தக திமி தா

This entry is part 12 of 43 in the series 29 மே 2011

பொய்மைகள் திரை கட்டி உடல் மறைத்த கூடு சட்டமிட்ட மனமெனும் பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம் ஊழித்தாண்டவம் தீப்பொறி கிளப்ப உணர்வுகள் கொண்டு தீட்டிய கூரிய போர்வாள் சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும் காயங்கள் வெளித் தெரியாதிருக்க உலர்ந்து வறண்ட உதடுகளில் புன்னகை சாயம் அதிலும் தெறிக்கும் சிவப்பாய் குருதி வர்ணம் அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட சாம்பலானது பிண்டமெனும் மெய்

இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

This entry is part 11 of 43 in the series 29 மே 2011

இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி சிக்கலாகுகையில் சுவாசமோர் விசையில் மென்காற்றாகவோ புயல்மழையாகவோ ஏன் பெருமூச்சாகவும் இருத்தல் கூடும் .   ஒரு கயிற்றின் வழியில் இரு முனைகளாக வழிந்தோடுமவை வெவ்வேறு கோணங்கள் தீண்டி ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக மீளவும் சிக்கல்கள் பிரிக்கப்படாமல் அவள் மற்றும் அவன் ….   -ஷம்மி முத்துவேல்  

மிச்சம் !

This entry is part 10 of 43 in the series 29 மே 2011

சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு உதவக்கூடுமென சேருமிடத்தை மாற்றியவாறு கணத்துக்கொண்டே போனது ஓர் பயணம் … எங்கும் இறங்க மனமின்றி இருப்பின் தடயங்கள் , இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு கிளம்பும் போதெல்லாம் நினைவுகளை சுமந்து போகிற ஏதேனுமொரு திசையில் குறுக்கிடும் காகத்திற்கு தெரியாது எதிர்பார்புகளின் குவியலோடு அலையும் வாழ்வு பற்றி -கவிதா ரவீந்தரன் (kavitharaveendar@yahoo.co.in)

வழங்கப்பட்டிருக்கின்றதா?

This entry is part 9 of 43 in the series 29 மே 2011

எதற்கென்றும் நீயும் சரிபார்த்துக்கொள் தன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த உனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதா? என்று .   உங்களின் நிர்பந்தங்களை காட்டிலும் வழக்கம் போல மற்றவர்களை பின்பற்றுதல் தொன்மை தொட்டு வளர்த்து விடுகின்றன பல ஒளி ஆண்டுகளின் கனவு ஒன்று .   அதிலும் அவர்கள் கனவில் வாழாமல் என் கனவில் வாழ்வதென்பது அருவருப்பானது,அவமானமானது அப்படி மற்றவர்களின் பிம்பமாகவே இருக்க உனக்கும் தொன்மையான வாழ்வின் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றதா?   தன் இயல்பை தானே […]

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்

This entry is part 8 of 43 in the series 29 மே 2011

மன்னார் அமுதன்  படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன. இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் […]

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

This entry is part 7 of 43 in the series 29 மே 2011

சத்யானந்தன் ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகாரத்துக்கு மிக அருகாமையில் அதைப் பயன்படுத்தும் பெரு வாய்ப்புக் கொண்டோர். இவரால் பாதிக்கப் படுவோரே இன்னொரு சாரார். சமுதாயம் மற்றும் அரசாங்கம் என்னும் இரு முக்கியமான அமைப்புகள் பற்றிய ஒரு கேள்வி எப்போதும் தொக்கி நிற்கும். “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியா? மக்கள் எவ்வழி மன்னன் […]

இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா

This entry is part 6 of 43 in the series 29 மே 2011

வே.சபாநாயகம். 1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், ‘சிறுகதை உருவம்’என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா? பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்குசிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதைகளை எழுதும்போது அதைப் படிக்கப் போகிற மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக்கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடி கதையை எங்கோமுடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரைநான் ஒரு கதை கூட உருவத்தைப் பற்றி […]

பம்பரம்

This entry is part 5 of 43 in the series 29 மே 2011

மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச்  சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம் மாறி சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது சுழலும் பூமிப்பம்பரம்.

சொர்க்கவாசி

This entry is part 4 of 43 in the series 29 மே 2011

கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி தலை சுற்றிப் பார்க்கிறது சிறு விதை விருட்சங்களை. வீரியம் அடக்கின செடிகளுக்கு வெடித்தபின் வாய்க்கிறது எட்ட நினைத்த உயரம் அளந்து வைத்த அளவு. ரோஜாக்கள் மரமாவதில்லை மாட்சிமை விருது பெறுவதில்லை எனினும் கிடைக்கிறது விருதளிப்பவரின் இதயத்தில் இடம் புத்தக அடுக்குகளூடே ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும் ஒரு புதைகல்லறையும் கிடைக்கப்பெற்றவர் […]

பலூன்

This entry is part 3 of 43 in the series 29 மே 2011

அழுகைக்கு ஆர்தலாய் வாங்கப்படுகிறது சிறுமிக்கான ஒரு பலூன்…. நாள் எல்லாம் விளையாடிய களைப்பில் ஓய்வெடுக்கின்றனர் கட்டியில் சிறுமியும் ஜன்னலில் பலூனும்…. மின்விசிறி காற்றில் கசிந்து கொண்டிருந்தது பலூன்காரனின் வாய்காற்று….