ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்பதை உணர்ந்த இவன் வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். அந்தப் பையனோடு தனித்தே நின்று பேசுவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. உங்க பேரு என்ன தம்பி? மம்மது சார்… அவன் சத்தமாகக் கூறியதைக் கேட்ட இவன், மெதுவா…மெதுவா…பொது இடங்கள்ல சத்தமில்லாமப் பேசணும்…என்றான் அவனைப் பார்த்து. சரி சார்…என்று தலையாட்டிய அவன் ‘எங்கப்பாவுக்குச் சேர வேண்டிய பணமெல்லாம் கொடுத்துட்டீங்களா சார்…? – என்றான் அடுத்தபடியாக. அவன் ஏதோ பிரச்னையோடுதான் […]
ஆர் வத்ஸலா மல்லாந்து படுத்து கருநீல வானின் வைரங்களை விடிய விடிய எண்ண ஆசைப்படும் வரை ஒவ்வொரு பூனையின் ஒவ்வொரு முகபாவமும் வெவ்வேறாகத் தோன்றும் வரை முன்பின் தெரியாத கைக்குழந்தை என்னை பார்த்து களுக்கென சிரிக்கும் வரை மரத்தில் இருந்து உதிர்ந்த மலரின் அழகை காணத் தெரிந்த வரை ஜன்னல் வழியே பறவைகளையும் பறக்கும் விமானத்தையும் கண்டு அதிசயக்கும் வரை இருக்கிறது தகுதி எனக்கு வாழ
ஆர் வத்ஸலா வேண்டியவர்களுக்கு கணினியில் மின்னஞ்சல் செய்து கொண்டு அறித்திறன் பேசியில் மற்றதை தன்னை புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டு புலனக் குழுக்களில் உள்ளூர் வெளியூர் உறவுகளுடன் நண்பர்களுடன் குறுஞ்செய்திகளில் (முகம் பார்க்காமலும் பார்த்தும்) புலன அழைப்புகளில் நட்பும் விரோதமும் பாராட்டிக் கொண்டு தேவைப்படும் பொழுது காதில் குட்டிக் கருவிகள் அணிந்து மற்றவரை தொந்தரவு செய்யாமல் இணைத்திரை ரசித்துக் கொண்டு புது செயலி வரும் போதும் தெரிந்த செயலி புது அவதாரத்தில் தெரியாமல் போகும் போதும் பேரக் […]
கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது. சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன. தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர். கூட்டம் கூட்டமாக […]
குரு அரவிந்தன் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடா எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்களின் மூன்று நூல்கள் கனடா, ரெறன்ரோவில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றன. ரொறன்ரோ கிங்ஸ்டன் வீதியில் உள்ள ஸ்காபரோ விலேஜ் கொம்யூனிட்டி மண்டபத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி, அகவணக்ம், முதற்குடிமக்களுக்கு நன்றி சொல்லல் போன்ற நிகழ்வுகள் முதலில் இடம் பெற்றன. கனடா தேடகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு. பா.அ. ஜயகரன் […]