ஒலியும் ஒளியும்

This entry is part 1 of 5 in the series 22 அக்டோபர் 2017

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) காதில் பஞ்சடைத்து இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன் பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி…. பட்டாசுச் சப்தம் பயமுறுத்த தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம் நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு அதுவாகவே யிருக்கும். சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு நகைப்புக்காளாகி செவிபொத்தி, புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம் குளியறையில். கிண்டல் குட்டு கிள்ளு எல்லாமே என் மேல் அக்கறை கொண்டோரின் எதிர்வினைகளாக…. ஒருபோது பாவம் பார்ப்பார்கள்; ஒருபோது பிடித்திழுத்துவந்து வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் […]

ஒப்பாரி

This entry is part 2 of 5 in the series 22 அக்டோபர் 2017

 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   விழியும் செவியும் பழுதாகிவிட்ட வாழ்வில் விதித்ததெல்லாம் அறையின் ஓர் ஓரமாய்க் கட்டிலில் அமர்ந்திருத்தல்; அவ்வப்போது சுவரொரு பாதையாக கையைக் காலாக்கி அடிக்கு அடி விரல்களை அழுந்தப் பதித்து கழிவறைக்குப் போய்வருதல்; உணவுநேரத்தில் அவசரமாய் ருசித்துச் சாப்பிட்டுப் பின் நீட்டிப் படுத்து நித்திரையில் அமிழ்ந்துபோதல். மிக அருகே சென்று ஆயிரம் ‘வாட்’ குரலெடுத்துக் கத்தி என் வரவை உணர்த்தினால் “அம்மா சௌக்கியமா?” என்பார் அதி சன்னக் குரலில். விரல்களில் நகம்வெட்டும்போது ஒருமுறை சதை […]

கண்டேன் ஒரு புதுமுகம்

This entry is part 3 of 5 in the series 22 அக்டோபர் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++   இப்போது நான் கண்ட ஒரு முகத்தை எப்போதும் மறக்க மாட்டேன் ! எனக்கு அவளே நிகரானவள்; இருவரும் சந்தித்தை இவ்வுலக மாந்தர் அறிவதை நான் விழைகிறேன். அந்த நாளின்றி வேறொன் றாயின் சிந்திப்பது மாறுபடும். தெரியாமல் போன தெனக்கு, இரவுக் கனவில் இன்று வருவாள் ! வீழ்ந்தேன் காதலில் நான் வீழ்ந்தேன் ! மீண்டும் விளிக்கிறாள் என்னை !   […]

தொடுவானம் 192. திருப்பத்தூர்

This entry is part 4 of 5 in the series 22 அக்டோபர் 2017

(சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை)           மகப்பேறும் மகளிர் இயல் நோயும் பிரிவில் நான் சேர்ந்துவிட்டேன். அங்கு வெளிநோயாளிப் பிரிவு, பிரசவ அஅறை, அறுவை மருத்துவக் கூடம், வார்டு என்று மாறி மாறி சென்றுகொண்டிருந்தேன். பிரசவ அறையில் இருந்தபோதெல்லாம் மேரியின் நினைவு வரும். அதை கலைந்துபோன கனவாக எண்ணி மறக்க முயன்றேன்.           பிரசவ அறையில் பயிற்சி மருத்துவர்கள் பிரசவத்துக்காக ஏற்பாடுகளை செய்துவிட்டு என்னை அழைப்பார்கள். நான் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை நெருங்கும் போது, சுழலும் வால்மீன் சுழற்சி விரைவாய்த் தளர்கிறது !

This entry is part 5 of 5 in the series 22 அக்டோபர் 2017

Posted on October 20, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை பூர்வீக வால்மீன்கள் ! பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு  வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! இப்போது சுழலும் வால்மீன் புவி நெருங்கின் சுழற்சி வேகம் தளர்க் […]