திருமதி.லெ.ஆனந்தவள்ளி முனைவர்பட்ட ஆய்வாளர், கணேசர் செந்தமிழ் கல்லூரி, பொன்னமராவதி. முன்னுரை: இன்றைய படைப்புலகில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல வடிவங்களில் இப்பணியினைச் செய்கின்றனர். அவ்வகையில் தலித் இலக்கியப் படைப்பாளியான பாமா ‘கருக்கு” நாவலில் தம் வாழ்வையும் தலித் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எழுத்தாக்கியுள்ளார். குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஆணோடு சமத்துவம் இன்றி வாழும் தலித் பெண்கள் குறித்து பாமா கூறும் கருத்துக்களை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது. தலித் […]
இன்று, இப்பொழுது, இங்கு இயந்திரத்தின் மனசாட்சி ஒன்றை ஒளியில் ஒட்டி எனக்கு முன் வைத்தது மின்னணுக்களின் அசுரப் பயணங்கள் அதை அழுது தீர்த்திராத இந்த இரவின் தனிமையிலிருந்தவாறு என்னுடனே வந்து கொண்டிருக்கும் இருளிற்கு பரிசளித்தபடி யாத்திரைகள் நீடிக்கின்றன வேகமாகச் சுழலும் இரு சக்கரங்களை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் பாதுகாவலற்ற மனதின் இன்பத்தையும் இனம் புரியாததொரு பயத்தையும் இந்த இரவிற்கு வரமெனக் கொடுத்தது யார்..? பார்வையற்றிருக்குமிந்த கொடூர இராத்திரியின் சக்கரங்கள் ஓய்வற்று சுழல்கின்றன … *** கலாசுரன்
சுப்ரஜா, வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. ’பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்பதால் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர், கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர். நினைத்ததும், கேட்டதும் உடனே கிடைக்கும் […]
[ http://www.youtube.com/watch?v=8yBB81ifc40&feature=related ] WASP -12b and Other Exo-planets in Space] WASP -12b and Other Exo-planets in Space] [கட்டுரை: 89] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் பந்துகள் சுற்றிடும் விந்தை யென்ன ? பிண்டங்கள் கோளமான மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் நியதி என்ன ? கோள்கள் அனைத்தும் சீராக ஒரே திசை நோக்கிச் சுற்றுவ தென்ன ? ஒரே […]
ருத்ரா அதோ அங்கே ஒரு “கிரஹப்ரவேசம்” மாவிலை தோரணங்கள். மங்கலப்புகை மூட்டம். கொம்புகளை ஆட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் “கோ மாதா” மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனும் இதைத்தான் குறிப்பிட்டான். ஆ வை அன்னையாகக்கருதுவதில் பிழையில்லை. ஆனால் தமிழ் அன்னையை மட்டும் தெருவோரம் எச்சில் இலைகள் எப்போது குவியும் என்ற இடத்தில் இருத்திவிட்டு “ஹோமங்கள்” கொடி கட்டுகின்றனவே! லக்ஷ்மி ஹோமம் கணபதி ஹோமம் …….. மந்திரங்கள் திகு திகு வென்று எரிகின்றன. ஸ்லோகங்கள் எனும் ஆக்கிரமிப்பு செய்த ஓசைக்கூச்சல்களின் […]
ருத்ரா ஆம். இது இனிமேல் குப்பன் சுப்பன்களின் பார்ட்டி. தாத்தா அப்பா பேரன் பூட்டன் என்று எத்தனை நாளைக்கு “நூல்”பிடித்துக்கொண்டிருப்பது? ரத யாத்திரை போகும் அந்த ரதத்தில் ராமனை இறக்கிவிட்டு (ஊழல் பழி சொன்ன) சலவைத்தொழிலாளிக்குத் தான் இனி தூப தீபமா? எப்படியிருப்பினும் பொது ஜனம் என்றாலும் சரி மகா ஜனம் என்றாலும் சரி சாமான்யன் என்றாலும் சரி பொத்தான் அமுக்கும் போது..இந்த “பொது உடைமையை” மனதில் வைத்துக்கொண்டால் சரி. வெள்ளைக்குல்லாய்களின் கும்பமேளா போல் தெரிந்தாலும் ஊழல் […]
தி.ந.இளங்கோவன் கூடை நிறைய இலுப்பங்கொட்டைகள், கிளி கொத்திப்போட்ட பழங்களை பொறுக்கி காயவைத்தவள் அவள். சாக்கு மூட்டையில் வேப்பங்கொட்டைகள். மரம் மரமாய்ப் பொறுக்கி, தண்ணீரில் போட்டு பிதுக்கிப் பிசைந்து அலசி காயவைத்து சேகரித்தவள் அவள். பில்லறுத்துப் போட அவளின்றி காய்ந்த வைக்கோலை அரை மனதுடன் அரைத்து நிற்கிறது பசுங்கன்று. அந்திமல்லி பறிக்க அவளின்றி அங்கேயே உதிர்க்கிறது பூக்களை. அரைத்துவந்த அரிசியும் தவிடும் எட்டு போட்ட சித்திரமாய் பிரியாமல் மூட்டையிலே கிடக்குதங்கே அவளில்லாக் காரணத்தால். கல் கட்ட அவளில்லை, மரவட்டையாய் […]
குளச்சல் அபூ ஃபஹத் அன்புக்கணவா ..!!! முகப்புத்தகத்தில் உனது கவிதை வந்ததாம் – உன் வளைகுடா தனிமையை கண்ணீராய் வடித்திருந்தாயாம்….. கடிதங்கள் போய் இணையங்கள் வந்தபின் நீ நிறைய எழுதுகிறாயாம் – யாரோ தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர் நல்ல கவிதைகள் என்று….. நீ எனக்கெழுதுவது மாதமொருமுறை எனினும் தபாலில் உனது கடிதம் வரும்போது நீயே வந்ததாய் நினைத்துக்கொள்வேன்….. குடும்பத்தை விசாரித்து குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் – கூடவே நீ மாதம் அனுப்பும் பணத்தின் கணக்கையும் கேட்டிருப்பாய்….. கடிதத்தின் […]
செய்திக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். அவர் […]
மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட மரத்தின் ஆதிக் கிளைகள் காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன விருட்சங்களை வெட்டிச் செல்லும் விஷமேறிய பார்வைகளை சிற்பி காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில் வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம் எவ்வளவு ப்ரியத்துக்குரியது நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில் அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில் வன்மங்கள் கூராகின இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது புராதனச் சடங்குகளின் பிரிந்த […]