ப்ரதிபா ஜெயச்சந்திரன், பாண்டிச்சேரி செந்திலின் முகத்தில் பஞ்சு பஞ்சாய் அப்பிக் கொண்டிருந்த்து போல் நாவலை படித்து முடித்தவுடன் மனதில் குட்டி இளவரசர்களின் சிதிலமாகிப்போன பனியன் கம்பனி வாழ்க்கைத் துணுக்குகள் நம் மனதில் அப்பிக் கொள்கிறது. .ஒரு கள, காலப் பதிவுகளின் முரண்களற்ற வெற்றிதான். இது “ சாயத்திரை “ போன்ற நட்சத்திர நாவல். கதை சொல்லியின் மொழி எந்த இட்த்திலும் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்தாத எளிமையான எதார்த்த மொழி. கதைக் களத்தில் சிறுவர்களின் வாழ்க்கை எவ்வாறு பனியன் […]
– சேயோன் யாழ்வேந்தன் முகம் மனம் காட்டும் கண்ணாடியாக இருந்தது கண்ணாடி உருகும்முன் மணலாக இருந்தது மணல் அலை கரைக்கும்முன் பாறையாக இருந்தது பாறை மழை குளிர்விக்கும்முன் நெருப்பாக இருந்தது நெருப்பு வெடிக்கும்முன் ஒளிப்பந்தாக இருந்தது ஒளிப்பந்து பிறக்கையில் என் முகமாக இருந்தது.
டாக்டர் ஜி. ஜான்சன் 136. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் மருத்துவக் கல்வியில் அதிகமாக நாட்டஞ் செலுத்தச் ( Interesting ) செய்யும் ஒரு பாடம் உள்ளது. அது துப்பறியும் நாவல் படிக்குபோது உண்டாகும் ஆர்வத்தைக்கூட உண்டுபண்ண வல்லது. அதை நான்காம் ஆண்டில் ஒரு வருடம் பயிலவேண்டும். அதுதான் சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியல் இயலும் ( Forensic Medicine and Toxicology ). நோய்கள், அறிகுறிகள், பரிசோதனைகள். கிருமிகள், மருந்துகள் என தொடர்ந்து பயின்றுகொண்டிருந்த எங்களுக்கு சிறிது இடைவெளி […]
இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா நாள் : 02-10-2016, ஞாயிறு காலை 10 மணி, இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம், வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன்’ செயலாளர், இலக்கியச் சோலை திருக்குறள் உரை : திரு இரா. தியாகராஜன். பொருள் : நட்பாராய்தல் பட்டி மன்றம் நடுவர் : திரு வளவ. துரையன். தலைவர், இலக்கியச் சோலை காந்தியடிகளின் பெரும்புகழுக்குக்காரணம் அகிம்சையா? வாய்மையா? அகிம்சையே! வாய்மையே! […]
வளவ. துரையன் உலக அளவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்று ஆஸ்கர் விருதாகும். இது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றிய விருதாகும். தொடக்கத்தில் இதன் பெயர் “அகாடமி அவார்டு” என்பதுதான். 1929—ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் திரைத் துறையைச் சார்ந்த ஒரு சிலர் ஒன்று சேர்ந்து “தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்ஸ்” எனும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். அதன் முதல் தலைவராக டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் என்பவர் இருந்தார். […]
பாச்சுடர் வளவ. துரையன் என் நண்பரான ஒரு நவீன இலக்கியவாதி கேட்டார் “உங்கள் தொல்காப்பியத்தில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்களே? அதில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதா?” அவர் உங்கள் தொல்காப்பியமென்று கேட்டபோதே அவரைப் புரிந்து விட்டது. “இவர் போன்ற ஒரு சிலர் பண்டைய இலக்கணமோ. இலக்கியமோ அறிந்திடாமல் அதைத் தீண்டத்தகாததாய் நினைக்கிறார்கள். இவருக்குப் புரியும்படிச் சொல்லவேண்டும்” என்று நினைத்தேன். எனவே நான் அவரைக் கேட்டேன் “குடும்பக் கட்டுப்பாடு என்றால் என்ன?” அவர் நன்கு விடை சொன்னார் […]
படித்தோம் சொல்கின்றோம் ஆவணக்காப்பாளரை ஆவணப்படுத்திய நூலகர் செல்வராஜா படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கொண்டாடவேண்டிய அயராத செயற்பாட்டாளர் முருகபூபதி – அவுஸ்திரேலியா ” களிமண்ணால் கட்டப்பட்ட ஒரு பழங்காலத்து திண்ணை வீட்டின் ஒடுங்கிய முன் விறாந்தையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஈயத்தாலான குற்றிகளைக்கொண்டு தனது நூல்களை தானே அச்சுக்கோர்த்து, ஒவ்வொரு பக்கங்களையும் மை தடவி காகிதத்தில் பதிந்து Proof பார்த்து, பின்னர் எழுத்துப்பிழைகளை சரிசெய்து, அவற்றை அசையாமல் பத்திரமாக பஸ்ஸில் எடுத்துச்சென்று அச்சகத்தில் அச்சிட்டு வெளியீட்டு முயற்சிகளை ஆரம்பித்தவர் கலாபூஷணம் […]
என். செல்வராஜ் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் 1931ல் வெளிவந்தது. அந்த படத்தில் இருந்தே தமிழ் சினிமா பாடல்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அவை அந்தப் படங்களை பிரபலப்படுத்த உதவியுள்ளன. பெரும்பான்மையான வெற்றிபெற்ற தமிழ்ப் படங்களின் வெற்றியில் திரைப்பாடலுக்கு மிக முக்கிய பங்கு இருந்து வருகிறது. பாடல்களுக்காகவே பல நாள் ஓடிய படங்களும் இருக்கின்றன. பாடல்களே இல்லாத படங்கள் சில வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அவை விதி விலக்குகளே. 1975 க்கு பிறகு வெளிவந்த படங்களில் […]
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ புதுத் தொடுவான் விண்கப்பல் மெதுவாய் நெருங்கி புளுடோ நீர்ப்பனி எழுச்சி காட்டும். அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும், நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் காணாத புது விந்தைகள் காணும் ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! சூரிய மண்டலத்து வால்மீன் மந்தையின் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி நான் மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக்கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தன. குழந்தையாய் இருக்கும்போது நானும் போலியோ நோய் தீர்ந்து நன்றாக நடந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் நானும் விளையாட வேண்டும் என்றஆசையும் இருந்தது. இந்த பகிர்தல் உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல. ஒரு மாற்றுதிறன் படைத்த குழந்தையின் மனநிலை […]