பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்

This entry is part 24 of 54 in the series 4 செப்டம்பர் 2011

– தில்ஷான் எகொடவத்த தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை கடந்த வாரம் காவல்துறையில் கடமை புரிந்த சார்ஜன் ஒருவரின் உடம்பொன்று வந்தது. சுகவீனமுற்று இருந்திருக்கிறார். நீரிழிவும் இன்னும் அனேக வியாதிகளும் இருந்திருக்கின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்துத்தான் மரணம் சம்பவித்ததென உடலைக் கொண்டு வந்த உறவினர்கள் கூறினர். இருக்கலாம். காவல்துறை அதிகாரிகள் அதிகமாகக் கோபப்படுவார்கள் அல்லவா? கைகள் கட்டப்பட்ட மனிதர்களை லத்திக் கம்புகளால் தாக்குவதைத்தான் நாம் அடிக்கடி தொலைக்காட்சியில் காண்கிறோமே. அவ்வாறிருக்கையில் இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்குமா […]

அடுத்த பாடல்

This entry is part 23 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அடுத்து என்ன பாடல் ஒலிக்கும் என்ற மன நிலையுடன் உள்ள வானொலி ரசிகனைப்போல உனது அடுத்த வார்த்தைகளுக்கென ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் எழுதிய கவிதைப்புத்தகம் எங்கே கிடைக்கும் என்று எழுத்தாளனிடமே கேட்பது போல உன்னைப்பற்றிய கவிதை எங்கே கிடைக்கும் என உன்னிடமே கேட்கிறேன் பத்திரிக்கைகள் ஏதுவாயிருப்பினும் அவற்றின் தலையங்கங்கள் தனித்தமிழில் மட்டுமே வருவது போல கடிதங்கள் ஏதுவாயிருப்பினும் உனக்கென எழுதும்போது நானதில் காதல் மட்டுமே எழுதுகிறேன். என்னைச்சுற்றி பல மொழிகள் பேசப்படினும் என் எண்ணங்கள் தமிழில் மட்டுமே […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)

This entry is part 22 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சென்னை செல்லும்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திப்பது போல, பிரபல எழுத்தாளர்களைச சந்திப்பதும் ஆரம்ப காலத்தில் எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அத்தகைய சந்திப்புகள் பிறகு நட்பாகவும் நெருக்கமாகவும் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது. முதன்முதல் எனக்கு அமரர் – தமிழின் முதல் ஞானபீட விருதாளர் – திரு.அகிலனுடன் ஏற்பட்ட சந்திப்பு தற்செயலானது. 1957 வாக்கில், என் உறவினர் ஒருவரின் திருமணம் நடந்த ஒரு சிறு கிராமத்தில் வைத்து நிகழ்ந்தது அந்த சந்திப்பு. […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6

This entry is part 21 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நமது சகப் பிறவிகளுக்கு நாமிழைக்கும் கொடும் தீங்கு, அவரை வெறுப்பதில் இல்லை.  அறவே புறக்கணிப்பதில் உள்ளது !  அதுதான் மனித ஒருமைப்பாட்டுக்கு முக்கிய இடையூறாய் இருந்து வருகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (The Devil’s Disciple) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் […]

வலியது

This entry is part 20 of 54 in the series 4 செப்டம்பர் 2011

காற்றில் படபடக்கிறது காலண்டர் தாள்.. கை நடுங்குகிறதா, கிழித்தெடுக்கத் தயக்கமா- கடந்துவிட்ட நேற்றை எண்ணி நடுக்கமா !   கிழித்தெறி நேற்றை.. அழித்திடு நினைவில், அன்று பெற்ற அல்லலை.. நினைத்திடு நல்லதை.. நன்றாகிவிடும் இன்று !   நம்பிக்கை- தும்பிக்கையை விட வலியதல்லவா !   -செண்பக ஜெகதீசன்..

முகம்

This entry is part 19 of 54 in the series 4 செப்டம்பர் 2011

  உயரத்தில் பருந்து கண்கள் இரை மீது புத்தகத்தில் கிழிக்கப்பட்ட பக்கங்களில் என்ன ஒளிந்திருக்கும் நாட்கள் தான் வேறு வேறு மாற்றங்கள் எதுவுமில்லை நீர்க்குமிழி வாழ்க்கை இறைவன் வகுத்த நியதிப்படி விசேஷமான நாள் பரிசாக ஒரு பனித்துளி கோர முகம் ஒற்றைக் கண் பீதியூட்டுகிறது நிலவு காய்கிறது ஒரு குழந்தை இரவை அள்ளிப் பருகுகிறது பழைய புத்தகம் நடுவே மயிலிறகு விலைமதிப்பற்றதாய்.    

National Folklore Support Centre Newsletter September 2011

This entry is part 18 of 54 in the series 4 செப்டம்பர் 2011

NFSC, 508, Fifth Floor, “Kaveri Complex”, 96, Mahatma Gandhi Road, Nungambakkam, Chennai- 600034, Tamilnadu, India. Ph.:044 – 28229192, 044 – 42138410, 044 – 28212706   www.indianfolklore.org   Events Calendar: September 2, 2011 Marupakkam and NFSC jointly screenA short film about Killing by Krzysztof Kieslowski at 6:00 p.m at the Center. September 15, 2011 Presentation of the TATA […]

ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்

This entry is part 17 of 54 in the series 4 செப்டம்பர் 2011

திகார் சிறையில் அவரை அடைத்துவிட்டு உடனேயே தொடை நடுங்கியபடி மத்திய அரசு விடுதலை செய்த பிறகும் அன்னா ஹாசாரே சிறையை விட்டு வெளியேறாமல் தனது நிபந்தனைகளை முன்வைத்து அங்கேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அந்தக் காட்சி மட்டும் தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் அதன்பிறகு உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகு நிறைவு செய்யும் வரையிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு நிமிடத்தையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன. முதன் முதலாக பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி […]

மத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி

This entry is part 16 of 54 in the series 4 செப்டம்பர் 2011

“அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் வெற்றியாமே?!” டீ கடை பெஞ்சு முதல் பீசா கார்னர் வரை எல்லா இடங்களிலும் விவாதிக்கப் படும் முக்கிய விஷையங்களில் இது தலையாயது. ஊழலுக்கு எதிராக யாரேனும் போர் புரிய மாட்டார்களா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தது, இந்த ஊழல் ஒழிப்பு போராட்டத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளது. முதலாம் சுதந்திரப் போர், இன்றைய தலைமுறைக்கு மறக்க முடியாத, பார்க்கத் தவறிய ஒரு த்ரில்லர் படம் போன்றது. இன்றைய இளைஞர்கள், பெரும்பாலும் பழைய படங்களை கிண்டல் […]

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா

This entry is part 15 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை நேரம் : காலை 10 மணிக்கு (செப்டம்பர் 4,2011) தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி. சாந்தா வரதராஜன் வரவேற்புரை : தொலைப்பேசி மீரான் தலைமை தாங்கி நூல் வெளியீடுபவர் : ‘மாம்பலம்’ சந்திரசேகர், Chairman, Chandra Builders எழுத்தாளர்களுக்கு விருது வழங்குபவர் : திரு. சுகுமார், Properitor, Anush Furniture […]