இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்திய பாரம்பரியங்களை ஒற்றை பார்வையில் அடைக்க ஆர்.எஸ்.எஸ் முயல்வதாக ராஜன் குறை போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனால், அதே வீச்சில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, பெண்கள் சமத்துவத்தை நிலைநாட்டியதற்கு கேரள முதல்வர் விஜயன் அவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பாராட்டு கடிதம் எழுதுகிறார்கள். இதில் இருக்கும் முரண்பாடு அவர்களுக்கு வழக்கம்போல புரியவில்லை என்று நான் கருதுகிறேன். தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு சாதியினரும் திருமணமும் ஒரே விதமாக நடப்பதில்லை. ஒவ்வொரு […]
தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனப் போக்கே ‘வெறி’ என்று சொல்லப்படும். தங்களால் தீர்க்க முடியாத வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படும்போது குறிஞ்சி நில மக்கள் தங்கள் நிலத் தெய்வமான முருகனுக்குப் படையலிட்டு வழிபடுவர். தெய்வமானது பூசாரியின் வாயினால் அருள்வதை வெறியாட்டு என்பர். ‘வெறி’ என்பதற்கு மணம் என்றும் தன்னை மறந்த நிலை என்றும் பொருள் உண்டு. வெறியாட்டில் இவை இரண்டும் கலந்து காணப்படும். இப்பகுதியின் பாடல்களில் முருகனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்த மூத்தோர்கள் ஏற்பாடு செய்தலும், […]
” சரி .அவர்கள் வந்தபின்பு நான் பேசிக்கொள்கிறேன். ” என்று சொன்ன தம்பிப்பிள்ளை மாடி நோக்கி நடந்தார். நானும் பின் தொடர்ந்தேன். மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டோம். அவர்கள் தொடர்ந்து கிராம சபைகளின் முன்னேற்றம் பற்றிய பேச்சைத் தொடர்ந்தனர். கிராம சபைகளின் வளர்ச்சிக்கு கல்விதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன். இப்போது இல்லாவிடடாலும், எதிர்காலத்தில் பிள்ளைகள் […]
அன்பு உள்ளங்களே ஆதரிக்கும் உறவுகளே அன்னைத் தமிழின் அருந்தவச் செல்வங்களே அத்துனை பேர் வாழ்விலும் ஆனந்தமே என்றும் பொங்க அன்பு மலர் தூவி அத்துனை பேர் ஆசிகளையும் யாசிக்கும் உங்கள் ஆனந்தி பேசுகிறேன் என்று தொடங்கியதுமே கரவொலி. ஒரு குடம் பால் தலையில் ஊற்றிய சிலிர்ப்பு. சிங்கை வாழ்க்கை சரிப்படாது என்று அறந்தாங்கிக்கே ஓட நினைத்த என் கால்களைக் கட்டிப்போட்டது அந்தக் கரவொலிதான். நான் என் கணவர் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கை வந்து இரண்டு மாதங்கள் […]
Posted on October 20, 2018 Trina Solar Company Supplies Solar Power Modules to Ukraine’s Largest Solar Power Plant சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூரியக்கதிர் மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதி சக்தியால் […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ கண்மணி ! என் செய்வேன் ? பிறந்துள்ளது, கறுப்புக் குழந்தை ! பேதலிக்கும் என் நெஞ்சம் ! காதலியே என் செய்வேன் ? கறுப்புக் குழந்தை பிறந்துள்ளது ! மனக்கவலை எனக்கு ! கனிவோடு சிசுவை அணைத்து கறுத்த உடை அணிவாள் ! திரும்பி வாராது சிறுவன் போயினும் கறுத்த ஆடையே அணிவாள். கண்மணி சொல் ! என் செய்வேன் ? கவலைப் படும் என் மனம். […]
வைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை உண்டாக்கலாம்.இவற்றை வைரஸ் நோய்கள் என்போம். நமக்கு மிகவும் பழக்கமான அம்மை ஓர் வைரஸ் நோய்தான். ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் ( Herpes Simplex – HSV ) என்பது ஒருவகையான வைரஸ். இவை 2 வகையானவை – HSV – 1 , HSV – 2 . முதல் வகையான […]