1967 ஆண்டு தமிழக வரலாற்றில் ஓர் திருப்பம். சீதாலட்சுமி செலவத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. காங்கிரஸ்கட்சி அரியாசனத்திலிருந்து கீழிறக்கப்பட்டு திராவிடக் கட்சியை அமர்த்திய ஆண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானார். அவரிடம் நீதி கேட்டுப் போராடவேண்டிய சூழலில் நான் தள்ளப்பட்டேன். அண்ணாவின் கருணையால் போராட்டம் வென்றது. இது எங்கும் பதியப்படாத ஓர் செய்தி. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பதிய வேண்டிய கடமை எனக்குண்டு. அது என்ன என்று சொல்லும் முன் பல […]
1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு நான். நான் தான். மகாலிங்கய்யன். வரதராஜ ரெட்டி. எவனுமில்லை. ஸ்திரி சம்போகத்திலும், ஜெயிலிலும், பிச்சை எடுப்பதிலும், தெய்வம் தொடங்கி நான் தெண்டனிட வேண்டிய, பிரியம் காட்ட விதிக்கப்பட்ட, இக்கிணியூண்டாவது எனக்கு வேண்டப்பட்டவர்களாக நான் நினைக்கிற மனுஷர்கள் வரை அநேகம் பேருக்குக் கடுதாசி எழுதியும் ஒரு ஜீவிய காலம் முழுசையும் போக்கினவன். இன்னும் இது பாக்கி இருக்கா, எப்போ எப்படி முடியும் என்பதொண்ணும் தெரியாது. தெரிஞ்சு என்ன ஆகப் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவும் பகலும் காத்துள்ளேன் எவளோ ஒருத்திக் காக வருவாள் எனும் நம்பிக்கை யோடு. வழிமேல் விழி வைத்து, ஏங்கித் தவித்துத் தாகம் மிகுந்து என் செவிகளைத் திறந்து. எச்சரிக் கையோ டுள்ளேன் ! அமைதி யின்றி எதிர்பார்க்கும் மனம் அடிக்கடி அவள் முகத் தெரிசனத் துக்கு. பூந்தோட் டத்தில் அழைக்கும் புள்ளின அரவமும் துள்ள வைக்கும் என்னை ! வருவ […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”ஒரு விஷயம் கேட்கலாமா, ரோசி?” என்று கேட்டேன். ”அந்தப் புத்தகத்தில் குழந்தையின் மரணத்திற்கப்பாலான சம்பவங்கள், அவை நடந்ததா?” என்னை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தாள். அவள் அதரங்கள் சுழித்து சின்னப் புன்னகை. ”ம். அதெல்லாம் எத்தனை வருஷத்துக்கு முந்தைய கதை. எனக்கு அதைச் சொல்றதில் எந்த விகல்பமுங் கிடையாது. அவர் அதைச் சரியா யூகிச்சதாச் சொல்ல இயலாது. அது அவரோட கற்பனைதானே? அவருக்கு இதெல்லாம் தெரியும்ன்றதே எனக்கு ஆச்சர்யம். […]
இறக்கை முளைத்த குண்டூசிகள் எனும் கொசுக்களின் ஊசிகள் அல்ல இவை. நமக்கு நாமே மருத்துவம் செய்து கொள்ள போட்டுக்கொள்ளும் ஊசிகளே இந்தக்காட்டின் பூக்கள். சங்கரன் கோயில் ================== தபசுக் காட்சி சப்பரங்கள் திரும்பிவிட்டன. சரித்திரங்கள் திரும்பவில்லை. அம்மா ====== சொல்லி அடித்து கில்லி ஆடினாலும் வில்லி இல்லை என்று சொல்லி விட்டார்கள். அலாவுதீன் பூதம் பெட்டியில் இருக்கிறது. கலைஞர் ======== சங்கத்தமிழ் எட்டுத்தொகை யெல்லாம் துட்டுத்தொகையாய் தொண்டர்களுக்கு தெரிகிறது. “கணவாய்”வரலாறுகள் கவைக்கு உதவாது. அதனால் வந்த “சங்கடங்”கோயில் […]
– ஜெயந்தி சங்கர் நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் கலாசாரத்திலும், உலகக் கலாசாரத்திலும் மஞ்சள் ஆறு மிக பிரமாண்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. யாங்ட்ஸூ மற்றும் மஞ்சள் ஆகிய இரு ஆறுகளும் கலாசாரத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியுள்ளன. குறிப்பாக, மஞ்சள் ஆறு இதற்காற்றிய பங்கு அளவற்றது. நன்கு தூளான சுண்ணாம்பு கலந்த ஆற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கக் கூடும் என்பார்கள். இவ்வாற்றில் […]
நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவருக்கு ரெகுலர் கஸ்டமர் நீ….இப்போ தீடீர்னு என்னை சொல்லச் சொன்னா எப்டி? நீயே சொல்லிடு….அதுதான் சரி…. – நாதன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். சும்மாச் சொல்லுங்க ஒரு நாளைக்கு…பரவாயில்லே… உறாங்…அதெப்படீ? நா அவர்ட்ட இதுநாள் வரை பேசினது கூட இல்லை…முத முதல்ல போய் அவர்ட்ட இதைச் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது… தெரு ஆரம்பத்தில் […]
எழுதியவன் தமது குறைகள் எதையும் சொல்ல விழையாத நாட்குறிப்பு போல உன் பேச்சு இன்று செயற்கையாக இருக்கிறது பலநாட்கள் தூசி படிந்து திடீரெனப்பெய்த மழையில் கழுவிவிடப்பட்ட இலைகள் போல உன் பேச்சு இன்று இயற்கையாக இருக்கிறது. நாட்குறிப்பின் பக்கங்கள் போலிருக்கும் இலைகளை அந்த மரம் உதிர்த்து விடும் பொழுது உன்னிலையை என்னவென்று அழைப்பது ? – சின்னப்பய
காற்றில் இடைவெளிகள் தேடி அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம் அணுக்களாய் நாமும் மாறி அங்கு சென்று வாழ்ந்திடுவோம்… ஆறு குளங்களும் வேண்டாம் ஆறு சுவைகளும் வேண்டாம் ஆறாம் விரலொன்றே போதும் ஆறாக் காயங்கள் ஆறும்… ஆறு நதிகளும் மற்றும் ஓடை வயல்களும் வற்றும் ஆறுதலாய் நாமிருக்க ஆறாம் அறிவொன்றே போதும்… ஆண்டுகள் நூறு செல்லும் தூரத்தை அடைவோம் நொடி ஒன்றில் சென்று.. ஆரும் காணாத தேசத்தை ஆள்வோம் ஒன்றாக இணைந்து… “காலவெளிகளை”க் கடந்து செல்லுவோம் யுகங்கள் பலவற்றைக் கண்டு […]
இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது. இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை” கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்: “சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு […]