இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய ஒவியங்களுக்கு ஏற்படுத்தியுள்ள கவனிப்பு பற்றி, பேசியிருக்கக் கூடும். ஆனால் தமிழகத்து ஒவியர்களுக்கு அப்படியான சிந்தனைகள் செல்ல வாய்ப்பில்லை. இன்னம் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியிருக்க வில்லை. ஒவியங்கள் பற்றி, தம் புதிய முயற்சிகள் பற்றி, […]
அன்புடையீர், வணக்கம். ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம். ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத […]
ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் கால்கள் படிகளில் ஏறினாலும் என் மனது பின்னோக்கி சென்று கொண்டே இருந்தது. பூட்டியிருந்த அறையைத் திறந்து உள்ளே சென்று அந்த ஒற்றைக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கண்ணை மூடிக் கொண்டேன். இதயம் வேதனையில் வலித்து கண்ணீர் வழிந்து காது மடலைத் தொட்டதும் சிலீரென்றது. . அந்த சோகத்திலும் ஒரு சுகமான வலியாக ‘மேங்கோ’வின் நினைவுகள் எனக்கே எனக்காக, நினைக்கவே இதமாக இருந்தது. இப்ப மங்கா….ராஜேஷைக் கல்யாணம் பண்ணீன்டு குழந்தைகளோட இருப்பா…இருக்கணம். நான் ஆசைப்பட்டவள், அவள் […]
==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் நிழல் வேண்டாம் என்று கள்ளிப்பால் ஏன் தேடினாய்? நீ வேண்டாம் உன் கருப்பை மட்டுமே போதும் எனும் அரக்கர்கள் இவர்கள். பிறவிப்பெருங்கடல் நீந்தும்போது அவன் எழுதினான் உன்னை. சௌந்தர்ய லகரி. “ஆதி” எனும் தாயே அடையாளம் நீ கொடுத்தால் தானே “பகவனும்” இங்கு புரியும். த்ரேதா யுகம் துவாபரா யுகம் கலியுகம் எல்லாம் தோப்புக்கரணம் […]
ஜோதிர்லதா கிரிஜா 3. சுவரில் சாய்ந்தவறு தளர்வாக உட்கார்ந்திருந்த லோகேசன் அவள் வீசிய குண்டுகளால் தாக்குண்டு நிமிர்ந்தார். ‘ஏ, களுத! வாய மூடு. நீ உன் அத்தானைத்தான் கட்டணும். இல்லாட்டி, கொலை விழும்,’ என்றார் காட்டமாக. அத்தை பாக்கியமோ முகம் சிறுத்து உட்கார்ந்திருந்தாள். ‘என்னால முடியாதுப்பா.’ ‘ஏன் முடியாது?’ – லோகேசன் கையை ஓங்கிக்கொண்டு எழுந்தார். ‘எனக்குப் பிடிக்கலைப்பா. ஆசைப் படுறதுக்கும் ஒரு அளவு வேணுமில்ல?’ – இவ்வளவு அப்பட்டமாய்ப் பேச அவள் விரும்ப வில்லை யானாலும், […]
16. தத்துப் பிள்ளையாய் கழகத்தில் இருந்த போது மாணவர்களுக்கு வெளி உலக விசயங்கள் மேல் கவனம் செலுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. தினப்படி காரியங்கள், பயிற்சிகள், வகுப்புகள் என்று தினம் போவதேத்தெரியாது. ஆசிரியர்களை மகிழ்விக்க மட்டுமே இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற சீன நாடகம் ஒபராவில் பங்கேற்கவே இத்தனைக் கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தன. வித்தைகள், மேடை சாகசங்கள், நடிப்பு, பாட்டு என்று அனைத்து விசயங்களையும் கற்க வேண்டியிருந்தது. அதை உணரும் வகையில் சானும் அவனது உடன் […]
அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் முதன் முதலில் தோன்றிய இடம் திரௌபதியின் சுயம்வரமண்டபமாகும். இது மகாபாரதத்தின் மூல நூலிலிருந்து வந்தது என்பதற்கு காரணங்கள் உள்ளன. இருப்பினும் திரௌபதி யாககுண்டத்தில் அக்னியிலிருந்து தோன்றியவள் என்பதையோ அவளுக்கு ஐந்து கணவன்மார்கள் என்பதையோ என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் திரௌபதி துருபத ராஜனின் மகள் என்பதை நம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே போல் அவளுடைய சுயம்வரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடும் வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்று அர்ஜுனன் […]
ஜோதிர்லதா கிரிஜா “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” – இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமின்றி, பிறரை நிறையவே சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்தும் வாழ்ந்த மேதை அவர். ஏட்டுக் கல்விக்கும் மேதைத்தனத்துக்கும் தொடர்பு இருந்துதான் தீர வேண்டும் என்பதாய்ப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் விதிக்கு அவர் விலக்கானவர் – பெருந்தலைவர் திரு காமராஜ் அவர்களைப் போல. (என்.எஸ். […]