இந்தி : மகாஸ்வேதா தேவி தமிழில் : முனைவர் தி.இரா.மீனா [ ஆங்கில மூலம்] குந்தியும் அந்த மலைவாழ் பெண்ணும் ஆசிரமத்தில் திருதராட்டினனையும் , காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் பணி. மதியம் தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி […]