அன்புள்ள திண்ணை வாசகர்களே ! எனது புதிய நூல் “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு இப்போது தாரிணி பதிப்பக வெளியீடாக அதிபர் திரு வையவன் வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது எத்தனை பெரியது ? பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு […]
டாக்டர் ராமசாமியின் பக்கத்துக்கு வீடு எனக்கு தரப்பட்டது. அது ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ள இரட்டை வீடுகளில் ஒன்றாகும். காலையிலேயே பணியாளர்கள் வீட்டைக் கழுவி சுத்தம் செய்தனர். அவர்களுடைய பெயரைக் கேட்டேன். அவர்கள் ஆமோஸ் என்னும் இளைஞனும் அவனுடைய மனைவி எலிசபெத் என்பவரும் ஆவார்கள்..நான் வேலைக்குச் சென்று மதியம் திரும்பியபோது வீட்டுச் சாவியை என்னிடம் தந்துவிட்டனர். நான் அவர்களுக்கு ஐந்து ருபாய் தந்தேன். அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். மாலை வேலை முடிந்ததும் […]
அருணா சுப்ரமணியன் இவ்வுலகில் அனைவரையும் ஈர்க்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது காதல் என்று சொல்லிவிடலாம். ஆனால், கணிதம் என்பதோ பலருக்கும் ஒரு கசப்பு மருந்தை போன்றது தான். இதற்குக் காரணம் கணிதம் என்பது இதுகாறும் கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தத்துவக் கோட்பாடுகளுக்கும் ஆதரவாகத் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. எண்கள், சூத்திரங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள் பெரிதும் கல்வியில் சிறக்க மட்டுமே பயன்படுகின்றன. தினசரி வாழ்க்கையில் உணர்ந்து பயன்படுத்தப்படுவதில்லை. முரண் யாதெனில் நம் வாழ்கையைப் பெரிதும் வழிநடத்துபவை எண்களே!! […]
புவி கொதித்துக் கொண்டிருக்கிறது. உயிரினங்கள் வறுத்தெடுக்கப் படுகின்றன. வளி மண்டல சராசரி வெப்பம்128°F. காற்றில் கார்பன்டையாக்ஸைட் அளவு 430 ppm ஐ கடந்தது. பிராணவாயுவின் அளவு 14.2% என்ற ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. இருநூறு வகையான பறவை இனங்கள், கொசு, கரப்பான் பூச்சி, உள்ளிட்ட பல வகையான பூச்சியினங்கள், ஊர்வன, கணக்கிலடங்கா தாவர இனங்கள், அத்தனையும் வெப்பத்தில் பொசுங்கி, அடியோடு பூண்டற்றுப் போய்விட்டன. பரவலாக ரொம்ப வயதானவர்களும், இளம் சிசுக்களும் கூட டீஹைட்ரேஷனில் மடிந்துக் கொண்டிருந்தார்கள். […]