மோனநிலை..:-

This entry is part 2 of 43 in the series 29 மே 2011

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும் சுமக்கா மோனநிலையில் ஏன் எவருமே இல்லை..

கோமாளி ராஜாக்கள்

This entry is part 1 of 43 in the series 29 மே 2011

ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால் வாங்கவோ சென்றிருக்கலாம்.. தன் அந்தப்புரத்து ராணிகளைக் கவனிக்க ஏலாமல் யார் யாரின் அந்தப்புரத்துள்ளோ அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்கும் ராஜாக்கள். சிரச்சேதம் செய்யப்படலாம்.. சேதமுற்றே திரிவோர்க்கு சிரச்சேதம் பெரிதா என்ன.. ராஜாக்கள் கூஜாக்களாய் பின் கோமாளிகளாய்..

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)

This entry is part 21 of 43 in the series 29 மே 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !”   கலில் கிப்ரான். (Mister Gabber)     +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++       இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு […]