பொய்க்கால் காதலி!

This entry is part 16 of 46 in the series 5 ஜூன் 2011

தாளத்துக்கேற்ற நடனம் வசிய பார்வை விஷம புன்னகை மழலை பேச்சு… அடிமை பட்டுக்கிடக்கும் ஒரு ரசிகனாய் நீ ரசிக்க பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க பிடித்துத் தருகிறேன் காதலாய்… கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க சிறகில் ஒன்று உடைந்து போகிறது… அருவருப்பாய் தூக்கி எறிகிறாய் அதிலிருந்த சிவப்பொன்று என் முகத்தில் தெறிக்க வண்ணமா ரத்தமா? பாவத்தின் அச்சத்தோடு தலையில் கை வைத்தமர்கிறேன்! சாக துடிக்கும் அப்பூச்சியின் கன்னங்களை அள்ளி பார்த்திட அதன் மர்ம புன்னகை என் முகத்தில் அறைந்து இறக்கிறது.. கண்ணீர் […]

மெய்ப்பொருள் காண்ப தறிவு

This entry is part 15 of 46 in the series 5 ஜூன் 2011

ஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா? நண்பனா? அல்லது இரண்டும் இல்லையா? சர்க்கரை சிநேகிதனானால்  விடுதலையே கிடையாதா? மாரியப்பாவின் மருத்துவர் இப்படிச் சொன்னார் ‘நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது விலகாது. உன்னோடுதான் வாழும். விரட்டுவது கடினம். சேர்ந்து வாழப் பழகிக் கொள். தாகம் வரும். தண்ணீர் குடி. நிறைய. அதிகமாகப் பசிக்கும். புசி. இரவில் இரண்டு மூன்று […]

ஏன் மட்டம்

This entry is part 14 of 46 in the series 5 ஜூன் 2011

பூமிக்குப் போர்வையாய் பச்சைக் கம்பளம் – அந்தப் புல்வெளியில் தெரிகிறது அகிலத்தின் அழகு, அழித்து அதைமேயும் ஆட்டு மந்தை, ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம், ஓட ஓட விரட்டி ஓநாயை; கொல்லும் கொம்பன் காளை, அதன் ஜம்பம் பலிப்பதில்லை சிங்கத்திடம் – அடிபட்டு ஆவி துறக்கிறது.. இப்படித்தான் செல்கிறது.. இதையே சொல்கிறது இயற்கைச் சட்டம் !   இந்த மனிதன் மட்டும் ஏன் இத்தனை மட்டம் – தனியே ஒரு சட்டம் தன் இனத்தையே அழித்திட மட்டும் […]

சபிக்கப்பட்ட உலகு -2

This entry is part 13 of 46 in the series 5 ஜூன் 2011

-துவாரகன் வார்த்தைகளை மண் மூடுகிறது முகத்தையும் மனத்தையும் இருள் மூடுகிறது பூதத்தீவுப் புதிர்போல ஏதோ ஒன்று மனத்தீவில் ஓடுகிறது கணங்கள்தோறும் மெளனமே இலகுவாயிற்று நினைவு குமட்டுகிறது எல்லாக் கண்களும் விழித்துப் பார்க்க இயலாமை… மரணம்… உயிரின் மோகம்… ததும்பி வழிய முகத்தைப் புதைத்துக் கொண்டு நடந்தேன் நினைவு துரத்துகிறது. மறதியே! என் இருளறையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன் நீ வாழ்க இப்போது மட்டும் எல்லோருக்கும் இலகுவாய்க் கிடைக்கிறது ஒரு சுருக்குக்கயிறு. 06/2011 kuneswaran@gmail.com

அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு

This entry is part 12 of 46 in the series 5 ஜூன் 2011

திண்ணையின் நீண்டகால வாசகர்களில் ஒருவன். வாராவாரம் திண்ணையை வாசித்து வருபவன். அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு அழகாக இருக்கிறது. இலக்கியப்பயணத்தில் திண்ணையின் பணி தொடர வாழ்த்துக்கள். அன்புடன் சு.குணேஸ்வரன்

எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா

This entry is part 11 of 46 in the series 5 ஜூன் 2011

எப்போதும் ஏதேனும் சாதித்தவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமா? ஒரு சாதாரண மனிதனை பற்றி எழுதலாமே என்று தோன்றியதன் விளைவுதான் இக்கட்டுரை.   கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த ஒரு தாத்தாவின் வாழ்க்கை பற்றிய குறிப்பு இது. தாத்தாவின் பிரதான தொழில் கை வண்டியில் ”வெள்ள முறுக்கு” விற்பது. பெரும்பாலும் சின்ன வயதில் தாத்தாவின் வெள்ள முறுக்கு இல்லாமல்  ஒரு நாள் முடிவடைவதே இல்லை. வெள்ள முறுக்கு என்பது வட்டமானது. […]

எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்

This entry is part 10 of 46 in the series 5 ஜூன் 2011

  அதீத வாஞ்சையொன்று முட்டித் தள்ள உந்துதலில் உரைக்கிறேன் உன் பெயரை வெண்புகை குடை விரித்த மலைச் சிகரத்தினுச்சியில் காற்றில் தவழ்ந்த பெயரோ நேற்றுப் பிறந்த மழலையாய் சிணுங்கி அடர் பச்சை ஊசியிலை மரங்களின் இலைகளின் கைகுலுக்கி நீர் சுனையொன்றில் குளிக்கக் குதித்தது. மலையின் மடியில் வீசிய நெற்பயிரின் தலை கோதி நெல்மணியின் கரம் பற்றி ஊசலாடி கரைகின்றது காற்றில் இதுவரையில் உறவாடிய உன் பெயர் கூட இனியெனக்குச் சொந்தமில்லை. அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே கொடுக்கப்பட்டது. […]

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13

This entry is part 9 of 46 in the series 5 ஜூன் 2011

நிறைவாக இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். ‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; நம் பக்கம் நியாயம் இருப்பது வேறு ‘ என்பது ஒரு சிந்தனையைத் தூண்டும் முதுமொழி. ‘என் நியாயம், என் தரப்பு’ என்னும் அணுகுமுறை தனிமனித சிந்தனைத் தடத்தில் உச்சமாயிருப்பது தவிர்க்க இயலாது. அதே சமயம் புதியன- சீரியன சிந்தித்துப் பண்பாட்டுக்குச் செழிப்பூட்டியவர்களே சமுதாய சிற்பிகள். சமுதாயத்தின் நெறிகளை, பாரம்பரியங்களை, வழிநடப்பது மற்றும் […]

உறைந்திடும் துளி ரத்தம்..

This entry is part 8 of 46 in the series 5 ஜூன் 2011

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* –இளங்கோ

ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

This entry is part 7 of 46 in the series 5 ஜூன் 2011

விரைவில்..! ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ‘இலக்கியப்பூக்கள்-2’ நீங்களும் எழுதலாம். *ஒருகட்டுரை ஒரு எழுத்தாளர் பற்றி இருக்க வேண்டும். *ஒருவர் எத்தனை கட்டுரைகளும் அனுப்பலாம். *கட்டுரைகள்4/5 பக்கங்களுக்குக் குறையாமல்(புகைப்படத்துடன்) இருத்தல் வேண்டும். *கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் சுயவிபரக் கோவையையும் இணைத்தல் வேண்டும். *நூலின் பிரதி அனுப்ப அவர்களின் தெளிவான முகவரி அனுப்ப தவறக்கூடாது. அனுப்ப வேண்டிய முகவரி:R.MAHENDRAN. 34.REDRIFFE ROAD, PLAISTOW. LONDON, E 13 0JX   மின்னஞ்சல் முகவரி:mullaiamuthan@hotmail.co.uk. mullaiamuthan@gmail.com முடிவுத் […]