வருபவர் தூரத்துச் சொந்தம் என அறிந்தும் தடம் மாறிப்போன நண்பன் எனத் தெரிந்தும் முகம் தெரிந்தும் பெயர் தெரியாதவன் என புரிந்தும் பேசச் செய்திகளின்றி விருப்பமுமற்று தவிர்த்தோ அல்லது வெற்றுப் புன்னகையுடனோ முடிகின்றன நிறைய சந்திப்புகள் பொன்.குமார்
முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் தி.ஜா என்ற தி.ஜானகிராமன் ஆவார். பாலுணர்வால் எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடியவர்கள் சமுதாயத்தில் பலநிலைகளிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்ற பட்டவர்த்தனமான உண்மையைத் தமது படைப்புகளில் உளவியல் அடிப்படையில் அணுகி அதனை உளவியல் நிபுணரைப் போன்று சற்றும் வரம்பினை மீறாது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இலக்கியமாக வார்த்தெடுத்தவர் தி.ஜானகிராமன். பிறர் கூறத் தயங்கிய […]
அஸங்க சாயக்கார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தம்பியின் முகத்தைச் சற்றுப் பார்த்துக் கொள்ள எமது பாட்டி தொலைக்காட்சிப் பெட்டியை நெருங்கி விழிகளைக் கூர்மையாக்கிக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்று முறை க.பொ.உயர்தரப் பரீட்சையெழுதி மூன்றாம் முறை ஒரு வழியாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் அளவுக்கு தம்பி சித்தியடைந்தது சில நாட்களுக்கு முன்புதான். இப்பொழுது தம்பி ஒரு இராணுவ முகாமில் இருக்கிறான். அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க அன்பாகக் கற்றுத் தரும் இராணுவ ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளவே அவன் […]
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். என் பெயர் சு.துரைக்குமரன். இணையத்தமிழ் இதழ்கள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அது தங்களுக்குத் தெரிந்ததே. ஆய்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. திண்ணையின் புதிய வடிவமைப்பு மிக அருமை. புதிய வண்ணத்தில் புதிய வசதிகளுடன் கண்களுக்குக் குளுமையாக உள்ளது. ஆனால் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மாற்றியுள்ளது வியப்பாக உள்ளது. பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி விளக்க வேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆய்வுக்குறிப்பில் சேர்த்துக்கொள்ள […]
கத்திரிவெயிலிலும் சிரிக்க மறப்பதில்லை பொய்க்காத பூக்கள் மாறாத வண்ணங்களோடு. ஒற்றை விடயம் மாறுபட்ட பதில்கள் ஒருவருக்கொருவராய் மாறித்தெறிக்கும் அடர் வார்த்தை. பிதிர்க்கடனெனத் தெளிக்கும் எள்ளும் தண்ணீரும் சிதறும் வட்ட வட்ட திரவத்துளிகக்குள் சிரார்த்த ஆன்மாக்கள். சம்பிரதாயங்களுக்குள்ளும் சமூகச் சடங்குகளுக்குள்ளும் குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும் முங்கி அமிழ்ந்து திணறுகின்றன சங்கடங்களும் சந்தோஷங்களும் இறந்த பின்னும்கூட!!! ஹேமா(சுவிஸ்)
நானொரு மிகச் சாமானிய இந்தியன். நமது பிரதமந்திரி போன்று உலகப்பிரசித்தி பெற்ற லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) பயின்று அவர்களால், அளிக்கப்பட்ட பட்டம் பெற்றதில்லை. மேலும் நமது நாட்டின் ரிசர்வ் வங்கியின் தலைவராகி பதவி ஒய்வுபெற்று, ராஜ்ய சபா மூலமாகவே நாட்டின் நிதி மந்திரி, பிரதம மந்திரியானதும் கிடையாது; அல்லது ஹார்வர்ட் வணிகக் கல்லூரியில் (Harvard Business School) பயின்று, நிதித் துறை, உள் நாட்டு பாதுகாப்புத் துறை போன்று சகலகலா வல்ல, […]
சில நிபந்தனைகளுடன் சிலரை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில புரிதல்களுடன் சிலருடன் ஒத்துப்போக முடிகிறது சில வேறுபாடுகளுடன் சிலருடன் வாழ்ந்து விட முடிகிறது சில சகிப்புகளுடன் சிலருடன் பயணிக்க முடிகிறது. சில துருத்தி நிற்கும் உண்மைகளுடன் சிலரைக் கடந்து செல்ல முடிகிறது. சில ம்றைத்து வைக்கப்பட்ட பொய்களுடன் சிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது. சில உறுத்தல்களுடன் இது போன்ற சில கவிதைகளை வாசிக்கவும் முடிகிறது.
தொலைந்து போனவர்கள் சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு கனவுகள் இலவசம் ஞானம் தேடுபவர்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் வேட்டுச் சத்தத்தோடு வழியனுப்ப வேண்டுமென்று எந்த மனிதன் எழுதி வைத்தான் உதிரும் இலைகள் வெற்று வெளியில் வார்க்கும் கவிதை கடல் கானம் பாடியது கரை அதைக் கேட்டுக் கிறங்கியது வானம் ஊஞ்சலாடியது திருவிழாவில் தொலைந்தவர்களெல்லாம் அடுத்த திருவிழாவில் அகப்படாமலா போய்விடுவார்கள். […]
‘தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தைஎன்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதைஎன்று சொல்வது பேடித்தனம்’ என்று சொன்ன புதுமைப்பித்தன் – இந்தத் திருட்டை’இலக்கிய மாரீசம்’ என்ற ஒரு புதுப் பிரயோகத்தால் வருணித்தார். பின்னாளில்அவர் மீதும் அத்தகைய குற்றச்சாட்டும், அதன் பேரில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களும் இலக்கிய உலகில் பிரசித்தம். இத்தகைய ‘இலக்கிய மாரீசம்’ அநேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும்தெரிந்தோ தெரியாமலோ, பிரக்ஞை உடனோ பிரக்ஞை இன்றியோ நேர்வதுண்டு.கண், காது, வாய் […]
ப.இரமேஷ் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி இன்று வரை வெளிவந்துள்ள காப்பியங்களில் பாடுபொருள்களும் அவற்றின் வடிவங்களும் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்றாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழில் காவியங்கள் தோன்றுவது என்பது மிகவும் அருகிப்போன நிலையிலேயே உள்ளது. அதுவும் மரபுக்கவிதையில் காவியம் படைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. மரபுக்கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் பெருமளவு குறைந்துள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் தமிழ்மொழியில் ஆழ்ந்த அறிவும் யாப்பிலக்கணப் புலமையும் மரபுக்கவிதை எழுதுவதற்கு இன்றியமையாதனவாக விளங்குகின்றன. யாப்பிலக்கணப் புலமைப்பெற்ற […]