எஸ்.எம்.ஏ.ராம் 1. என் நிழலில் என் சாயல் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் சாயல் இல்லை. என் நிழலில் என் நிறம் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் நிறம் இல்லை. எல்லாம் சாயல் அற்று, அல்லது ஒரே சாயலாய்- எல்லாம் நிறம் அற்று, அல்லது ஒரே நிறமாய்- எதையோ உணர்த்தும் நிழல்… 2. நானும் அவளும் விலகி நிற்கிற நிலையிலும் எங்கள் நிழல்கள் கூடிச் சல்லாபிக்கின்றன. நிழல்களுக்குக் கற்பில்லை. […]
வே.ம.அருச்சுணன் – மலேசியா மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘சிவாஜி போஸ்’ இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்…..! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல்,வீரவேல் என்றே கொடிபிடித்து […]
நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா….. 26 ஏப்ரல் 2013—நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்…… சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு. அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், […]
என்னடா, சங்கர்! என்ன யோசனை? உங்கப்பா கூப்பிட்றார், பார்! கண்ணாடியை முகத்துக்கு எதிரே பிடித்துத் தலை வாரிக்கொண்டிருந்த சங்கரன் திடுக்கிட்டவன் போலத் தலை திருப்பித் தாயைப் பார்த்தான். ஏதோ ஆ·பீ வியமா ஒரு பிரச்னை பத்தி யோசிச்சிண்டிருந்தேம்மா. அதான் காதுல விழல்லே. இதோ போய் என்னன்னு கேக்கறேன். கண்ணாடியைச் சுவரில் மாட்டிவிட்டு, சங்கரன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அப்பாவுக்கு முன்னால் போய் நின்று, என்னப்பா? கூப்பிட்டேளா? என்றான். ஆமாண்டா. நேத்து ராத்திரி நீ லேட்டா வந்ததனால உங்கிட்ட பேச முடி யல்லை. நேத்து […]
முனைவர்,ப,தமிழ்ப்பாவை துணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை _ஜீ,வி,ஜீ,விசாலாட்சி மகளிர் கல்லூரி(தன்னாட்சி) உடுமலைப்பேட்டை, தமிழ் இதழியல் வரலாறு என்பது கி,பி, 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வந்துள்ளது, இடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள் தோன்றியவண்ணமும் மறைந்தவண்ணமுமாக உள்ளன, 1842 தொடங்கி இன்றுவரை 3000 க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன, இவற்றுள் தமிழ் இதழ்கள் 2500 க்கும் மேற்பட்டன (தமிழ் இதழியல் வரலாறு(1842-1950). ரோஜா முத்தையா நூலகத்தரவுகள்), இவ்விதழ்கள். சிற்றிதழ். […]
சுமை தாராமங்கலம் வளவன் தம்பி மாரியை முதுகில் தூக்கி தூக்கி அண்ணன் ராமுவுக்கு சலித்து விட்டது. மாரிக்கு இரண்டு கால்களும் சூம்பி உடல் பெருத்துவிட்டது. வெளியில் எங்கு போவதென்றாலும், ராமு தான் தூக்க வேண்டும். மாரி குண்டாக, குண்டாக அதன் சுமை எல்லாம் ராமுவுக்கு தான். ரோடு ஓரத்து இட்லி கடை அப்பாவும் அம்மாவும் நடத்துகிறார்கள். கடையிலிருந்து எடுத்து ஏழு எட்டு இட்லியை ஒரு வேலைக்கு சாப்பிடுவான் மாரி. அம்மாவுக்கு மாரி மேல் பரிதாபம், […]
இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும். எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்.. ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில் ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்.. நாம் அதை அனுபவிக்கும் வெகு […]
PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013 Bangalore Film Society and National Gallery of Modern Arts (NGMA) are hosting a preview screening of Papilio Buddha. It is our pleasure to invite all NECAB Matinee members for the same. Details of the screening: Venue : National Gallery of Modern Art, Manikyavelu Mansion, 49, […]
*********** முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் .. கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு – உயிர் தெளித்து மார்கழி கோலம் … – சித்ரா (k_chithra@yahoo.com)
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -46 சீதாலட்சுமி எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மனிதன் என்பவன் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் அரக்கனும் ஆகலாம். அவன் வாழ்நாளில் அவன் உலா வருவது இந்த மண்ணிலேதான். எனவே சூழ்நிலைத் தாக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது அனுபவங்களின் படிப்பினைகளைச் சிறப்பாகப் பேசுவோம். ஓர் அனுபவத்தைப் பார்க்கலாம். அவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கின்றான். இளமைப் பருவத்தில் முதல் அடி வைத்திருக்கின்றான். காணும் இடமெல்லாம் டாஸ்மார்க் கடைகள்!ஏனித்தனைக் கூட்டம்? […]