திலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய இயந்திரமாய் பழக்கிய காலத்தில் நான் உனை காடுகளை முகரவும் தூரத்து ஆபத்தில் காலடிச் சுவட்டை வாசிக்கவும் காற்றில் மிதந்து வந்த தேனின் வாசத்தைப் பற்றிக் கொண்டு பூக்களிடம் சேகரிக்கவும் கற்பித்தவள் சிங்கங்களின் தேசம் முயல்களின் […]
ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன்.
ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த மீதக்காசில் சீரகத்தின் மணமும் கடுகின் வாசமும் வெந்தயத்தின் நெடியும் மஞ்சள்பொடியின் கமறலும் மிளகின் காரமுமாக அடித்த வாசம் இன்னும் என் மனதினுள் வட்டமடிக்கிறது அந்தக்காசில் வாங்கித்தின்ற மிட்டாயின் மணம் ஏனோ நினைவில் இல்லை. சின்னப்பயல் […]
நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் – நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து […]
பூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப் பெருகுவதாய் மலரினுள் நுழைந்து தேனெடுத்து மரத்தைக் கொத்தி இரை தேடி ஜீவிப்பதாய் வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய் ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு கட்டும் திறனாளியாய் இன்னும் பலவாய் அறியப்பட்ட பறவையின் நாள் முழுதுமான இயங்குதல் அனைத்தும் காணக் கிடைப்பதில்லை உதிர்ந்த சிறகுகளும் சிதறிய […]
மணல் வீடு வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும் சுதியைப் போலிருக்கும் பால்யத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாம் தான் கடற்கரையிலும் கைபேசியில் உரையாடுகிறோம் கட்டிய மணல் வீட்டை அடித்துச் சென்ற கடலலையைப் பார்த்து குதூகலித்தனர் குழந்தைகள். […]
பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை தெரிக்க ஓடுகிறது அது பாய்கிற பாய்ச்சலில் கழுத்திலிருந்த பிடி நழுவி சவாரி வாலை பிடித்தபடி அது போகிற இடமெல்லாம் … கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் ! மன்னிக்கவும் – மென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன். […]
மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர் வார்க்கின்றன. அதட்டும் அழை குரல் அவசரத்தில் எழும் குழந்தைகளின் மடியிலிருந்து கொட்டங்குச்சி ஈரமண் இட்லிகள் வீழந்து உடைகின்றன. குழந்தைகளின் கால்களை மணல் அலைகள் தழுவிக்கொள்கின்றன. வீடு மீளும் குழந்தைகளின் உடலில் பிரிய மறுத்த மணற்த் […]
சுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது உட்கார்ந்து கொஞ்சி விளையாடியவள் கனிமொழி. நானும் உனக்கு அப்பா மாதிரிதான் என்று சொன்னபோது கன்னங் குழியச் சிரித்து எனது சொல்லை அங்கீகரித்தவள் குழந்தை கனிமொழி. 1972 என்று நினைக்கிறேன். மதியழகன் மிகவும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தம்பி கிருஷ்ணசாமி நடத்திய தென்னகம் நாளிதழ் கட்சிப் பத்திரிகை போல் இல்லாமல் செய்தித்தாளாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக செய்தி ஆசிரியராக நான் அங்கு தினமும் சில மணி […]
‘எடிட்டிங்’ என்கிற ‘பிரதியைச் செப்பனிடுதல்’ பத்திரிகை ஆசிரியரின் தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில் பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை வைத்திருப்பார்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும் இவர்களது கண்டிப்புக்குத் தப்ப முடியாது. தமது வெளியீடு தரமாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் அக்கறை பிரமிப்பானது. தமிழ்ப் பதிப்பாளர்களில் ‘க்ரியா’ இதில் தனிக் கவனம் செலுத்துவதாக அறிகிறேன். தங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறவரை எழுத்தாளரைத் […]