கிளியாகிப் பறக்கும் கனி

This entry is part 11 of 14 in the series 6 நவம்பர் 2016

– சேயோன் யாழ்வேந்தன் மரத்தின் கனியொன்று இலையோடு பறந்து போவது போல் இதோ கிளி பறந்து போகிறது இந்த உலகமே நான் தான் என்பதுபோல் அந்த மரம் ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கிறது காரணத்தோடு எதுவும் நடப்பதில்லை காரணமின்றியும் எதுவும் நடப்பதில்லை அது நடக்கிறது அவ்வளவே. seyonyazhvaendhan@gmail.com

பிஞ்சு.

This entry is part 12 of 14 in the series 6 நவம்பர் 2016

இரா.ஜெயானந்தன். தொட்டிலுக்கு வெளியே – உன் பிஞ்சுக் கால்களில்தான் – என் உலகம் கண் விழிக்கும். விதைகளின் கலப்பில்தான் – நீ பிறப்பெடுத்தாய் – உன் குழி விழுந்த கன்னத்தில் – யார் புன்னகையை தவழ விட்டான் ! கம்பளி பூச்சிப்போல் – என் அன்பு உன் மேனியெங்கும் தவழும் நீ நெளியும் போது – நான் வண்ணத்துப் பூச்சியாய் பறந்து விடுவேன் ! என்னையே சுமந்து சென்று – மீண்டும் குழந்தையாக்கினாய் என்னை ! உனது […]

தெலுங்கு   மரபிலக்கணங்களில் வாய்பாடுகள்

This entry is part 13 of 14 in the series 6 நவம்பர் 2016

முனைவர் சி.சாவித்ரி தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10  தெலுங்கு இலக்கணங்களில் பெரும்பாலன இலக்கணங்கள் சொற்களை வாய்பாடுகளாக அமைத்து தந்துள்ளன.  இப்போக்கு தெலுங்கு எழுத்து, சொல் இலக்கணங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இலக்கணத்தைத் சுருக்கிச் சொல்வதற்கு இம்முறையைப் பின்பற்றியுள்ளார் எனலாம். தெலுங்கில் கி.பி 11- ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கணங்கள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் கி.பி.11 – ஆம் நூற்றாண்டில் நன்னய்ய பட்டு என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்ற முதல் தெலுங்கு இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி.  இதன் பிறகு ஏராளமான […]

திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

This entry is part 14 of 14 in the series 6 நவம்பர் 2016

முருகபூபதி – அவுஸ்திரேலியா கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள். கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் […]