ஜெயகாந்தன் நினைவு அஞ்சலி மற்றும் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புச் சொற்பொழிவு.. நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் ஜூன் 13, 2015

This entry is part 24 of 24 in the series 7 ஜூன் 2015

Morning Team: Vanakkam. NJTS is proud to convene our Sindanai Vattam on June 13th, Saturdayat 9:30 am. This program has 2 important highlights. We will be having eloquent speakers talk about Thiru Jayakanthan as a tribute followed by “Sirappu Sorpozhivu”on “Mann Payanura Vaendum” by Thiru Stalin Gunasekaran, who is highly respected and actively involved in social service in Tamil […]

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

This entry is part 1 of 24 in the series 7 ஜூன் 2015

கார்டியன் பத்திரிக்கை செய்தி- டேவிட் ஸ்மித் கருப்பு திரைக்கு பின்னால் வெள்ளை துணி மீது ஒவ்வொரு சடலமாக கொண்டு வந்து வைத்தார்கள். அவர்களில் 20 வயதுமதிக்கத்தக்க மனிதரது உடல், இடது புறம் தலை திருப்பப்பட்டு அவரது தலை ஒரு புறம் உடைக்கப்பட்டு மற்றொரு புறம் தலை சிதறி இருந்தது. மற்றவர்களுக்கும் இதே போல தலை சிதறடிக்கப்பட்டு அந்த துணியை சிவப்பாக்கியிருந்தன. அந்த ஐந்து உடல்களின் மீது ஈக்கள் மொய்க்க ஆரம்பித்தன. வெளியே கோபத்துடனும் புதிருடனும் குரல்கள் எழும்பின. […]

தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை

This entry is part 2 of 24 in the series 7 ஜூன் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 71. சாவிலும் ஓர் ஆசை மிகுந்த ஆர்வத்துடன் ஊர் புறப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு வேண்டிய துணிமணிகளை பிரயாணப் பையில் எடுத்துக்கொண்டு கையில் ஒரு நாவலுடன் ஆட்டோ மூலம் வேலூர் கண்டோன்மெண்ட் புகைவண்டி நிலையம் வந்தடைந்தேன். அரை மணி நேரம் காத்திருந்தேன். தொலைவில் கரும் புகையைக் கக்கிகொண்டு ராட்சத மலைப்பாம்பு போன்று கரு நிறத்தில் ரேணிகுண்டா துரித பயணிகள் புகைவண்டி பெரும் இரைச்சலுடன் பிளாட்பாரம் வந்து கிரீச்சிட்டு நிண்டது. அனேகமாக பெட்டிகள் காலியாகவே இருந்தன. […]

மிதிலாவிலாஸ்-21

This entry is part 3 of 24 in the series 7 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அபிஜித் ஹோட்டல் கிராண்ட் பேலஸில் எல்லோருக்கும் டின்னர் கொடுத்தான் கம்பெனி போர்ட் ஆப் டைரக்டர்ஸ், அவர்களுடைய குடும்பத்தாருடன், மாதுர் குடும்பம், சோனாலி, சித்தார்த்தா, ஆபீஸ் ஸ்டாப் எல்லோரும் வந்தார்கள். நிஷாவை டின்னருக்கு கட்டாயம் வரச் சொல்லி அபிஜித் தானே சுயமாக போன் செய்து அழைத்தான். சாரதா மாமியும் டாக்டரும் வந்தார்கள். “மைதிலி! நான் நிஷாவுடன் கொஞ்சம் பேச வேண்டும். சித்தார்த்தாவைக் கவனித்துக் கொள். அவன் யாரிடமும் அதிகமாக […]

வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 4 of 24 in the series 7 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து… வைகறை [ 1979 ] அடைக்கலாப்புரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] கிராமத்துக்காரர். பள்ளி ஆசிரியரான இவர் தற்போது புதுக்கோட்டைவாசி. இது இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இவர் நந்தலாலா.காம் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். 64 பக்கங்களில் 54 பக்கங்கள் இவர் குழந்தை ஜெய்குட்டி பற்றிய பாசத்தைக் கவிதைக் கோப்பைகளில் நிரப்பித் தந்துள்ளார். பருகும்போதே திராட்சை ரசத்தின் […]

இரை

This entry is part 5 of 24 in the series 7 ஜூன் 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ———- மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப்பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள் கடந்தும் அவன் கண்களில் நங்கூரமிட்டிருக்கும் அச்சத்தை உணரமுடிகிறது என்னால். இவனுடன் பிடிபட்ட நான்குபேர்கள் தனது கண்ணுக்கு முன்பாகவே […]

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

This entry is part 6 of 24 in the series 7 ஜூன் 2015

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் […]

அப்பா 2100

This entry is part 7 of 24 in the series 7 ஜூன் 2015

– சிறகு இரவிச்சந்திரன். அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு ப்ளூ டேயா? மனதில் எண்ணம் ஓடியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் நூறு வருடங்களைக் கடந்ததில், பூமி வெகுவாக மாற்றங்களைப் பெற்றிருந்தது. அதில் ஒன்று தான் நிறம்மாறும் நாட்கள். பூமியின் அதிபர், பல விஞ்ஞானிகளை, சாஸ்த்திர வல்லுநர்களைக் கொண்டு வரையறுத்த நிறக் கோட்பாடுதான், இன்று பூமி முழுவதும் நிலவுகிறது. கணினியின் உதவிகொண்டு, பல நிறச்சேர்க்கைகள் […]

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

This entry is part 8 of 24 in the series 7 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன். ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல அவர் தோற்றத்தால் ஒரு ஒல்லிக்கண்ணன். பூஞ்சை உடம்பு. குரல் அதைவிட சன்னம். சிறகு இதழை அவருக்கு அனுப்பியிருந்தேன். அப்போது என்னுடன் வங்கியில் பணிபுரிந்த வெங்கட்ராமன் ஒரு இலக்கிய ரசிகர். சிறகின் நிரந்தர நன்கொடையாளர். அவரும் அதே லாயிட்ஸ் காலனியில் வேறொரு குடியிருப்பில் இருந்தார். “ வல்லிக்கண்ணன் இங்கேதான் இருக்கார்! தெரியுமா? “ […]

வரைமுறைகள்

This entry is part 9 of 24 in the series 7 ஜூன் 2015

நடராஜன் பிரபாகரன் இந்த முறை எப்படியும் தீபாவளிக்கு ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் மாறன். டீம் லீடரிடம் இருந்து முதலில் அனுமதி வாங்கி, பின்னர் மேலாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர் மனித வள துறை மேலாளரிடம் ஒப்புதல் பெற்று அதற்கு பின்னர் ஊர் போய் வருவது என்பது சுலபமான காரியம் இல்லை. பரமபத விளையாட்டாய் தினசரி வாழ்கை போய்க் கொண்டு இருப்பதாக நன்றாகவே புரிந்தது. கொஞ்சம் நாள் பல்லைக் கடித்துக் […]