மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை வீணையை எவரது விரல்களும் மீட்ட முடியாது என்னுடைய கரம் தொட்டு அவை ஆசீர்வதிக்கப் படா விட்டால், அவரது கண்கள் எனது ஆசனப் பீடத்தின் தெரிசனம் பெறா விட்டால் ! தேவ தூதர் இசையா (Isaiah) வார்த்தைகளை என் காதல் தங்கச் சங்கிலியில் விலை மதிப்பில்லாக் கற்களாய்க் கழுத்தணியில் கோர்த்தார். புனித தூதர் ஜான் (Saint John) என் சார்பாகத் தனது ஒளிமயக் […]
பெரியபுராணம் அறுபத்து மூன்று சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்றது. இத்தகைய அடியார்கள் சிவனருள் பெற்று மானிட குலத்தைச் சிறப்பித்து ஈடேற்றியவர்களாவர். இச்சிவனடியார்களுள் ஒருவராக வைத்து போற்றத்தக்கவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஆவார். அவர் சிறந்த முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். சொற்பொழிவின் மூலம் […]
இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக. அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர் எனக்கும் புரியும். வாப்பும்மா உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு சில வேளை தெரிந்திருக்கலாம் மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளியில்லையென்பதும். சமீலா யூசுப் அலி, மாவனல்லை,இலங்கை 15.06.2011
சுத்தமாய் வெள்ளைத்தாள் சிதறிய கிரெயோன் கலர்கள் இரண்டு கோடுகள் ஒரு கோணல் வட்டம் நம்பிக்கையோடு யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று குழந்தைக்கோ கர்வம் ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. யானைக்கு ஊதாநிறமா? அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை இரண்டு கால் யானை எங்குள்ளது அடித்துத் திருத்தினார் குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க நடந்து போனார் ஆசிரியை. சமீலா யூசுப் அலி மாவனல்லை இலங்கை
அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும் முடிவற்ற சந்தேகங்களையும் சுமந்து கொண்டு மிகுந்த பிரயாசையோடு அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன் சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய் நீண்டு நெடித்தலைந்தன. இனி என்ன களைப்போடு கேட்டாள். இனி நீ வாழத் துவங்கு வாழ்தல் என்றால் அயர்வோடு நோக்கினேன். அவள் […]
அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள். அவன் எழுதும் எதையும் அவள் வாசித்ததில்லை அவனது விசாரங்களும் தனித்துவமான சிந்தனைகளும் அவளுக்குப் புரிந்ததேயில்லை. அதிகம் பேசுவது அவனை ஆத்திரமூட்டும். அவள் மொழி மறந்தவள் ஆயினள். கிராமத்துக்கிளி மொழிகள் மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள் அடங்கியிருந்தாள். சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் […]
தற்போது இலங்கையில் வசிக்கும் என்னை விரைவில் கைது செய்யப் போகிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் நான் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளி. தண்டனையாக, ஐந்து லட்ச இலங்கை ரூபாய்களை தண்டப் பணமாகச் செலுத்த வேண்டும். தவறினால் குறைந்த பட்சம் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறேன் நான்? என்னிடம் நன்றாக வேலை செய்யும் ஒரு கணினி இருக்கிறது. அதில்தான் இதையெல்லாம் எழுதுகிறேன். இனி, அதன் திரைக் கண்ணாடியை உடைத்து, தலை கீழாய்க் கவிழ்த்து […]
தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம் தேவ் கூட்டிய கூட்டத்தை போலீசார் நட்ட நடு நிசியில் வலுக்கட்டாயமாகக் கலைத்தது பற்றிய எனது கட்டுரையில் உண்மையான மக்களாட்சி எவ்வாறு இருக்கும் என்ற எனது கருத்தை விவரிக்கிறபோது அண்ணா அவர்கள் முதல்வராக இருக்கையில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருந்தேன். 1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே கல்லூரி மாணவர்களுக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துத் தொழிலாளர்களான ஓட்டுனர், நடத்துனர் இணைந்த குழுவினருக்கும் இடையே […]
உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும் ஐஸ்துண்டங்கள் கரைய கரைய மனதைக் கரைத்தபடி வண்டியில் ஏறும்போது தூக்கமற்று முறைக்கும் மனைவி முகம் எதிர்கொள்ள கரைந்த கவலையெல்லாம் திரும்ப வயிற்றைக் கலக்கியபடி..
ஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.’எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி’ என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள் மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன் திரைப்படம். விஷால் வாழ்ந்திருக்கிறார் படத்தில் ஜி.எம்.குமாருடன்.விளையாட்டு பையனாக, முறுக்கேறி சண்டை பிடிக்கும் இளம் வாலிபனாகப்பார்த்த விஷால் இந்த படத்தில் ஒரு விஷுவல் ட்ரீட்.கொஞ்சம் பெண் தன்மை தன்னிடத்தில் கூடியவராக அபினயித்திருக்கிறார்.ஒவ்வொரு அசைவிலும் அந்த பாத்திரத்தை செதுக்கி அதை வெளிக்கொணரச்செய்திருப்பவர் பாலா என்பதில் […]