சாகித்ய அகாதமி சார்பில் : இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி 16/9/15 புதன் காலை 10 மணி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் , திருப்பூர் நடைபெற்றது கல்லூரி முதல்வர் கே. சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கவிஞர் ஜோதி சாகித்ய அகாதமியின் செயல்பாடுகள், தோற்றம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர் கெங்கமுத்து கலந்து கொண்ட 3 எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். உரையாளர்கள்:’ * சுப்ரபாரதிமணியன் – (நாவல் பார்வை ) * குழந்தைவேலு ( சிறுகதைப் பார்வை ) […]
வளவ. துரையன் ஒரு படைப்பாளன் ஒரு படைப்பை எழுத நினைக்கும்பொழுது அவன் முன்னே இரு வழிகள் காத்திருக்கின்றன. ஒன்று தன் அனுபவத்தை அப்படியே எழுதுவது அல்லது சற்று கற்பனை கலந்து எழுதுவது. மற்றொன்று பிறரது அனுபவத்தை உள்வாங்கி எழுதுவது. இந்த இரண்டாவது வழியில் பயணம் செய்வது கொஞ்சம் கடினம். ஆனால் தேர்ந்த படைப்பாளன் எல்லாவழிகளையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான். இரு வழிகளிலும் பயணம் செய்து தங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற படைப்பாளர்கள் பலர் உண்டு. ஆனால் […]
மேடலி முதல் தெருவில் பல ஒண்டுக் குடித்தன வீடுகள் உண்டு. அவைகளில் ஒன்றின் பின் கட்டில் மாட்டுத் தொழுவத்தினை ஒத்த ஒரு குடியிருப்பில் குடியிருந்தது ஒரு கன்னடக் குடும்பம். வீட்டு எசமானன் பெயர் வெங்கோபராவ். அவரது மனைவி பெயர் பூரணி. வெங்கோபராவ் கோபம் வந்து யாரும் பார்த்ததில்லை. அவ்வளவு சாந்த சொரூபி. ஆனால் பூரணி நேர் எதிர். எதிலும் பட படவென்று வெடிக்கும் எண்ணையிலிட்ட கடுகு அவள். அவள் ஒரு Mrs. Perfection. அதனாலேயே அவர்கள் வீட்டில் […]
– சேயோன் யாழ்வேந்தன் பார்க்க வேண்டும் என்று சொன்னாய் பார்க்க வந்தேன் இனிமேல் பார்க்கவே கூடாதென்றாய் அதைச் சொல்லத்தான் அழைத்ததாகவும் சொன்னாய் இப்போது பேசவேண்டும் என்று தோழி மூலம் தூதனுப்பியிருக்கிறாய் நான் பேச வரப்போவதில்லை seyonyazhvaendhan@gmail.com
குமரன் சாலை, அரோமா உணவு விடுதி ஹெடிட்டேஜ் அரங்கத்தில் திருப்பூர் மருத்துவர் சு. முத்துச்சாமியின் ” என் வாழ்க்கைப் பயணம் “ என்ற சுயவரலாற்று நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று மாலை நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனியப்பன் தலைமை தாங்கினார். நூலை எழுத்தாளரும், தமிழ் தேசிய இயக்கத் தலைவருமான தியாகு வெளியிட்டுப் பேசினார். முதல் நூலின் பிரதிகளை ( சேவ் ) ஆ.அலோசியஸ், கவிஞர் சிவதாசன், ( முயற்சி ) சிதம்பரம், உலக திருக்குறள் பேரவை […]
இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வானம்பாடி இதழும் இயக்கமாக தான் அதைச் செயல்படுத்த விழைந்ததும், இடையே அவர்களுக்கிடையே எழுந்த முரண்பாடுகள், பின்னர் வானம்பாடி இதழ் செயல்பட முடியாது போனதும் , […]