்க வைக்கும் ! பாலை வனத்தூடே சிரித் தோடும் ஓர் ஆறு. துயருக்கு அஞ்சாதவன் நான் பிரிவில் நேரும் மனவலிக்கு ஒரு குடில் கட்டி வைத்தேன். தேனீக்கள் […]

எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

This entry is part 7 of 43 in the series 24 ஜூன் 2012

அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும் என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல், ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல், சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல், நிலத்தடி நீர் வற்றி, பூமி முழுதும் பாலைவனமாக மாறிவருகிறது என்பது பற்றிக்கவலை கொள்ளாமல், பவளப்பாறைகள் கூண்டோடு அழிக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல், அருகி வரும் மொழிகளுள் நமதும் ஒன்று என்றுணராமல், நாளொன்றிற்கு நான்கு பறவையினங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்றன என்றுணராமல், அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம் நமது கலைகள் அழிந்து வருகின்றன […]

சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

This entry is part 6 of 43 in the series 24 ஜூன் 2012

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் 75 வயதை எட்டியுள்ளார். அவருடைய வாழ்வை நினைவு கூரும் கட்டுரை) தலைமுறைகள்தோறும் தமிழே வாழ்வு என்று தனித்து நிற்கும் இலட்சியப் புதல்வர்களைப் பெற்ற தமிழன்னையின் ஆயிரமாயிரம் தமிழ்ப்புதல்வர்களில் ஒருவர் என்று, மலேசியாவில் பெருமையோடு சொல்ல வேண்டியவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள். எளிய குடும்பத்தில் தோன்றி, எளிமையான வாழ்க்கையை வகுத்துக் கொண்டு தமிழுக்கும் தமிழர்க்கும் […]

நினைவுகளின் சுவட்டில் – 90

This entry is part 5 of 43 in the series 24 ஜூன் 2012

  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் இச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயனத்துக்கும் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாது தான் சென்றோம். எங்கே தங்குவது, எங்கே குளிப்பது போன்ற எதுவும் அவ்வப்போது நாங்கள் கிடைத்த இடத்தில் எங்களைச் சௌகரியப்படுத்திக்கொண்டோமே தவிர முன் ஏற்பாடுகள் வசதிகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இப்படி ஒரு பயணம் இப்போது என்ன, அதன் […]

உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்

This entry is part 4 of 43 in the series 24 ஜூன் 2012

ருபாய்யத் பற்றி எனக்கு முதலில் தெரிய வந்தது  ஃபிட்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில். அடுத்து தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் 1950- களின் ஆரம்ப வருடங்களில் எப்போதோ. அப்போதே உடன் பின் தொடர்ந்தது ச.து.சு. யோகியின் மொழிபெயர்ப்பும். எனக்கு நினைவில் இருப்பது என்னவோ தேவியின் ஒரு பாடலின்  வரிகள் மாத்திரமே. “வெயிலுக்கேற்ற நிழலுண்டு, கம்பன் கவியுண்டு” என்று நீளும் அது. பாரசீக வாசனையற்ற தமிழ்க் கவிதையாக. ஆனாலும் மிக இனிமையான கவிதைகள் அவை. தேவியின் ஆளுமையே அவர் கவிதையிலும், […]