மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக சுகாதார நிலையத்தில் இதன் தலைமையகம் இருந்தது. அந்த சுகாதார நிலையம் ஒரு கிராம மருத்துவமனைபோல் இயங்கியது. அங்குதான் நாங்கள் சமூக சுகாதாரம் பயின்றோம். சற்று தொலைவிலிருந்த கல்லூரி வகுப்பறையில்தான் வகுப்புகள் நடந்தன. அவற்றை நடத்தியவர் டாக்டர் வீ.பெஞ்சமின்.மலையாளிதான். மிகவும் அன்பானவர். எல்லாரிடமும் […]
பியர் ரொபெர் லெக்ளெர்க் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா (Pierre –robert Leclercq பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, புனைவா யாருக்குத் தெரியும் ? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island ஐ, தனது வீட்டில் அடைந்துகிடந்த […]
அருணா சுப்ரமணியன் தெரியாமலோ புரியாமலோ ஆத்திரத்தாலோ ஆளுமையாலோ நமக்குள் உடைந்த கண்ணாடியை நீ ஓட்ட வைத்து நீட்டி அழகு முகம் பார் என்றாலும் … என் கண்களுக்கு தெரிவது என்னவோ அதன் விரிசல்களும் என் வடுக்களும் தான் ……. –
அருணா சுப்ரமணியன் இனிப்புகளில் உனக்கு என்ன பிடிக்கும் என்றாய்… சிறு வயதில் தந்தை வாங்கி வரும் நெய்யூறும் அல்வா பிடிக்கும்… சற்றே அதிகமாய் சர்க்கரை சேர்த்த மாலை நேர தேநீர் பிடிக்கும் …. என் கவிதைகளை ரசித்து வாசிக்கும் தோழியின் சிரிப்பு பிடிக்கும்…. எதிர்பாரா நேரத்தில் நீ தந்த முதல் முத்தம் பிடிக்கும்… நிறைமாத காலத்தில் அக்கா மகள் பிஞ்சு கைகளில் உரித்து தந்த ஆரஞ்சு பிடிக்கும்…. இதழில் இதழ் தேய்த்து “யம்மி ” என்று சிரிக்கும் பிள்ளையின் முத்தம் ரொம்ப […]
அழகர்சாமி சக்திவேல் கலிகாலத்துத் திருமணம் களைகட்டியிருந்தது… குண்டத்தின் நடுவில் அக்கினித் தங்கமாய் நான்.. “ஸ்வாஹா..ஸ்வாஹா” அய்யர் என் மனைவியை அடிக்கடி அழைத்தார். நல் மாவிலைக் கரண்டிநெய்யால் நனைந்த என் மேனி… அந்த புனித நெய்யின் வாசம்… எங்கோ எனக்குப் பழகிய வாசம்.. சிவனின் வித்தா? இல்லை சந்திரனின் வித்தா? என் சிந்தனை சிதறியது… புலப்படாத என் பழைய நினைவுகள்…. வழிவழியாய் வரும் ஸ்கந்தப் புராணத்து பழங்கதை… சடையன் சங்கரியுடன் தனித்திருந்த காலம் அது.. அம்மை பார்வதியின் […]
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழா 25-09-2016 அன்று ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைமை உரையைத் தொடர்ந்து சிவஸ்ரீ. தியாகராஜக்குருக்கள், தீவகம் இராஜலிங்கம், ஆர்.என். லோகேந்திரலிங்கம், இளையபாரதி, முனைவர் செல்வம் சிறிதாஸ், திரு.எஸ் திருச்செல்வம், பேராசிரியர் வண. ஜோசேப் சந்திரகாந்தன், பேராசிரியர் சின்னப்பன்,சின்னையா சிவநேசன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக நூலாசிரியர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் ஏற்புரை இடம் பெற்றது. […]
[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து] குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். சிறுவர் பாடல்களுக்கு இவை இரண்டோடு சற்றுக்கருத்தும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அக்கருத்து வலிமையாக வலியுறுத்தப்பட்டு திணிப்பதாக இருத்தல் கூடாது. ‘அதோ பாரு காக்கா’ எனத் தொடங்கும் பாடலைக் குழந்தைப் பாடலாகவும், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்னும் பாடலை சிறுவர் பாடலாகவும் கொள்ள இடமுண்டு. இக்கருத்துகளுடன்தாம் தங்கப்பாவின் அண்மை வெளியீடான “பூம் பூம் மாட்டுக்காரன் “ […]
ஞா.தியாகராஜன் வீட்டு கடன் பொருளாதார சிக்கல் உனக்கு சில இடங்களில் இருக்கும் செல்வாக்கு சாதுர்யமாய் சிலரை ஏமாற்றுவது உன் செல்ல பிள்ளைகளின் குறும்பு யார் மீதோ உனக்கிருக்கும் குரோதம் உலக சினிமா தலித் அரசியல் கொஞ்சம் அறம் காய்ந்து போன பழைய நினைவுகள் ஒரு பிரிவின் துயரம் தமிழ் கலாச்சாரம் விளிம்பு நிலை மக்களுக்கான விடிவு நியாயம் அழகான இடங்களில் எடுத்து கொள்ளும் புகை படங்கள் யாரையோ அவமானப்படுத்திய நம் பிரதாபங்கள் நீ வாங்கிய பூத்தோட்டி உன் […]
(முனைவர் சு.மாதவன்) தமிழாய்வுத்துறை, புனித வளனார் கல்லூரி (த), திருச்சிராப்பள்ளி. …………….. அறக்கட்டளை சொற்பொழிவு – எழுத்துரை – 08.12.2015 உதவிப்பேராசிரியர் – யூஜிசி – ஆர்ஏ, தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை பேச 9751 330 855 மின் அஞ்சல் : semmozhi200269@gmail.com தமிழர் வாழ்வியல் திணை வாழ்வியல்; திணை என்பது நிலம் மனிதர், ஒழுக்கம் ஆகிய முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டது. நிலம் – ஐந்திணை மனிதர் – உயர்திணை […]