( 1 ) நினைத்தது போலவே அது தனக்கான அழைப்புதான் என்பது எதிர்வரிசைக் கேட்பிலிருந்து புரிந்தது கணேசனுக்கு. “சொல்லுங்க அழகேசன்…” “ஐயா, லோன் அட்வான்ஸ் போட்டிருக்கேன்யா…அது பணமாயிடுச்சான்னு….?” “இல்ல அழகேசன்…இன்னும் பில்லு டிரஷரி போகலை…இன்னைக்கி இல்லன்னா நாளைக்குப் போகும்…” “நாளைக்குள்ள கிடைச்சிதுன்னா நல்லாயிருக்கும்…பிறகு சனி, ஞாயிறு வந்திடுது…” “இவனுக்குள் கோபம் கிளர்ந்தது. ஒரு வேலை தன்னை மட்டுமே சார்ந்து இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி உடனடியாகச் செய்து கொடுக்கலாம். ஆனால் அப்படியில்லையே? சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், அலுவலர், […]
ஆர் வத்ஸலா முழுமையாக நைந்துப் போன துணியை விடாமல் இழுத்துப் பிடிக்கும் தையல் நூல் கடைசியில் சோர்ந்து போய் தன்னை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ள விழைவது போல நான் என் பாசம் நிறைந்த ஒரு பக்கத் தொடர்பை கண்டித்துத் துண்டித்துக் கொண்டு விட்டேன் வலி தெரியவில்லை பாச நரம்புகள் முன்பே நைந்துப் போய்விட்டதால் வெகுகாலம் கழித்து ரசிக்கிறேன் இப்போது உனை நினையாமல் நிலத்தின் நீலப் பூக்களை கடலின் அலைகளை நீல வானின் நட்சத்திரங்களை
ஆர் வத்ஸலா அடுத்த முறை யாரிடமாவது அன்பு செலுத்தினால் வெளிக்காட்டாதே இப்படி அதை அடுத்தமுறை காண்பிக்காதே கண்களில் இத்தனை கரிசனத்தை யாரிடமும் அடுத்தமுறை வெளிப்படுத்தாதே இவ்வளவு அழகான சொற்களில் உன் மதிப்பை யாரிடமும் அடுத்த முறை பிரதிபலிக்காதே உன் கண்களில் யார் வலியையும் இவ்வாறு அடுத்த முறை உன் சொந்த ஊரின் பெயரை சொல்லாதே உனதன்பு நிரந்தரம் என நம்புபவரிடம் நீ விலகிய பின் தைத்து நிற்கக் கூடும் முட்களாக இவற்றின் நினைவுகள் அவர் மனதாழத்தில் நாள்காட்டியில் […]
குரு அரவிந்தன் – சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் […]
கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023 குரு அரவிந்தன் 35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது. திரு. பஞ்சன் பழனிநாதனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இலங்கையில் இருந்து வருகை […]