வி. ஆர். ரவிக்குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு மணி ஏழு. கார்த்திகை மாத காரிருள், சீக்கிரமே இருட்டிவிட்டது. வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ் இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் கவனத்திற்கு என்று ஒலி பெருக்கியில் மீண்டும் மீண்டும் அறிவிப்பு முழங்கிக்கொண்டிருந்தது. பல பெட்டிகளுடனும் லக்கேஜ்களுடனும் பயணிகள் வேக வேகமாக அவரவர் கம்பார்ட்மெண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இருக்கை உறுதி ஆகாதவர்கள் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.வேலம்மாளுக்கு அப்போதுதான் நல்ல தூக்கமே வந்திருந்தது.புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை. கந்தப்பன் மீது காலைப் போட்டுக் கொண்டு பெரியவனும் , கழுத்தைக் கட்டிக்கொண்டு சின்னவனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அலாரம் ஐந்துமுறை அடித்ததும் விழித்துக் கொண்ட கந்தப்பன் பிள்ளைகளைச் சரியாகப் படுக்கவைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான்.ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினால்தான் ஷிப்டுக்குச் சரியாக இருக்கும். குளித்து முடித்துத் தயாராகி , முன்பக்கத்து அறையில் மர ஸ்டேண்டில் வைத்திருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு திருநீறு இட்டுக்கொண்டிருந்தபோது […]
வாழப்போகும் பெருமையை விதை சொன்னது வாழும் பெருமையை மரம் சொன்னது வாழ்ந்த பெருமையை விறகு சொன்னது மூன்று பேரும் இறைவனைக் கேட்டனர் ‘எங்களில் யார் பெரியவன்’ இறைவன் சொன்னான் ‘உங்கள்முன் நான் சிறியவன்’ அமீதாம்மாள்
ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு என்னிடம் இல்லை. என் வீடு உன்னிடம் இல்லை. உன் வீடு என்னிடம் இல்லை. உன் வீடு என் வீடு எவன் வீடு ! மலையெல்லாம் அவன் வீடு மனமெங்கும் அருள்வீடு. பிறவிதொறும் வீடுவீடாய்………, பிறவா வீடு வேண்டும். பிறப்பை அறுக்கும் பேரின்பேச் சுடரே ! பேரோளியே!!! ஜெயானந்தன்.
வெங்கடேசன் நாராயணசாமி ( சமஸ்கிருதத்திலிருந்து ஸ்ரீமத் பாகவதம் செய்யுளின் மொழிபெயர்ப்புகள் சில ) துருவன் பகவானைப் போற்றுதல்: ௐ [ஶ்ரீம.பா-4.9.6] எனாவி உடல் உட்புகுந்து ஆட்கொண்டாய்! ஜடமாய் உறங்கும் பொறி புலன்கள் உயிர்ப்பித்து இயக்கினாய்! மூச்சானாய்! பேச்சானாய்! அறிவாற்றல் ஆன்மாவானாய்! உயிருக்குயிரான பகவானே! உணர்வெனும் பெரும்பதப் புருடனே! போற்றி! போற்றி! ந [ஶ்ரீம.பா-4.9.7] ஒன்றேயான உறுபொருள் பகவன் நும் ஆத்மசக்தியால் அனாதி மாயா ஆற்றல்மிகு குணத்திரிபால் அகண்ட பேருணர்வால் அண்டங்கள் படைத்தும் அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்தும் வெவ்வேறு விறகு […]
பள்ளிப் பருவமாய் இனிக்கும் அந்தப் பேருந்து நிறுத்தம் அருகில்தான் மகள் வீடு மகளைப் பார்த்தபின் என் மனை செல்லும் பேருந்து அங்குதான் நிற்கும் அங்கு…. ஒற்றுத்தாள் விற்கும் பாட்டி சிநேகமாய்ச் சிரிப்பார் இரண்டுவெள்ளி தருவேன் செவன்லெவன் கடையின் சிப்பந்திப்பெண் என் ஊர் ஊரின் மழைவெயில் விசாரிப்பேன் உணவுக்கடையில் நம் பையன் பரோட்டாசுழற்றுவதில் பேருந்தை மறப்பேன் சிவப்பு மனிதன் முன் பெருஞ்சாலை கடக்கும் பெரிசுகள் பார்த்துத் திகைப்பேன் என் நேரம் அங்கு இரவு 8 மணி ‘நல்லா யிருக்கீங்களாண்ணே’ […]