முகராத பூ காற்றின் வாசத்தோடு பேசிவிடுகிறது இழுபறி நிலை இறுதி முடிவிற்குவருகிறது ரகசியமொன்று நெகிழ்ந்துபோய் எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது உதற இயலாதவொன்று நிழலின் சாயாலாகி அச்சமூட்டுகிறது யாரும் காணதகணமொன்று சட்டென கைமாறிவிடுகிறது பிறகு சேவல் சிறகை பூனையின் காலடியில் காண நேர்ந்து விடுகிறது
கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது ஒரு மண்புழு போல நள்ளிரவு விழிப்பில் புத்திக்கு முன் துயிலெழுந்து இடவலமாய்த் துழாவும் கைகளில் தாவி அப்பிக்கொள்கிறது சன்னலோர மரக்கிளைகளில் சிதறும் பறவைக் கொஞ்சல்களும் வெளிச்சக் கீற்றுகளையும் தட்டியெழுப்ப அனுமதிக்கிறது நேரம் தவறிய தேநீர் சிற்றுண்டி பசிக்கு கொஞ்சம் பகல் உறக்கம் தொட்டுக்கொள்ள ஒரு முட்டை இரு ரொட்டித்துண்டுகளுமென எதையும் கலைத்துப்போட்டுக்கொள்ளும் ஏகாந்த சௌகரியத்தை […]
தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில் வந்தமர்ந்து காத்திருக்கிறான் இறப்பைக் கொண்டுவரும் கடவுளின் கூற்றுவன் நிலவுருகி நிலத்தில் விழட்டுமெனச் சபித்து விருட்சத்தை எரித்துவிடுகிறேன் மழை நனைத்த எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும் இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது ஈரத்தில் தோய்ந்த ஏதோவொரு அழைப்பின் குரல் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை. * 1. லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை. “ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ] நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில். […]
ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன எலப்பையின் குரல் ஓர்மையில் இல்லை… சுட்டுவிரலால் சேனைதண்ணி தொட்டுவைத்தபோது அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்… நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில் பாதுகாப்போடு வைத்திருந்த மயிலிறகு இன்னமும் குட்டிப் போடவில்லை நாலெழுத்து படிக்கவும் நாலணாசம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா ஒரு துறவி போல உறவுகடந்து கடல்கடந்து கண்ணுக்கெட்டாத தூரத்தில் என்றேனும் ஒருநாள் வாப்பாவின் மடியில் தலைவைத்து ஓர் […]
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 […]
சமுத்திரமும் நீர்க்குருவியும் பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் முதலான இன்னும் எத்தனையோ ஜந்துக்கள் நிறைய இருந்தன. அதன் கரையோரத்தில் ஒரு நீர்க்குருவியும் அதன் மனைவியும் இருந்து வந்தன. ஆண் குருவிக்கு உத்தான பாதன் என்று பெயர். பெண் குருவிக்குப் பதிவிரதை என்று பெயர். ருது அடைந்ததின் பலனைப் பெற்று அந்தப் பெண் குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்தது. அது தன் கணவனைப் பார்த்து, […]
ஜியா உர் ரஹ்மான் Zia ur Rehman மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக் குமார் – ஒரு ஆயுத தாக்குதலில் நவம்பர் 7 வடக்கு சிந்து மாகாணத்தில் Shikarpur ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.ஊடக அறிக்கைகளின்படி, ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட இருந்த தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்கள் சார்பாக இவர்கள் தலையிட்டார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு முஸ்லீம் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்டுகிறது. பிறரது உதவி இன்றியாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஏனெனில் பிறரைச் சார்ந்து வாழக் கூடியநிலையிலேயே இறைவனால் உயிர்கள் அனைத்தும் படைக்கப்பெற்றுள்ளன. எனக்குப் பிறர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாட வேண்டி உள்ளது. இவ்வுதவியினை உபகாரம், தர்மம், என வடமொழியில் […]
சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். […]