மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் ஆத்மா வோடு உனக்கு என்ன விளையாட்டு என் ஆத்மாவின் காதலியே ! உன் பாதங்களில் வீழக் காத்தி ருக்கும் என் ஆத்மா அந்தரத்தில் மிதக்கிறது ! கைப்பற்றித் தூக்கு அதைக் கண் எதிரே நோக்கு ! புல் கட்டு அல்ல பூக்கள், கனிகள் விரிப்பல்ல மனதில் வைத்திடு அம்மனதில் மண்டிக் கிடப்பவை அவல வேதனைகள் ! ஆத்மா ஏன் அகத்தினுள் நுழைகிறது ? […]
++++++++++++++++++ என்காதல் உண்மை ++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]
நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும் கட்சிகளில் மூத்ததுக்கு , முக்கிய வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் […]
திருக்குறளைப்பற்றி ஒரு புத்தகம் எழுதப்போகிறேன் என்றேன். என்ன திருக்குறளைப் பற்றி எழுதப்போகிறீர்களா? ஏற்கனவே ஏகப்பட்டபேர் எழுதிவிட்டார்கள். சொல்லப்போனால் புத்தகம் எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப்பற்றித்தான். நீங்கள் வேறு எழுதவேண்டுமா? அதிர்ந்து போனேன். நண்பர் தமிழாசிரியர் அவர் கூறுவதில் உன்மையில்லாமல் போகாது. சிறிது நேரம் அமைதி நிலவியது. நண்பர் என்பால் இரக்கப்பட்டு சரி என்னதான் எழுதப்போகிறீர்கள்? ஒரு குறளைக்கூறி அதற்கு என்ன பொருள் கூறப்போகிறீர்கள் எனக்கூறுங்கள் என்றார். நான் சுதாரித்துக்கொண்டு நான் கூறுவதை விடத் தாங்களே கூறுங்கள் […]
கயஸ்கான் தொடர்ந்து வெற்றுக் கூச்சல்களை போட்டுக் கொண்டிருந்தான்.வெவ்வேறு குரல்களில் கூச்சல் போட்டு பழகிய வாய் ஒரு நாள் சோறு தின்ன மறுத்துவிட்டது.காபி குடிக்கவும் முடியவில்லை. தொழுகைக்கு ஸப்புகளில் நின்ற போது தக்பீர் கட்ட அல்லாஹுஅக்பர் சொல்லவும் முடியவில்லை. என்ன செய்யலாம்..என்று ஆலகால விஷமிறக்கும் நாட்டு வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டான். நாட்டுவைத்தியர் நான்கு குளுசைகளை(லேகிய மாத்திரை)கையில் கொடுத்து ஐந்து நேரம் சாப்பிட வேண்டும் என்றார். நான்கு குளுசைகள்தானே இருக்கிறது எப்படி ஐந்துநேரம் சாப்பிடுவது என்று சைகையால் கேடடபோது […]
“டாக்டர் சிவராமை சந்தித்தேன். அவர் கருத்தில் ராஜேந்திரன் ஒரு பக்கம் கடுமையான மன அழுத்தத்திலும் மறுபக்கம் கற்பனாசக்தியுடைய எழுத்து முயற்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். விபரீதமான எதையும் வெளியுலகில் அவர் செய்யாததால் காலப் போக்கில் அவர் மனம் சமனப் படும் வரை காத்திருப்பதே சிறந்தது. அவர் மன அழுத்தத்துக்கான காரணமும் பிடிபடவில்லை. இது ஆரம்ப நிலையே. மீட்க முடியாத நிலைக்கு ராஜேந்திரன் போகவில்லை. எனவே நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. டாக்டர் சங்கீதா ‘ஈமெயிலை’ லதாவுக்கு அனுப்பிய பிறகு […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தலைவர்களைப் பாடுதல் பாரதி தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேசியத் தலைவர்களைப் பாராட்டிக் கவிதைகள் யாத்தார். காந்தியைப் பற்றிப் பாடும்போது, ‘‘வாழ்க நீ எம்மான் இந்த வையத்துள் நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி! மகாத்மா நீ வாழ்க! வாழ்க!’’ (ப.72) என்று வாழ்த்திப் பாடுகின்றார். இதனைப் போன்றே திலகர், தாதாபாய் நவ்ரோஜி, பாலகங்காதர திலகர், […]
அன்புடையீர் வணக்கம் கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின்தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு […]
அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் சென்னைக்கருகில் ஓர் மகளிர்மன்றம் அன்னை கஸ்தூரிபாய் மகளிர்மன்றம் தலைவி பங்கஜம். செயளாளர் பேபி. ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டு 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. சுறுசுறுப்பான உறுப்பினர்கள் இருப்பினும் பேபியின் கடும் உழைப்பில் பங்கஜம் ஒத்துழைப்புடன் வளர்ந்த ஓர் மன்றம். அந்தக் காலத்தில் சங்கீதம், இந்தி முதலியன கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் இருந்தன. ஆனந்த விகடன் திரு வாசன் அவர்களின் புதல்வர் […]