ரியாத்தின் குறிப்பிடத்தக்க தமிழர் அமைப்புகளுள் தஃபர்ரஜ்ஜும் ஒன்று. தஃபர்ரஜ் 2013 இஸ்லாமிய விழா கடந்த வெள்ளியன்று அல்முஸ்தஷார் மகிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெளலவி இப்ராஹீம் ஜும்ஆ உரையை அருந்தமிழில் ஆற்ற காரீ இம்ரான் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை நடத்திவைத்த பின்னர் விழா தொடங்கிற்று. எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற இவ்விழாவில் தஃபர்ரஜ் தலைவர் அஹமது இம்தியாஸ் வரவேற்புரை அளித்தார். துணைத் தலைவர் ஹைதர் அலி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்ச் சிலேடைப் புதிர்களை கவிஞர் இப்னுஹம்துன் பகிர்ந்துகொண்டார். குர்ஆனைப் […]
[பிப்ரவரி 15, 2013] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” டிமிட்ரி ரோகோஜின் […]
ஹெச்.ஜி.ரசூல் துனீசிய சிந்தனையாளர் பெதி பென்ஸ்லாமா தனது கப்ரிலா எம். கெல்லர் உடனான நேர்முகத்தில் இஸ்லாமிய உலகமும், உளவியல் பகுப்பாய்வு உலகமும் ஒன்றையொன்று விலக்கி வைத்துள்ளன என்பதாக குறிப்பிடுகிறார். கீழைதேய நாட்டினருக்கு சிந்தனை முறையில் உளவியல் பகுப்பாய்வு பெரியஅளவில் நிகழ்ந்திருக்கவில்லை. உளவியல் கல்வி என்பதையே அரபுநாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்படவில்லை. முஸ்லிம் உலகம் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்கிறது. இதற்கான காரணத்தை பென்ஸ்லாமா முன்வைக்கிறார். முதன்முதலில் விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்ட உளவியல் பகுப்பாய்வை கண்டுபிடித்து முன்வைத்தவர் சிக் […]