வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!

பூக்களுக்குள் வாசம் எங்கே தேடினேன் - காம்பு மட்டுமே மீதமாகியது கைகளில்..! வெற்றிகளின் ஓரம் வரை சென்றேன், பெரும் கிண்ணக்குழிகளாய் நின்றன… மழை நாட்களில் “நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்.., வாழ்வின் நிலையாமை புகட்டின… சாலைகள் தோறும் கற்களைப் பார்த்தேன், மனித இதயங்களின்…

“அவர் தங்கமானவர்”

நாய்க் கொரு நண்பகலில் வாய்த் ததொரு தெங்கம்பழம் தா னுண்ணத் தெரியாமலும் தரணிக் குத் தராமலும் உருட்டியும் புரட்டியும் ஊர்சுற்றி ஊர்சுற்றி ஓய்ந்து போனதந்த நாய் தமக்கும் வாய்த்தது தங்கமானவர் எனும் பட்டம் தரங் கெட்ட தலைக்குப் பின் தெளிவான ஒளிவட்டம்…

நினைவு நதிக்கரையில் – 1

எனக்கு எப்போது ரஜினி பித்து பிடித்தது என்று சரியாக நினைவில்லை. எனக்கு ஒரு ஏழு வயது இருக்கும்போது பிடித்திருக்கலாம், என்று நினைக்கிறேன். எதை செய்தாலும், அதில் அதிதமாய் போவது என்ற என்னுடைய இயல்புப்படி, ரஜினி விஷயத்திலும் நான் மிகத்தீவிரமாக இருந்தேன். சொல்லப்போனால்,…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த மானிடம் விருந்தோம்பும் ! ஒவ்வோர் காலை உதயமும் ஒரு புது வருகைதான் ! உவப்பு, மன இழப்பு, தாழ்ச்சி விழிப்பு யாவும் வரும் எதிர்பாரா விருந்தாளிகள்…

வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.

“ ஒரு தத்துவத்தைக் கலையா மாத்தறப்போ ஏற்படற நீர்த்த வடிவம் நாடகம்.” “ஒரு விஷயத்தக் கவிதை எழுதறபோது உண்டாற அமைதி, நடிக்கிறபோது வருமா?” - இரும்பு குதிரைகள். பாலகுமாரனின் இந்தக்கதையை எண்பதுகளின் இறுதியில் படிக்கும்போது இதன்மூலம் படிப்பவனுக்கு ஏற்படப்போகும் கருத்துத் தாக்கம்…

வீடழகு

எனக்கான வீடு அதென்று மையலுற்றுத் திரிந்து கொண்டிருந்தேன். வெள்ளையடிப்பதும் சித்திரங்கள் வரைவதுமாய் கழிந்தது என் பொழுதுகள். நீர் வடியும் தாழ்வாரங்கள் தங்கமாய் ஜொலிக்கும் பித்தளையின் தகதகப்போடு. மழைத் தூரிகை பூசணம் சூரியக்குடைத் தடுப்புதாண்டி வரவிட்டதில்லை ஒரு தேன்சிட்டோ., குருவியோ. காலைப் பனியும்…

சுத்த மோசம்.

"எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்”   ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ். “அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் வந்தால்தானாம்.” கிண்டலடித்தாள் ரேஷ்மா. “என்னா க்ளாமர்.. இவ இனி நடிப்பாளா தெரியலை” வருத்தப்பட்டான் ரமேஷ்  அடுத்தபக்கத்தில் இருந்த ஒரு…

பூனைகள்

அலுவலகம் செல்கின்றன. தொழில் செய்கின்றன. கடைகள் நடத்துகின்றன. சில சமைக்கவும் செய்கின்றன. முக்கால்வாசி நேரம் மூலையில் முடங்கிக் கிடந்து பெரும் வேலை செய்ததாய் நெட்டி முறிக்கின்றன. வீட்டுக்காரி அள்ளி வைக்கும் மீனில் திருப்தியடையும் அவை வளர்ப்புப் பிராணிகள்தாம் காவல் காப்பவை அல்ல.…

சிற்பம்

  ‘பாவம் காகம், பசிக்குமென்று ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’ என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!   பார்த்துப் பிடிக்கவில்லை, பழகிப்பார்த்துப் பிடித்தது, சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!   ‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும் ‘நிலா நிலா…

சுதேசிகள்

அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு'ம் ,ப்யூமா'வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்   தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை 'ஆதலால் காதலை'ச்சொல்ல இப்போதெல்லாம் ஆதாமும்  தங்கம் தேடி அலைகிறான்.…