”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப் படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?” என்று கேட்டார். “உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச் சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை […]
நான் ரசித்த முன்னுரைகளிருந்து…… ————————————————— 1. இராஜாஜி – வியாசர் விருந்து. ========================= – வே.சபாநாயகம். “கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானாநகரமும் நாகமும் கூடிய நன்னிலமான” நமது பாரத நாட்டில் தோன்றிய முனிவர்களும், ஞானிகளும், பக்த கவிஞர்களும் வாயிலில் காத்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அவர்களை வாயிலில் காக்கச் செய்துவிட்டு நாம், உத்தியோகஸ்தர்களையும் பணக்காரர்களையும், இன்னும் அற்பர்களையும் காணவேண்டி, அவர்களது வாயிலில் காத்துக்கொண்டு நிற்கிறோம். இது என்ன மடமை! நான் புதிதாகச் சொல்லவில்லை. ஒரு […]
மூன்று வாரமாக மல்டிப்ளெக்சில் ஓடுகிறதே என்கிற கியூரியாசிட்டியில், படம் பார்க்கப் போனேன். கிடைத்த அனுபவம் சூப்பர். ஓரளவிற்கு ரன்பீர் கபூர் நல்ல நடிகர் என்பது, எனக்கு ராக்கெட் சிங் பார்த்தபோதே புலப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் அது உறுதி பட்டது. ஒல்லி பெல்லி இலியானா, இதில் கனமான (!) பாத்திரத்தில். அந்த ஒட்டிய கன்னங்களும், அழகுக் கண்களும், கவிதை பேசுகின்றன. படத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார் என்று தெரியும். ஆனால் இப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சிம்ப்ளி […]
கடந்த ஆண்டுகளில் வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான். அவன் போகுமிடங்களுக்கு கூட்டிச் செல்கிறாள். நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் […]
தயவு செய்து இந்தச் செய்தியை பத்திரிகையில் பிரசுரித்து உதவி செய்யவும். 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், இல 58, தர்மராம வீதி, கொழும்பு – 06 இல் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது. டொக்டர் எம்.கே. முருகானந்தனின் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த விழாவுக்கு புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகித்து, முதற்பிரதியையும் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனாவுக்கு சுந்தரி எழுதுவது, பாவனா! எப்போதும் க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு கடிதத்தைத் தொடங்கி, நலமாய் இருக்கிறேன் என்று நாலு வரிகளுடன் முடித்து விடுவதாக கோபித்துக் கொண்டு கடிதம் எழுதியிருந்தாய். என்னைப் போன்றவர்களுக்காக அரசாங்கம் கார்ட் விலையை ஏற்றவில்லை. ஆனாலும் அந்த சொற்ப தொகைக்காக, பத்து தடவைக் கேட்டு வாங்க வேண்டிய நிலையில் உள்ள நான் அடிக்கடி கடிதம் எப்படி எழுதுவேன்? சம்பளம் தேவை இல்லாமல் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் குரலைப் பாடலாக்க எவர் என்னை ஊக்கு விப்பது ? எனது உள்ளத்தின் மௌ னத்தில் கூடு கட்டிக் குடியிருக்கும் அந்த ஒன்று தான் ! முகில் மூடி மங்கிய நாட்களில் நறுமணத் தோடு மல்லிகப் பூக்கள் பெரு மூச்சு விடும் போது, அதன் இறக்கை நிழல் பட்டெனது ஆத்மாவைத் தட்டி எழுப்பும் அந்த ஒன்று தான் ! உவப்புடன் வெடிக்கும் சிவூளிப்* […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]
“ மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “ செல்லம்மாள் குரலில் குதூகலம் தெரிந்தது. இனிமே லீவுக்கு மாயவரம் போக வேண்டாம். புது இடம் ஒன்று க்¢டைத்து விட்டது. வருடா வருடம் மாயவரம் போய் பிள்ளைகளும் செல்லம்மாவும் அலுத்துப் போயிருந்தார்கள். மூன்று வேளையும் சோறு, மாமரத்து ஊஞ்சல் எல்லாம் போரடிக்க ஆரம்பித்து விட்டது. எல்டிசி என்றால் எனக்கு மாயவரம் தான். அங்கேதான் என் அம்மாவைப் பெற்ற தாத்தா இருக்கிறார். பூர்வீக வீடு இருக்கிறது. மூன்று கட்டு வீடு. உள்ளே […]
சகோதரத் துரோகம் சகிக்காது தெய்வம் அப்பா சொத்தில் கப்பல்கள்கூட வாங்கலாம் திரண்ட சொத்துக்கு இரண்டு பேரே வாரிசு கடைகள் காலனிகள் வீடுகள் தோப்புகள் தரிசு நிலங்களென பத்திரங்கள் வைக்கவே பத்துப் பெட்டகங்கள் தங்கச் சொத்துக்களைத் தனக்கும் தரிசைத் தம்பிக்கு மென்று பத்திரம் செய்த அண்ணன் தந்திரமாய்ப் பெற்றான் தந்தையின் கையெழுத்தை தனல்ச் செய்தி தம்பிக்கு எட்டியது நம்பிக்கைத் துரோக மென்று நடுவர் மன்றம் நாடினான் ‘தரிசு மொத்தமும் அண்ணனுக்கே தருகிறேன் […]