– நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-27 முன்னாள் இரவு விமானநிலையத்திலிருந்து ஓட்டலுக்குச்செல்லும்போதே எங்கள் குழுவினருக்கென பணியாற்றிய வழிகாட்டி காலை 9.30க்குப் பேருந்தில் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஐரோப்பியர்கள் நேரத்தை பெரும்பாலும் ஒழுங்காக கடைபிடிப்பவர்கள். பிரான்சில் நம்மவர்களோடும் பயணம் செய்திருக்கிறேன், ஐரோப்பியர்களோடும் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. நாம் அலட்சியப்படுத்துகிறவற்றில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அக்கறையே அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. முதல்நாள் பாரீஸ் விமானதளத்தில் எங்கள் வரிசையில் பின்னால் நின்றிருந்த மூவரும் ஒரு டாக்டர் தம்பதியும் அவர் சகோதரியும் (இவருமொரு […]
ஜோம்பி இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம் எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான் இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட ஆய்வுகள் […]
(NASA Trains Astronauts to Land on Asteroid before 2025) (கட்டுரை -3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் […]
ராகவன் தம்பி ஒரு பணிவான (அதே நேரத்தில் கொஞ்சம் நீளமான) குறிப்பு இங்கு முகநூல் என்று தூய தமிழில் குறிப்பிடாமல் ஃபேஸ்புக் என்று எழுதியிருப்பதை வை த்து சுத்தத் தமிழ்ப் பற்றாளர்கள் தயவு செய்து கோபம் கொள்ளக் கூடாது. அதே போல, டிப்பணி என்கிற சொல்லும் துய தமிழ்ச் சொல் அல்ல. சொல்லப் போனால் தமிழ்ச் சொல்லே அல்ல. குறிப்புரை எழுதுவதை டிப்பணி எழுதுவது என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் என்ன, இப்போதும் அதேதான். எனவே, […]
வரலாறும் நமது அடையாளங்களும் பற்றி ஜோ டி குருஸ் உரை
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை நீலகண்டன் வாசல் திண்ணையில் மேற்கு வடமேற்கில் ஆரோகணித்திருந்தான். முதுகில் உதய கால வெய்யில் இதமாகப் படர்ந்திருந்தது. கற்பகம் பின்னால் இருந்து ஆலிங்கனம் செய்த மாதிரி சுகம். அதெல்லாம் இப்போ அதிகமாகக் கிடைக்கிறதில்லை. தூரம் நின்னு போச்சு. இச்சை எல்லாம் கட்டுக்குள்ளே அடக்கிக்குங்கோ இல்லே தச்சனைக் கூப்பிட்டு பலகை அடிச்சு அரைக் கட்டுலே அடைச்சு மூடுங்கோ. போற வழிக்குப் புண்ணியம் தேடிண்டு கோவிலுக்கு நிதம் போறது தான் இந்த […]
நேற்றைய தருணங்கள் வர்ணம் மாற்றி பச்சோந்தியெ விரியும் கடந்து போன நம் வானவில் தருணங்கள். பாசாங்கு நிரம்பிச் செழியும் பிழையில்லா சொற்பூவில் தேன் பருகி மடிந்த முன்னேற்பாடிராத சாவ நேற்றைய கவசத்தை கூர்கல் மண் மோதலில் தொலைக்கச் செய்து புத்தாடை தறித்த பாம்பின் செதில். புரிதலில்லா பசப்பு மொழி வாசத்தில் வெந்து சுருண்ட விட்டில் பூச்சி உறவு. இந்ததருணங்கள காலத்தின் மூச்சைத் தின்று பகிர்ந்து கொண்டநீண்ட ஓர் முத்தத்தின் இறுதியில் சொட்டு நஞ்சின் பாய்ச்சல். அகலவாய் திறந்து […]
(1) ’அம்மா இங்க வாம்மா. * என்னம்மா * அங்க பாரேன் கிங் ஃபிஷர் ’லூசு’ மாதிரி சிலுப்புது. * அது லூசில்லமா. * பறவைக்குப் பைத்தியம் பிடிக்குமுமாம்மா? * பிடிக்குமா? பிடிக்காதா? எனக்குத் தெரியாது ‘முழிப்பேன்’. * இதன் முட்டை எந்தக் கலரும்மா? * அதன் முட்டையைப் பார்த்ததில்லை. * சும்மா சொல்லும்மா. * வெள்ளையா இருக்கலாம். * என் சின்னமகளுக்குக் கேள்விகளே முக்கியம் விடைகளல்ல. (2) கலர் கலரா அழகா இருக்கில்லேம்மா? * ‘அழகு […]
நாம் பொருட்களின் மதிப்பை உயர்த்திக் காட்ட, தங்க முலாம் பூசிய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம். அவற்றை வீட்டில் பல பகுதிகளிலும் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்போம். ஆனால் 2001 முதல் ஹாங்காங்கின் தங்கக் கழிப்பறை வசித்திரங்களில் ஒரு விசித்திரம். 380 இலட்சம் ஹாங்காங் டாலர்கள் செலவில் இதை அமைத்தவர் லம் சாய் விங் என்பவர். இரு அறைகள் முழுவதுமே 380 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, கழிப்பிடமும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கைக்கழுவும் இடமும், கழிப்பறை பிரஷ்களும், காகிதத் தாங்கும் கொக்கிகளும், […]
சிவப்பும் மஞ்சளுமாய் பழுத்த இலைகள் பாதையோரத்தில் பாதங்களைத் தொடும் தூரத்தில் ரொம்ப தூரம் நடந்துவிட்டேன் ஒவ்வொரு விடியலும் வெவ்வேறு முகங்களுடன் தனியாகவே நடக்கின்றன என்னைத் தொலைத்தப் பாதையில். ஒவ்வொரு முகத்திலும் என் முகத்தின் சாயலைத் தேடி களைத்துப் போய்விட்டேன் எங்காவது தாகத்துடன் என் முகம் தவித்துக் கொண்டிருக்கலாம். வழிப்போக்கன் சிந்திய எச்சில் பருக்கையைத் எடுத்து தின்று விக்கிக்கொண்டிருக்கலாம். மஞ்சள் கயிற்றோடு மாங்கல்ய பெருமையை பேசிக் கொண்டிருக்கலாம். எது எனக்கான முகம் என் முகம் காட்டுவதோ உன் கண்ணாடி […]