2 ரூபவதியை கல்யாணம் செய்து கொண்டு நரசிம்ம ராஜா காகிநாடாவில் இருந்து கூட்டி வந்த போது, ராஜாவின் முதல் இரண்டு மனைவிகளும், அவரின் மகன்களும் அவள் மீது கொண்ட துவேஷத்திற்கு அளவே இல்லை. அந்த ராஜாவைத் தவிர மற்ற ராணிகளோ, ராஜாவின் மற்ற மகன்களோ அவளிடம் பேசுவதும் இல்லை. கிழட்டு ராஜாவின் ஆசை மனைவி என்று வேலைக்காரர்களுக்கும் இளக்காரம். இந்த உதாசீனத்தையும், தனிமையையும் போக்க, அவள் வெற்றிலை போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இதைப் […]
3 சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ இதுவரை நடத்தியது இல்லை. ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் செய்யறதா சும்மா சொல்லி, பூஜை செலவு, தட்சிணைங்கிற பேர்ல […]
4 ரூபவதியோட வாரிசுகளின் விலாசம் கிடைக்குமா என்று கேட்ட பரந்தாமனிடம், “ என்கிட்டே அந்த காகிநாடா விலாசம் இருக்குது.. எண்பது வருஷத்துக்கு முந்தினது.. அதை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்” என்றார் சுதாகர் ராஜா. “ நான் காகிநாடா போய் தேடிப் பார்க்கிறேன்.. போறதுக்கு பணம் மட்டும் கொடுங்க.. நான், அந்த வரைபடத்தை கண்டுபுடிச்சி எடுத்திட்டு வர்ரேன்..” என்றான் பரந்தாமன். “ என் கிட்ட ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருக்குது.. […]
தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அச்செயல் செம்மையாகச் செய்து முடிக்க முடியுமா? முடியாதா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள சகுனம் பார்த்தல் என்ற நம்பிக்கை இன்றளவும் பயன்பட்டு வருகின்றது. இது முற்காலத்தில் புறத்துறைகளுள் ஒன்றாக வைத்து எண்ணப்பட்டது. ஆநிரை கவரச் செல்பவர்கள் விரிச்சி கேட்டே தமது பயணத்தைத் தொடங்கினர். இச்செயலே பின்னர் சகுனமாக வளர்ச்சி பெற்றது. இச்சகுனம் நற்சகுனம், தீயசகுனம் […]
சேயோன் யாழ்வேந்தன் அவளிடம் பகிர்ந்துகொள்ளும் எந்த விஷயமும் அவளது மூன்று நெருங்கிய தோழிகளிடம் உடனே பகிரப்பட்டு விடும். பகீரதப் பிரயத்தனம் செய்தும் பிறரிடம் அவள் பகிரக்கூடாதவற்றை என்னால் சொல்லாமல் இருக்கமுடிவதில்லை, சொல்லாமல் மறைக்கவும் தெரிவதில்லை ‘யாரிடமும் சொல்லாதே’ என்று சொல்வதில் இருக்கிறது – மறக்காமல் சொல்லவேண்டும் என்ற அடிக்குறிப்பை அவள் மனதில் எழுதிவிடும் பேராபத்து! seyonyazhvaendhan@gmail.com
என் செல்வராஜ் சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காக தகவல்களை திரட்டும் போது தான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப் பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை […]
வேழம்னா ரெண்டு பொருள் உண்டுங்க; ஒண்ணு யானை; இன்னொண்ணு கரும்பு. பழைய தனிப்பாடல்ல ஒண்ணு வரும்; ஒரு பாணன் போயிப் பாடிட்டுப் பரிசு வாங்கிண்டு வருவான். அவன் மனைவி, “ நீ போயி என்னா வாங்கிண்டு வந்தே”ன்னு கேப்பா; அவன் யானைதான் வாங்கினு வந்திருப்பான்; ஆனா வேழம்னு பதில் சொல்வான்; ஒடனே அவ கரும்புன்னு நெனச்சுக்கிட்டு அப்படின்னா ஒடச்சித் தின்னும்பா; ஆனா இங்க வர்ற வேழம்றது ஒருவகையான புல்லுங்க. நாணல்னு சொல்லுவோம்ல; அது போல; உரையாசிரியர்லாம் […]
என்.துளசி அண்ணாமலை புதுவீடு கட்டி முடித்தாகிவிட்டது. இன்னும் சாயப்பூச்சு வேலைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அம்மாவின் நினைவு நாளன்று புதுமனைபுகு விழாவை நடத்த முடிவு செய்திருந்தான் முரளி. ஆனால், மாமியார், மாமனார் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதைக்கு அவர்கள்தானே வீட்டுக்குப் பெரியவர்கள். மனைவி வேறு ஒரு பக்கம் உம்மென்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள். இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, வண்ணப்பூச்சு வேலை செய்யும் ஆட்களை விரட்டிக் கொண்டிருந்தான். பகலெல்லாம் வீட்டைப்பற்றிய வேலைகளில் மூழ்கியிருந்தாலும், இரவில் படுத்திருக்கும்போது மட்டும் அம்மா, அப்பாவின் நினைவு அவனைப் […]
எஸ்.பால்ராஜ் ஓரு காலத்தில் ஆடி மாதம் என்றால் தமிழர்களுக்கு அமங்கலமான மாதம். விவசாயிகள் மட்டும் ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்கள். மங்கல காரியங்கள் எவையும் இந்த மாதத்தில் நடக்காது.அதனால் திருமணம் போன்ற விசேஷத்திற்கு உரிய வியாபாரங்கள் சிறப்பாக நடைபெறாது. குறிப்பாக, ஜவுளி வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இதோடு மட்டுமின்றி, சீர் கொடுக்க வேண்டிய பாத்திர பண்டங்களும் வியாபாரம் இருக்காது. புதிதாகத் திருமணம் ஆகியிருந்தால், மனைவி கணவனைத் தற்காலிகமாகப்பிரிந்து தனது அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவாள். […]
படைப்பிலக்கியத்தில் கவிதையின் தலைப்பைப்போலவே, கவிதைத் தொகுப்பிற்கும் அதன் தலைப்பும் நூல் வடிவமும் மிகவும் முக்கியம். பெண்ணொருத்தியின் வெளித்தோற்றம் முதற்பார்வையில் தரும் வியப்பும் மர்மமும் கவிதை அல்லது கவிதைத் தொகுப்பும் தரவேண்டும். ஒரு கவிதையின் அகவய விளைச்சலும் சௌந்தர்யமும் இரண்டாவது கட்டம். கவிதை அல்லது கவிதைத் தொகுப்பின் ‘Beaux arts’ என்ற அழகியல் இவ்விருகூறுகளையும் கருத்தில் கொண்டு இயங்குவது. பிரெஞ்சில் கவிஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் தமிழில் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதுபோல வரிசைகளில் இளம் கவிஞர்கள் […]