Posted on November 10, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம் ! பேரளவு பேய்மழை ஓரிடத்தில் ! வீரிய வேனிற் காலப்புயல் வேறிடத்தில் ! மீறிய வெப்பக் கனலால் தானாகக் கானகத் தீக்கள் பற்றின ! வன விலங்குகள், மனிதர் புலப்பெயர்ச்சி ! விரைவாகக் கடல் மட்டம் ஏறும் போக்கைக் கூறும் துணைக்கோள் ! சூட்டு யுகப் புரட்சியில் உலகு மாட்டிக் கொண்டுள்ளது ! நாட்டு […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என் விழி மூலம் நீ பார்க்க முயல்; வாய் களைத்து போகும் வரை நான் பேச வேண்டுமா ? உன் விழி மூலம் பார்த்தால், சீக்கிரம் நம் காதல் முறிந்து போகும் வாய்ப்புள்ளது ! நாமிருவரும் தீர்த்துக் கொள்ளலாம், தீர்வு காண முடியும் நாம். சிந்தித்துப் பார் நீ என்ன சொல்கிறாய் என்று. நம் வாழ்நாள் மிகவும் குறைவு ! […]
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். கருத்துரை இலங்கையிலிருந்து வருகைதந்துள்ள எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் செங்கதிர் கலை, இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு. ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத்தொடர்ந்து அவருடனான […]
தற்போது தமிழகத்தில் தொடர் மழையும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதும், சில பகுதிகளில் வெள்ளம் உண்டாவதையும் காண்கிறோம். இதுபோன்ற சூழலில் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உண்டாகும் நோய்களில் வயிற்றுப்போக்கு முதலிடம் பெறுகிறது. வயிற்றுப்போக்கு சாதாரண நோயாகத் தோன்றினாலும் அதை முறையாக கவனிக்காவிடில் உயிருக்கே ஆபத்தாகலாம்! குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்றாகவேண்டும். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் தொற்றில் மிகவும் […]
பூர்வீக வீடெங்கள் வீடு திண்ணைவீடென்பர் அதை பெயருக்குப் பொருத்தமாய் நீண்ட பெருந்திண்ணையோடிருந்தது திண்ணையின் பகல்கள் தாத்தாவினுடையது காலையில் செய்தித்தாள் அலசுவார் நண்பர்களுடன் உள்ளூரிலிருந்து உலகஅரசியல்என மாலையில் அவரிடம் பலவித கதைகள்கேட்கும் என் பால்யம் பதின்களில் அரைக்கால் சராய்களில் பழைய கட்டைகளை மட்டையாய் பிடித்தபடி ஆடிய பந்தாட்டங்கள், பச்சை குதிரைகள்… அக்காவும் தோழிகளும் ஆடும் நொண்டி பாண்டியுமென திண்ணை முழுவதுமென் பால்யம் இரவில் உறங்கி அதிகாலையில் எழுந்து செல்லும் ஆதரவற்ற அறியா முகங்கள் யாருமில்லா இரவில் எச்சங்களைக் கழித்து […]
நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே எனக்கு ஒன்று ரூசி என்றால் அவனுக்கும் அது ருசியே இப்படித்தான் நானென்று நான் சொல்வதும் என் நண்பன் சொல்வதும் ஒன்றே புறத்தை மட்டும் சொல்பவன் நண்பனல்ல அவன் அகத்தையும் சொல்வான் தப்பான பாதையில் அவன் முள் நல்ல […]
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * நவம்பர் மாதக்கூட்டம் .5/11/17 மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “ தொழிற்சங்கத்தலைவர் பிஆர் நடராசன் நூலை வெளியிட்டார். சுப்ரபாரதிமணியன் ஏற்புரையில் :தொடர்ந்த இலக்கியச் செயல்பாடுகளில் 15 வது நாவலாக ” கடவுச்சீட்டு “ மலேசியப்பின்னணி நாவலாக வெளிவந்துள்ளது. மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் பல படைப்புகளில் […]
கோ. மன்றவாணன் பழைய திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன் நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால் அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள். தொலைதூரக் கிராமங்களில் உள்ள ஏழை வீட்டிற்கும் வந்து மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருந்தார்கள் என்று என் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன். கோவை மாவட்டம் மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவம் பார்த்த மருத்துவர் இருந்ததாகக் குரும்பப்பாளையத்தில் வசிக்கும் நாராயணசாமி என்னிடம் […]
பேராசிரியர் இரா.காமராசு தமிழில் வாசிப்பும், படைப்பும் பெருகிவருவது நம்பிக்கை அளிக்கிறது. தமிழகமெங்கும் சிறிய, பெரிய நூல் காட்சிகள் நடக்கின்றன. நூல் வெளியீடுகளும், விமர்சன அரங்குகளும் தொடர்கின்றன. அச்சு ஊடகத்தைத் தாண்டி சமூக ஊடகங்களில் படைப்புக்கள் ஊற்றுக் கண்களாய் பீறிடுகின்றன. சிலர் எழுதிய காலம் போய் பலர் எழுதத் தொடங்கியிருப்பது இலக்கிய ஜனநாயகமாகப்படுகிறது. படைப்புகளின் தனித்தன்மை, புதுமை ஆகியனவே அவற்றின் வீரியத்தை உணர்த்துகின்றன. போலச் செய்தல், கூறியது கூறல் மீறிய படைப்புகள் காலத்தால் கவனிக்கப்படுகின்றன. கவிஞர் ப.மதியழகனின் அண்மைத் […]
திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் இரண்டாம் நாள். காலையிலேயே உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினேன். காலை தியானத்துக்கு ” காரம் டியோ ” சிற்றாலயம் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் , தாதியர்கள் , தாதியர் பயிற்சி மாணவிகள், மருத்துவர்கள் கூடியிருந்தனர். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா நற்செய்தி கூறி ஜெபம் செய்தார் காலையிலேயே அவ்வாறு இறைவனை வழிபடுவது மனதுக்கு எழுச்சியையும் சமாதானத்தையும் தந்தது. அதன்பின்பு […]