31 இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது. ஒன்பது மணிக்கு அவள் பாங்க் ஆஃப் இண்டியா அலுவலகத்தை அடைந்தபோது, சிந்தியா அவளுக்காக அங்கு வந்து ஏற்கெனவே காத்துக்கொண்டிருந்தாள். “வாம்மா, ராதிகா!” என்று அழைத்தபடி, அவள் கையைப் பற்றிய சிந்தியா அவளை வங்கியினுள் கூட்டிச் சென்றாள். வழியில் ராதிகா மெல்ல மெல்லத் தன் கையை அவளது பிடியினின்று தளர்த்தி விடுவித்துக்கொண்டாள். […]
சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ” விடியல் ” என்றசின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி […]
எழிலன் , கோவை சுப்பு ரத்தினமாகப் பிறந்து பின் பாரதியால் கண்டெடுக்கப்பட்டு பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக விடுதலையை அடி நாதமாகக் கொண்ட பல பாடல்களை எழுதியுள்ளார். எவ்வாறு பாரதியின் கவிதைகளில் தேச விடுதலை மையமாக இருந்ததோ அவ்வாறு பாவேந்தரின் கவிதைகளில் தமிழும் பகுத்தறிவும் மையமாக இருந்தன. அவ்வாறு எழுந்த ஒரு குறுங்க்காவியமே சஞ்சீவி பார்வத்ததின் சாரல் என்பது ஆகும். இந்தியத் திருநாட்டின் பெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமகாதையில் வரும் அனுமன் மருத்துவ […]
குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் […]
அலாரம் இல்லாமலே கண்விழித்து எப்பொழுதும் போல அன்றும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்ட கலியுலக மார்கண்டேயனான கதிரவன் போல, வயதாகிவிட்டாலும் தன் கடமையில் இருந்து தவறாமல் வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து, நெற்றியில் திலகம் இட்டு, வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து பெருக்கி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் மங்கலம். பால் தீயும் நாற்றம் வரவே கோலத்தை பாதியிலே நிறுத்தி அடுப்படிச் சென்று பாலை இறக்கி வைத்துவிட்டு மறுபடியும் விட்ட இடத்திலிருந்து கோலத்தை முடித்தவள் தன் கணவன் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு உனக்காகத்தூதுவரும்மூளையில் உதித்து உயிரின்அணுஉலகில் உயிர்க்கும்காதல்புறா நேசத்தின்கனவுளைஅதனிடத்தில் தந்தனுப்ப தத்திவரும்துரிதமாக, என்மனஅந்தரங்கங்களை உன்னொடுபகிர்ந்து உறவாட…! ஆவலாய்நெருங்கிவர வார்த்தைகளில் கடுப்பெனும்உணர்வைப் பந்திவைக்க தள்ளியேநிற்கிறது இங்கும்அங்குமாகப்பார்த்தபடி உள்ளத்துநினைவுகளை படிக்கமுடியும்என்றால் மனக்காயங்கள்இன்றிக் கடந்துபோகலாம் இருவருமாகவாழ்க்கைவழியில் . விழிகளின்அழைப்பை ஏற்கவா?மறுக்கவா? பார்வைகளின்ஸ்பரிசம் நட்பா?காதலா? தூதாகவந்தகாதல் உணர்வுக்குள் விலகலின்பதில்மனுவந்து ஓடிப்போஎன்று விரட்டிவிடுமாபெண்உணர்வுகளை? வினாக்களின்தொடர்ப்பயணத்தில் விடைகாணமுயலும் கணங்களெல்லாம் உன்முகம்காணும் வாய்ப்பின்திருப்தியில் கடந்துபோகிறேன், அனுபவச்சாரல்வழியே காதலற்றமனங்கள் எத்தனையோ எனைத்தீண்டிச்சென்றகாதலுக்கு நன்றிபகிர்ந்தநொடி!
அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் […]
(1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஆத்மாவின் மெய்யான கீதத்தைப் பாடுகிறேன், அங்கிங்கு எனாதபடி எங்கோ ஓரிடத்தில் ! புதுமை மீளும் இயற்கையின் மகத்து வத்தில் ! விலங்குகளின் இனத்தில் ! என் கவிதை அவர்க் களிக்கும் அறிவிப்பில் ! எலுமிச்சை, ஆப்பிள் பழங்களின் நறுமணத்தில் ! பறவை ஜோடிகளில் ! காட்டு மரக்கட்டை ஈரடிப்பில் ! அலை அடிப்பின் அடுக்கு மடிப்புகளில் […]
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு குமிழ்ந்து தரை விழுந்த நீர்க் குமிழி பாதையின் குறுக்காக சர சர வெனக் கடந்த போது, வேகச் சீற்றத்துடன் தலை குத்தி வழிந்த போது, சாரல் மறைத்த பார்வையில் சாலை தெரியாக் குருடியாய் பயணித்த நொடி எங்கிருந்தோ வந்து இதயத்தைக் கீறிச் சென்றது உன் நினைவுகளின் உயிர் ! குடை தாங்கி நீளும் உன் கரங்கள் தரும் பாதுகாப்பின் உயிரலைகள் காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது நினைவுப் படுகையில். நனைந்து […]
சிறுகதை :ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை. நன்றாகக் குளித்துவிட்டு பழைய அழுக்குப் புடவை ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டு கதவுக்குப் பின்னால் சாத்தி வைத்திருந்த ஓட்டடைக் குச்சியைக் கையில் எடுக்கிறாள் கோமதி. முதல்ல இந்த ஹாலை தூசி தட்டி ஒட்டடை அடிக்கணும் ,கட்டையை உயர்த்திப் பிடித்தது தான் தாமதம்…அவளது கைபேசிக்குத் மூக்கு வியர்த்து….”பாடி அழைத்தது…” கீழே உருண்டு கிடந்த தம்ப்ளரில் கால் தடுக்கி தம்ப்ளர் சுழலும் சத்தம் பின்னணி இசை போட, ஹலோ..யார் பேசறது […]