இதற்குத்தானா?

This entry is part 9 of 9 in the series 30 மார்ச் 2025

    ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி,  ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின்,  காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள்.  தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது . ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே.  இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை […]

பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா ! 

This entry is part 8 of 9 in the series 30 மார்ச் 2025

பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா !  பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர் ! !                                                                              முருகபூபதி எமது தமிழ் சமூகத்தில்  தமது தொழில்சார் அனுபவங்களை படைப்பிலக்கியத்தில் வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு. எனினும், தமிழர்கள்  புலம்பெயர்ந்த  நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு […]

ஓலைச்சுவடி

This entry is part 7 of 9 in the series 30 மார்ச் 2025

கைத்தவறி விழுந்த  காலத்தை தேடுகின்றேன்.  உங்களின் லாந்தரில்  இன்னும் கொஞ்சம்  வெளிச்சம் தெரிகின்றது  வீடோ காடோ எனக்கு வேண்டியது  கவிதை எழுத  கொஞ்சம் வெளிச்சம் ஒரு துண்டு நிலம்.  நான்  மில்டன் இல்லை, இழந்த சுவர்க்கத்தை மீட்க.  என்னிடம் கண்களில்  இன்னமும் பார்வை இருக்கின்றது  உதிக்கும் சூரியனைப்பார்க்க  மேகத்தோடு மோகம் கொள்ளும்  நிலவைப்பார்க்க.  நுனிப்புல்லில்  மிளிரும் பனித்துளிப்பார்க்க  வசந்தக்காலத்தின்  பரவசத்தைப்பார்க்க  உங்களின்  ஓலைச்சுவடி கவிதையும் வாசிக்க.   ஜெயானந்தன். 

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ்

This entry is part 6 of 9 in the series 30 மார்ச் 2025

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ், 23 மார்ச்., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா அனுராதா க்ருஷ்ணஸ்வாமி வினோத்குமார் சுக்லா கவிதைகள் ராமலக்ஷ்மி கட்டுரைகள் கலை/ஆளுமை/இலக்கியம் வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம் ரா. கிரிதரன் ’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்   எஸ்ஸார்சி சமூகம்/புத்தக அறிமுகம் தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும் சுந்தர் […]

சாளரத்தின் சற்றையபொழுதில்

This entry is part 2 of 9 in the series 30 மார்ச் 2025

ரவி அல்லது மிடறுகளின் சுவையில் மிதந்து கிடக்கிறது வெளி. வெற்றுக் கோப்பையின் இறுதிப் பருகலில்தான் உயிர்த்திருக்கிறது தருணம் அழைத்துவிட்ட ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து. யாவற்றுக்குமான இந்த அனுசரணையில் இச்சொற்களுக்கு மட்டும்  தேவையாக இருக்கிறது  கதகதப்பூட்டும் மௌனம் இத்தனிமையின் ஓய்வைப்போல. *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com

ஆபிரிக்காவின் மாறா நதிக்கரையில்…

This entry is part 1 of 9 in the series 30 மார்ச் 2025

குரு அரவிந்தன் இருண்ட கண்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட ஆபிரிக்காவின் கெனியா நாடு, சுமார் 224,081 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. சுமார் 245 மைல் நீளமான மாறா என்றதொரு நதி தெற்கு நோக்கிச் சென்று, விக்ரோறியா ஏரியில் சங்கமிக்கின்றது. இந்த ஆற்றை ‘மரண ஆறு’ என்று உள்ளுர் மக்கள் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த ஆற்றில் உயிர்ப்பலி எடுக்கும் முதலைகளும், நீர்யானைகளும் நிறைந்திருப்பதுதான். இந்த ஆற்றின் கரைகளில்தான் மாசிமாறா தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. இங்கே உள்ள […]

மருள் விளையாட்டு

This entry is part 3 of 9 in the series 30 மார்ச் 2025

 வசந்ததீபன் ஞானஸ்தானம் பெறுகிறார்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம் தரித்திரம் வாசற்படியில் படுத்துக் கிடக்கிறது நொய்யல் அரிசியை கஞ்சி வைக்கிறாள் கிழவி நீண்ட நாள் பட்டினி முடிவாகும் நாயுக்கு கொஞ்சம் ஊற்ற நினைத்தாள் பூசணிக்கூடால் ஆன தம்பூரா மீட்டி வருகிறான் குறி சொல்லி பண்டாரம் தெருக்களில் இரந்து பாடுகிறான் தோளில் ஊசலிடும் துணித்தொங்கலில் காற்றுதான்நிரம்புகிறது ஆட்டை உரிக்கிறார்கள் தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள் பக்குவமற்ற அவனால் பிரச்சனை பக்குவமான இவனால் குழப்பம் அலைகள் ஓய்வதில்லை […]

வடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவு

This entry is part 4 of 9 in the series 30 மார்ச் 2025

குரு அரவிந்தன் ஐஸ்லாந்து என்ற ஒரு சிறிய தீவு அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இருக்கின்றது. 103,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட, ரெக்காவிக்கைத் தலைநகராகக் கொண்ட இந்த எரிமலைத் தீவுக்குச் செல்வதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. படகில் சென்று வடதுருவத் திமிங்கிலங்களை அருகே பார்க்கக்கூடியதாக இருந்தது. இத்தீவில் சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். நான் பயணத்தை முடித்துக் கொண்டு வந்ததன் பின் ஒருநாள் 24 மணி நேரத்தில் சுமார் 2200 நிலவதிர்வுகள் இத்தீவில் […]

கடல்  

This entry is part 5 of 9 in the series 30 மார்ச் 2025

நவநீத கிருஷ்ணன்  லட்சம் கோடி காதல் கண்ட கரை கொண்டவள்  நீ காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி  நீ நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து  நோகிறாய் நீ பேர் ஆழம்  பெரு அகலம்  கொண்டு பேரன்பு என்ன என்று  புத்தி சொல்கிறாய், அதை கத்தி சொல்கிறாய்  கேளா காதும்  பாரா கண்ணும்  கொண்ட  மானுடர் நாங்கள் என்றறியாத நீ