எனக்குப் பிடித்த சிறுகதைகள்

This entry is part 1 of 11 in the series 4 ஜூன் 2017

என் செல்வராஜ்   சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள்  கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.     தனுமை – வண்ணதாசன் விடியுமா? – கு ப ராஜகோபாலன் 3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் – புதுமைப்பித்தன் அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை அழியாச்சுடர் […]

மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்

This entry is part 11 of 11 in the series 4 ஜூன் 2017

பி.ஆர்.ஹரன் பசுவைத் தாயாக மதிக்கும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 36-வது க்ஷரத்திலிருந்து 51-வது க்ஷரத்து வரையிலான விஷயங்கள், “அரசுக் கொள்கைக்கான வழிகாட்டுக் கோட்பாடுகள்” (Directive Principles of State Policy) என்கிற அம்சத்தின் கீழ் வருகின்றன. அதில் 48-வது க்ஷரத்து, “வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஒழுங்கமைப்பு” என்கிற தலைப்பின் கீழ் “பசுக்கள், கன்றுகள், கறவை மிகுந்த மற்றும் வறட்சி அடைந்த கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுக்கவும், அந்தக் கால்நடை வகைகளைப் […]

திருகுவளையில் உதித்த சூரியன்

This entry is part 10 of 11 in the series 4 ஜூன் 2017

மணிகண்டன் ராஜேந்திரன் தமிழக அரசியலில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மையம்கொண்டிருந்த  கருணாநிதி என்ற புயல் இன்று கோபாலபுரத்தில் கரையை கடந்து அஸ்தமத்திற்காக காத்திருக்கிறது. இந்த புயல் எந்த  நேரத்தில் எந்த திசையை நோக்கி நகரும், யாரை வாரி சுருட்டி ஒன்றுமில்லாமல் செய்யும், யாரை அரவணைத்து கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது..சிலநேரம் நடிகைகளின் குத்தாட்டத்தை நள்ளிரவுவரை ரசித்துக்கொண்டிருப்பார்.. அடுத்த சில தினங்களில் சேப்பாக்கம் ஸ்டேடியம் நடுவே உட்கார்ந்து கிரிக்கெட் போட்டியையும் கண்டுகளிப்பார்..இது கலைனருக்கே உரித்தான ஸ்டைல். நாமெல்லாம் அன்பின் […]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

This entry is part 2 of 11 in the series 4 ஜூன் 2017

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.     [70] அவனது பயங்கரக் கோப முகத்தை தவிர்க்க சூளுரைப்பேன் நான், அநீதிக்கு ஆதரவில்லை எந்த நற்குணனும்  மதுக்கடையில் கோழையை எட்டி உதைத்து வெளியேற்ற மாட்டான். [70] Nay, but for terror of his wrathful Face, I swear I will not call Injustice Grace; Not one […]

பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.

This entry is part 3 of 11 in the series 4 ஜூன் 2017

Posted on June 3, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/apeman-to-spaceman-changes-in-earths-orbit-and-climate-ago-made-us-intelligent-watch-todays-galaxy-s.html?cid=6a00d8341bf7f753ef01bb09a0374e970d ++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி பிரளயம் நேரும், தட்ப வெப்பம் மாறும்  ! பரிதிக்கு அப்பால் பெயர்ந்து பூமி சூடு தணியும் ! டைனசார்ஸ் மரித்தன, நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் ! வானர மூளை உன்னத மாகி மேனிலை மானிடம் உதிக்கும் ! மீண்டும் டைனசார்ஸ் தோன்ற வில்லை ! […]

புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1

This entry is part 4 of 11 in the series 4 ஜூன் 2017

  0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும் உறிஞ்சி விடும் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அட்டை நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அட்டையில் பைப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதி மணி உண்மையிலேயே லயித்து புகை பிடிக்கிறாரா? பாரதி மணியை நான் […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 5 of 11 in the series 4 ஜூன் 2017

பள்ளிக்குச் செல்லும் முதல் நாள்   கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது   பல நாட்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் பாவனை காட்டிய ஆர்வம் இப்போது வடிந்துவிட்டது   புதிய உடைகள் அவனை மகிழ்ச்சி அடையாமல் செய்தது இதுதான் முதல் முறை   கனமில்லாப் பள்ளிப் பைகூட அவன் தோளை வலுவாக அழுத்தியது இதுவரை சுமக்காத பாரம் தண்டிக்கிறது   அம்மாவின் பாதுகாப்பை முதன்முதலாக அவன் இவ்வளவு மூர்க்கமாய் வெறுத்தில்லை   ஆட்டோவில் […]

தொடுவானம் 172. புது இல்லம்

This entry is part 6 of 11 in the series 4 ஜூன் 2017

கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் மூன்று மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். அங்கேயே எனக்கு ஓர் இருக்கையும் மேசையும்  தரப்பட்டது. இனிமேல் அங்கு அமர்ந்துதான் நான் கண் சிகிச்சை செய்வேன். வேலை நேரம் காலை ஒன்பது முதல் மலை ஐந்து வரை.மதியம் ஒரு மணி நேரம் உணவு அருந்த வெளியில் சென்று வரலாம். நான் முதல் நாளே நோயாளிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டேன். அனைத்துமே கண் தொடர்புடைய நோய்கள்தான். கூடுமானவரை நானே சமாளித்தேன். தெரியாதவற்றை அருகில் இருந்த மருத்துவர்களிடம் […]

கவிதைகள்

This entry is part 7 of 11 in the series 4 ஜூன் 2017

ஆ.மகராஜன் நாளைய நிழல்? ++++++++++++++ உக்கிரமாய்த் தகிக்கும் உச்சி வெயிலில் நிழல்தர இன்னமும் மிச்சமிருக்கின்றன நேற்றைய மனிதர்களின் மரங்கள் .. பாவம்..நாளைய மனிதர்கள்…! தவிக்கும் வேதாளம் ++++++++++++++++++ இறங்கிய வேதாளம் மீண்டும் ஏறிக்கொள்ள தன் மரத்தைக் காணாமல் தவிக்கிறது.. இடைப்பட்ட நேரத்தில் அதையும் யாரோ வெட்டிச் சாய்த்து விட்டதால்..                  – ஆ.மகராஜன், திருச்சி.

நினைவில் உதிர்தல்

This entry is part 8 of 11 in the series 4 ஜூன் 2017

முருகன்.சுந்தரபாண்டியன்   1 பால் வைத்தக் கதிரை பிதுக்கி உன் நாவையும் என் நாவையும் சுவைக்கச் செய்த என் பால்ய விரலுக்கு சில வரிகள் காதலில் வராமல் பார்த்து பார்த்து எழுத்துக்களால் இவ்விரரை எடிட் செய்துகொண்டிருக்கிறது… சொல்லாமல் சொன்னவைக்கு ஒரு மொட்டை மாடியில் மத்தியில் அமர்ந்து யோசிக்குமளவு ஒன்றுமில்லையென பதில் தகவல் அனுப்புகிறாய். காலையிலிருந்து இறுக்கும் என் பரிதவிப்புகள் மெல்ல உதிர்கிறது இந்த இரவளவு பூரணத்தின் மேல் நிரம்புகிறது. உன் வார்த்தைகள் பதிவிறக்கமாகையில் ஓங்கி விழுந்தது ஒரு […]