தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். இதில் கண்மூடித்தனமான […]
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=50402191 உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத் திருமதி சுசீலா மிஷ்ரா (படே குலாம் அலிகான் அவர்கள் மறைந்ததும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய கட்டுரை) இசையாகவே வாழ்ந்து, இசையாலேயே இயங்கி இசையோடு தன்னுடைய இருப்பையும் உணர்ந்துகொண்ட மனிதர் நாதப்பிரம்மத்திலும் இணைந்துவிட்டார். கயல் -ஆக இருந்தாலும், சபையில் பாடும் பாடலாக இருந்தாலும், தும்ரியிலிருந்து எழும் காதல் கீதமாக இருந்தாலும், தெய்வீக உணர்வோடு பொங்கும் பஜனாக இருந்தாலும், உஸ்தாத் படே குலாம் அலி கான் […]
அணு உலை வேண்டாம் என்று ஆரவாரம் செய்வோரே! ஆட்டு மந்தைகள் கூட செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று! கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விகள் கேட்கும்! புதிய அறிவின் தீனி தேடும் தீயின் தெறிப்பு அதன் கண்களில் தெரியும். உங்கள் நுண் மாண் நுழைபுலம் எங்கே போனது? மண் மாண் புனைந்த பாவைகளா நீங்கள்? அரக்கர்கள் அமைத்த அரக்கு மாளிகையா அணு உலைக்கூடம்? அணுவை பிளக்கும் அழகிய கற்பனை அவ்வை பிராட்டி அன்றே சொன்னார்! “அணுவைத்துளைத்தேழ் கடலை […]
4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம் கருதியேனும் சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு. ’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா? பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_ புதைகுழிகளும் பேரழிவுகளும். 5 கவியும் இருளில் சில சமயங்களில் நிலாவாகிவிடுகிறேன் நான்! இரு இரு – கனிந்து மெழுகென உருகும் என்னிடம் சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து எந்தப் புண்ணியமுமில்லை; […]
தொலைக்காட்சியில் மழை கண்டு அலைபேசியில் ஊரழைத்தால் தொலைபேசியில் சப்தமாய் மழை சாளரம் வழியாக சாரலாய் மழை கூரையின் நுனியிலும் குட்டிக் குற்றாலமாய் மழை கத்திக் கப்பல்களும் காகிதக் கப்பல்களும் கரை சேரவில்லையாம் கனுக்கால் வரை மழை மின்சாரம் வெட்டுப்பட முட்டை விளக்கின் மட்டுப்பட்ட வெளிச்சத்தில் முகங்களில் மழை இரவின் இருளில் மழை பெய்வதில்லை அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அடைமழை காலத்தில் குடைமேல் மழை […]
ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு இயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர். பாங்கு ஒலி கேட்டு நான்கு மணிக்கு எழுந்து ஸுபஹு’வுக்கு செல்ல கிணற்றடியில் குளித்துவிட்டு தொம்தொமென்று மரப்படிகளில் ஏறும் தம்பி அந்தோணிக்கு வாய்க்காதது , “இண்ணல ராத்திரி முழுவன் வயிற்றிலெ வாயு […]
நாகரத்தினம் கிருஷ்ணா இலைய எரென்பர்க் (Ilya Ehrenbourg, புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர்களில் ஒருவர். ஸ்டாலின் ஆட்சியின் கொடூரத்தை நேரில் கண்டவர். ‘மருத்துவர்கள் கூட்டு சதி’ என்கிற பிரச்சினையைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டபோது குறிப்பாக யூதர்கள் பலர் கைதானபோது இவரும் பிறப்பால் யூதர் என்ற நிலையில் கைது செய்யப்படவேண்டியவர். ஸ்டாலின் மரணம் குறித்து இவரிடம் சில உண்மைகளிருந்தன. எரென்பர்க் மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளக்கூடியவராக இருந்தார். அவற்றில் பிரான்சுநாடும் ஒன்று. அவருடைய பாரீஸ் நண்பர்களில் ழான் […]
அன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இத்துடன் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். தவறாது பங்கேற்கவும். நண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும். நன்றி அன்புடன் வே அலெக்ஸ்
யாழ்ப்பாணத்தில்” ஒரு பிரபஞ்சம்.(LOOP QUANTUM GRAVITY AND STRING THEORY) ==================================================== இ.பரமசிவன் குவாண்டம் மெகானிக்ஸ் 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நுட்பம் செறிந்த கோட்பாடு. இயற்பியல் வல்லுனர்களுக்கு ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த “பொது சார்பு”க்கோட்பாடு கணித சமன்பாடுகளின் அழகு மிக்க பூங்காவாக எப்படித் தோன்றுகிறதோ அது போலவே குவாண்டம் மெகானிக்ஸின் நிரலியல் கணிதங்களின் (Matrices) புதிய புதிய வடிவங்கள் அவர்களை மெய்சிலிர்க்கச்செய்கின்றன. அடிப்படை ஆற்றல்களான மின்காந்த , வலுவற்ற,வலுமிகுந்த(அணு ஆற்றல்)மற்றும் ஈர்ப்பு ஆகிய நான்கிலும் குவாண்டம் […]