உஷாதீபன் ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் […]
(ஓர் அறிவியல் மாணவன்) வைரமுத்துவின் அண்மைய பெஸ்ட் செல்லரான “மூன்றாம் உலகப் போர்” நாவலில் எமிலி டேவிட் என்னும் அழகான அமெரிக்கப் பெண் வருகிறாள். அவள் நியூ சயண்டிஸ்ட் இதழில் எழுதிய ஒரு கட்டுரை இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது. புவி வெப்பமடைதலினால் ஏற்படும் வேளாண்மையின் வீழ்ச்சி பற்றி அது பேசுகிறது. கட்டுரையின் தலைப்பு தமிழ் மொழி பெயர்ப்பில் “போருக்கு எதிரான உலகப் போர்” என்று இருக்கிறது. ஆங்கிலத்தில் என்னவாக இருந்திருக்கலாம் என யூகமாக மொழிபெயர்த்தால் […]
ஆனால் அந்த நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாட்கள். க.நா.சுவின் எழுத்துக்களை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும் போது நான் அடைந்த உற்சாகம் சொல்லித்தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல. தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிகள். மற்ற மொழிக்காரர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்குகள் எல்லாம் தமிழை ஆக்கிரமித்திருந்த வெகுஜன கலாச்சாரத்தை நிராகரிப்பதாகவும், இதற்கு எதிரான க.நா.சு. வின் எழுத்தையும் குரலையுமே எதிரொலிப்பதாகவும் இருந்தது. அதை நான் ஒவ்வொரு […]
பொன்மலை ரயில்வே ஸ்டேஷனின் மேற்குப் புறத்தில் குறுக்கில் கிடக்கும் தண்டவாளங்களைத் தாண்டி வகிடெடுத்த மாதிரி போகும் ஒத்தையடிப் பாதையில் நடந்தால், கால் மணி நேரத்தில் சங்கிலியாண்டபுரம் போய்விடலாம். அந்தச் சங்கிலியாண்டபுரத்தில்தான், என்னோடு கொஞ்ச நாள் ஸ்கூலிலும் பின் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருக்கும் இருதயராஜ் மார்க்கின் வீடு இருக்கிறது. நான் இதுவரை அவன் வீட்டிற்குப் போனதில்லை. அவன் அப்பா ஒரு முசுடு என்றும் வீட்டில் இருப்பவர்களும் எப்போதும் தொணதொணப்புதான் என்று அவன் ஏற்கனவே சொல்லியிருந்ததால் நான் அங்கு போனதில்லை. […]
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் என்று பத்மினி பாடுவார். மனித முக பாவங்களில் நவரசம் மட்டும்தான். ஆனால் நாம் அதற்கு மேலும் ரசங்கள் தயாரிக்கலாம். நான் சாப்பிடும் ரசம் பத்தி சொல்றேன்பா. குங்குமம் தோழியில் இணைப்புக்காக இப்ப குளிர்காலம் ஆயிற்றே என ரசம் டிப்ஸ் அனுப்பி இருந்தேன். அது பிரசுரமாகி இருக்கு. பொதுவா நாம சாம்பார் சாதம் , வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்ட பின்னாடி ரசம் சாதம் சாப்பிடுவோம். சிலர் ரசத்தை குடிக்கக்கூட செய்வாங்க. […]
“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு…” பாரதி மும்பை நகர் வீதிகளில் தேடினான். கவிதை என்றால் இலக்கியம் நினவுக்கு வந்தது. “காண்டேகரின்”எழுத்துக்களின் மின்னல் பீலிகளாய் அந்த “கிரவுஞ்ச வதம்” அவன் கண்ணுக்குள் நிழல் காட்டியது. அந்த காவியக்கசிவோடு “சேரத்து தந்தம்”தன்னை பண்டமாற்றம் செய்ய தேடினான் தேடினான் ஒரு மராட்டியனை. அன்று அங்கே எல்லோரும் தேடித்தேடி தேம்பினார்கள் ஒரு மராட்டியனை. ஆனால் அந்த பேனா பிடித்த மராட்டியனுக்குப் பதில் அவன் பார்த்ததெல்லாம் வாள் பிடித்த மராட்டியன்கள் தான். வாள் […]
SAND AND FOAM (Khalil Gibran) (4) பவள சங்கரி செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு. நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு. நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ? நீவிர், பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும், உண்மையில், பின்னரும், வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான […]
பலி மாக்கல் நந்தி வளருகிறதாம் பிள்ளையார் பால் குடிக்கிறதாம் மண்ணடி இயேசு மறுபடி வருவாராம் புத்த பிக்குகள் அஹிம்சையை தொலைத்துவிட்டார்கள் பாம்பு சீண்டினால் தான் சீறும் கங்கையில் தொலைப்பதற்காகத்தான் பாபங்களை சுமக்கின்றீர்களா பணமுதலைகளா வாருங்கள் உங்களுக்கு தங்கத்திலான சிலுவை தயாராக இருக்கிறது பரலோகத்திலும் பாகுபாடு காட்டினால் இகலோத்தில் வாழ்வு இம்சையாக ஏன் இருக்காது ஒருமனதாகச் சொல்லுவோம் எல்லாவற்றுக்கும் காரணம் மதம் தான் என்று போருக்கு பலி கொடுக்க அரவானைத் தேடும் உலகமிது. ————————————– கொலை தெய்வம் சும்மா […]
கனவிலாவது பெருங்கனவானாக இருக்கக் கூடாதா சுற்றம் இவனிடம் பவிசாக நடந்து கொள்ளக் கூடாதா நடப்பவை தெரியவந்தால் அசுவாரஸ்யம் ஏற்படாதா மாரிக்காலத்தில் ஒளிந்து கொள்ளத் தெரியாதவன் பகலவனா தேவதாசிகளின் அழகு அத்தனையும் முருகனுக்கா காடு,மலை,கடல் நவகிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்வதில்லையா அன்னாபிஷேகத்துக்கு பசியோடு வரலாமா வரம் கொடுப்பவன் சிவனென்றால் வதம் செய்வது விஷ்ணுவா பாழடைந்த கோவிலில் இருப்பது அம்பாளுக்கு விருப்பமென்றால் நான் என்ன செய்வது தேர் நிலையை அடைய வடம் பிடித்தால் மட்டும் போதுமா மூலவர் பேச ஆரம்பித்ததால் […]