இதுவரை ஊழல் எதிர்ப்பாக வந்த படங்களின் கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். கொஞ்சம் முருகதாஸின் ரமணாவை எடுத்துக் கொண்டு வசனங்களில் சில சித்து வேலைகளைச் செய்து ஓரளவு பார்க்க கூடிய படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் உண்டு. அரவிந்த் சிவசாமி ( ஜெயம் ரவி ) கல்லூரி படிப்பு வரை, வெளியுலகமே தெரியாமல், காந்திய வழியில் வளர்ந்த இளைஞன். வேலை அவனை வெளியில் தூக்கிப் போடுகிறது. நேர்மை, நாணயம், கட்டுப்பாடு, கடமை என்பதெல்லாம் வெறும் […]
1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். 2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை அற்றவன். 3.இந்திரனுக்கும் லட்சுமணனுக்கும் ஒரே திறமையும் ஆற்றலும் இருக்க, இந்திரன் ஏன் தோற்றுப்போனான்? இந்திரனுக்கு அறம் துணைக்கு வரவில்லையே ஆகத்தான். 4.பூசாரிகளே மொத்த பேராசைக்கும் உபயதாரர்கள். 5.விசித்திர வார்த்தைகளுக்கு அலைவதும் அவற்றின் உச்சரிப்புகளைச் சொல்லியே காலம் கடத்துவதுமா கற்றவர் வாழ்க்கை. 6.1914 ஆம் ஆண்டு இந்தியாவில் காலராவும் பிளேக்கும் விழுங்கிய மனித உயிர்கள் 46,49,663 […]
உங்களின் சமூகக் கட்டமைப்புள் நான் கட்டுப்படவில்லை என்ற கோபம் உங்களுக்கு.. கட்டமைப்புள் கட்டுப்படாத பெருமை எனக்கு… நீங்கள் சரியென நினைப்பவை அனைத்தும் அபத்த ரூபத்திலழுத்தும் என்னை… என் வழியில் நீங்கள் கடந்து போகலாம் ஆனால் என்னை தள்ளிவிட்டுப் போகவோ அல்லது இழுத்துப் போகவோ நான் சம்மதிக்கவே மாட்டேன் உங்களிடம் இருப்பதோ.. என்னிடம் இல்லாததோ எதுவாயினும் உங்கள் வழி வந்து கேட்பதற்குப் பதிலாய், என்னிடமிருப்பதைக் கொண்டு நான் பேரானந்தமடைவேன் உங்கள் கூண்டுக்குள் நீங்கள் சுழலுங்கள், எந்தன் வெளியில் நான் […]