வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு நேரம் காலை 10.00 மணி Venue: Sai Mitra Meadows, Community Hall, August Park Road, 1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar, Bnagalore-560093 பங்கேற்போர் விட்டல்ராவ் ஜி.கே.ராமசாமி ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் ப.கிருஷ்ணசாமி மகாலிங்கம் முகம்மது அலி பாவண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் நண்பர்கள் ஆவணப்படம் திரையிடல் இயக்குநர் அருண்மொழி, சென்னை For More Details: […]
இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது. நானும் என் மனைவி அமுதாவும் காலையிலேயே சென்றிருந்தோம். முகம்மது அலி, சம்பந்தம், அழகர்சாமி என பல நண்பர்கள் வந்திருந்தார்கள். வெங்கட் சாமிநாதன் வருவதாகச் சொல்லியிருந்தார். இன்னும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டுச் செல்லலாம் என்பதற்காக நான் […]
மனோன்மணி தேவி அண்ணாமலை, விரிவுரைஞர், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா. முன்னுரை பிறப்பியல் என்பது தொல்காப்பியத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள கருவியியல் ஆகும். எண், வகை, அளவு, முறை என்பன போன்று பிறப்பியலும் எழுத்திலக்கணத்தின் ஒரு கூறேயாகும். ஆயினும், எழுத்ததிகாரத்தின் முதன்மை நோக்கம் சொற்புணர்ச்சி இலக்கணம் கற்பித்தல் என்பதால், அதற்குத் தேவையான இன்றியமையாத ஒரு கருவியியலாகவே பிறப்பியலைத் தொல்காப்பியர் வகுத்துள்ளார் என்பது தெளிவு. இதுவே, சொற்புணர்ச்சிக்கும் எழுத்துகளின் பிறப்புக்கும் உள்ள தொடர்பை உணர்த்த […]
சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காறறின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனாலதான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே […]
முருகபூபதி ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை ‘ முள்ளும் மலரும் ‘ மகேந்திரனின் இயக்கத்திலும் தாமரைச்செல்வியின் படைப்பு குறும்படமாகியது. எங்கள் நீர்கொழும்பில் நான் அறிந்தவரையில் இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய முதலாவது சைவஉணவகம் கணேசன் கபேதான் நீர்கொழும்பில் வீரகேசரி பத்திரிகையின் முதலாவது ஏஜன்ட். வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே இன்றும் இருக்குமானால் அதன் வயது 75. இந்த கணேசன் கபேயில்தான் ஆளுமையும் ஆற்றலும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ http://dai.ly/x3alb22 http://www.dailymotion.com/video/x2067zr https://youtu.be/4Wx1HHoh0SA https://youtu.be/d4VajzbvQmY https://youtu.be/aFVwJZMC6Kw +++++++++++++ அகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாது கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக் கொள்ளும் ! வாயு மூட்டம் தாவித் தழுவிக் கொள்ளும் ! கர்ப்பம் உண்டாகி காலாக்ஸிக்கு குட்டி விண்மீன்கள் பிறக்கும் ! இட்ட எச்சத்திலே புதிய கோள்கள் உண்டாகும் ! ஈர்ப்புச் […]
“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில் திருவிழாவை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் முத்து கேட்கிறார். “புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? நம்மோடு இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது சந்தோசமா ஆட்டிறைச்சுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் […]
இரா.மாரியப்பன் உலகம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கற்பனையேயன்றி முடிந்த முடிபன்று. உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துகளும் அவ்வாறே. மனிதன் தோன்றி மொழியை உருவாக்கி, நாகரிகம், பண்பாடுகளைக் கண்டறிந்து அதன்படி வாழ்ந்த காலங்களையும் அறுதியிட்டுக் கூறுவதென்பதும் அவ்வளவு எளிதன்று. உலகின் முதன்மாந்தனாக விளங்கியவன் தமிழன். அவன் படைத்துப் பயன்படுத்திய மொழியே உலகின் முதல் தாய்மொழி எனப்பாவாணர் உள்ளிட்ட பலரும் குறிப்பிடுகின்றனர். அத்தகைய தொன்மைவாய்ந்த தமிழில் தோன்றிய ஓர் ஒப்பற்றநூல்தான் உலகப்பொதுமறையாக விளங்குகிறது. அதில், மனிதன் […]
தருணாதித்தன் அதி காலை எழுந்த சிவந்த கண்கள், தொப்பி, கூலிங்கிலாஸ், டிஜிடல் காமரா, தண்ணீர் பாட்டில் என்று பஸ் முழுவதும் சுற்றுலாப் பயணிகள். புதிய சாலை, மல்டி ஆக்ஸல் பஸ். ஆனாலும் அடிக்கும் ஏஸியும், அலறும் சினிமாப் பாட்டும் தூக்கத்துக்கு தொந்தரவாக இருந்தது. ஏழரை மணிக்கு காலை உணவுக்காக பஸ் நிறுத்தப் பட்டது. அப்போதுதான் முதல் தகராறு ஆரம்பித்தது. டூர் கைடின் குரல் ஒலி பெருக்கியில் சரித்திர காலத்துக்கு அழைத்தது. சில நூற்றாண்டுகள் பின்னே எப்போதும் சற்று […]
”இந்த மூணு மாசத்துல நீங்க இப்ப போறது நாலாவது தடவை; இந்தத் தடவையாவது ஒரு நிச்சயம் பண்ணிட்டு வந்துடுங்க. ஆமா சொல்லிட்டேன்” என்றாள் சகுந்தலா. அவள் முகத்தைப் பார்த்தேன். மிகத் தீவிரமாய் இருந்தது. “எத்தனை மொறை போய் வந்திருக்கேன்னு சரியா கணக்கு வச்சிருக்கியே?” என்றேன் சிரித்தபடி. அவளுக்குக் கோபம் வந்ததுபோல் தெரிந்தது. “ஆமாம், இந்தக் கிண்டலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; நீங்க சரியாப் பேசிட்டு வரீங்களா? இல்ல, நானும் வரட்டுமா?” என்று கேட்டாள் அவள். “வேணாம், […]